உள்ளடக்கத்துக்குச் செல்

விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள்
பீட்டா
உருவாக்கம்மார்ச்சு 1980; 44 ஆண்டுகளுக்கு முன்னர் (1980-03)
நிறுவனர்இங்க்ரிட் நியூகர்க், அலெக்ஸ் பச்சேகோ
வகைஐ.அ நாட்டின் 501(c)(3) பிரிவின்படியான தன்னார்வல அமைப்பு
நோக்கம்விலங்குரிமை
தலைமையகம்
உறுப்பினர்
3,000,000 (including supporters)[1]
வருவாய்
2014ஆம் ஆண்டில் $43 மில்லியன்[2]
ஊழியர்கள்
300
முழக்கம்"விலங்குகள் நாம் உண்பதற்கும் உடுத்துவதற்கும் சோதனைகள் நடத்தவும் மகிழ்ச்சி தரவும் எவ்விதத்திலும் துன்புறத்தப்படவும் உண்டானவை இல்லை."
வலைத்தளம்peta.org

விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் (People for the Ethical Treatment of Animals) அல்லது பீட்டா (PETA, /ˈptɑː/); அல்லது PeTA) ஐக்கிய அமெரிக்க நாட்டில் வர்ஜீனியா மாநிலத்து நோர்போக் நகரில் விலங்கு வதைகளைத் தடுக்குமாறு உருவான தன்னார்வல அமைப்பாகும்; இதன் பன்னாட்டுத் தலைவராக இங்க்ரிட் நியூகர்க் உள்ளார். இலாபநோக்கற்ற இவ்வமைப்பில் 300 ஊழியர்களும், 3 மில்லியன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் உள்ளனர்; உலகளவில் இத்துணை அளவிலான உரிமைக் குழு இதுவே ஆகும். இதன் முழக்கம் "விலங்குகள் நாம் உண்பதற்கும் உடுத்துவதற்கும் சோதனைகள் நடத்தவும் மகிழ்ச்சி தரவும் எவ்விதத்திலும் துன்புறுத்தப்படவும் உண்டானவை இல்லை" ஆகும்.[3]

மார்ச்சு 1980இல் நியூகர்க், அலெக்ஸ் பச்சேகோ ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த அமைப்பு 1981 கோடைகாலத்தில் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்தது; மேரிலாந்தின் சில்வர் ஸ்பிரிங்கில் நடத்தைசார் ஆய்வுக் கழகத்தில் 17 மகாக்கெ குரங்குகளை வைத்து நடத்தப்பட்ட சோதனைகளைக் குறித்த சில்வர் ஸ்பிரிங் குரங்குகள் வழக்கு என்ற வழக்கினால் பெரிதும் அறியப்பட்டது. இந்த வழக்கு பத்தாண்டுகள் தொடர்ந்து நடந்தது; ஐக்கிய இராச்சியத்தில் காவல்துறையால் விலங்குகள் ஆய்வகம் ஒன்று சோதனையிடப்பட்ட ஒரே நிகழ்வாகவும் அமைந்தது; 1985இல் விலங்குகள் நல்வாழ்வு சட்டம் இயற்றப்பட்டது. இதன் பின்னர் பீட்டா உலகளவில் அறியப்பட்ட அமைப்பாக மாறியது.[4] இன்று இது நான்கு முதன்மையான பிரச்சினைகளை முன்னெடுத்துப் போராடுகின்றது—தொழிற்சாலைப் பண்ணையம், விலங்கின மென்மயிர் பண்ணையம், விலங்குகள் சோதனை, மற்றும் மனமகிழ்ச்சிக்காக விலங்குகள் பயன்பாடு. தவிரவும் இந்த அமைப்பு மாமிசம், மீன் உண்ணுதல், நோய்ப்பூச்சிகளைக் கொல்லுதல், நாய்களைச் சங்கிலியிட்டு பின்புறம் வைத்தல், சேவல் சண்டை, நாய்ச் சண்டை, ஆட்டுச் சண்டை, காளைச் சண்டை போன்றவற்றை எதிர்த்தும் போராடுகின்றது.[5]

ஆங்காங் புதுப்பாங்கு வாரக் கொண்டாட்டங்களின்போது பீட்டா ஆசியா பசிபிக் குழுவினர் "பிறந்த மேனியராய்" போராட்டம் நடத்திய காட்சி

விலங்குகள் உரிமை இயக்கத்தின் உள்ளேயும் வெளியேயும் இந்த அமைப்பிற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. நியூகிர்க்கும் பாச்சேகோவும் ஐக்கிய அமெரிக்காவில் விலங்குரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய போதிலும் தீவிரமாக முன்னெடுக்கவில்லை எனச் சிலர் கருதுகின்றனர். இவர்கள், இது விலங்குகள் நல்வாழ்வு குழுவாகச் செயல்படுகின்றதே தவிர விலங்குரிமை குழுவாகச் செயல்படவில்லை எனக் குறை கூறுகின்றனர்.[6] இதற்கு 2001இல் பதிலிறுத்த நியூகிர்க் பீட்டா விலங்குரிமை என்ற இலக்கை முன்வைத்து பரிசு-தண்டனை என்ற விதத்திலே இடைக்காலத்தில் நகர்வதாகக் குறிப்பிட்டார்.[7] பீட்டாவின் விலங்கு மென்மயிர் ஆடை எதிர்ப்பு போராட்டங்களில் மிகக் குறைந்த ஆடைகளில் பெண் போராளிகள் பங்கேற்பதற்குப் பெண்ணியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தவிரவும் ஊடகப் பார்வைக்காக நடத்தப்படும் பரபரப்பு நிகழ்வுகளால் உண்மையான விலங்குரிமைகள் முக்கியமற்றதாக ஆக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. நியூகிர்க் மறுமொழிகையில், பீட்டா வெற்றிபெற "ஊடக நெறி பிறழ்ந்தவர்களாக" இருப்பது அவசியம் என்றார். "இது எங்கள் கடமை. நாங்கள் அமைதியாக இருந்து அலைகளை உருவாக்காவிட்டால் பயனில்லை" என்றார்.[8]

பீட்டாவின் முதன்மை வலைத்தளம் முதிர் அகவையர்களுக்காகவும் காய்கனி மட்டுமே உண்போருக்குமானது. தாவர உணவு முறை, கண்டிப்பான தாவர உணவுமுறை அல்லது அவற்றிற்கு முயலும் விடலைப் பருவத்தினருக்கு PETA2 என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்சான்றுகள்

[தொகு]
 1. "About PETA". PETA.
 2. Charity Navigator|accessed November 4, 2015.
 3. உலகின் மிகப் பெரும் விலங்குரிமை குழு என்ற இதன் கோரலுக்கும் குவியத்திற்கும், காண்க "PETA's mission statement", PETA, accessed May 1, 2013 *ஊழியர்களின் எண்ணிக்கைக்கு, காண்க கால்கின், மாத்யூ. ஐ யாம் அன் அனிமல்: இங்கிரிடு நியூகிர்க் மற்றும் பீட்டாவின் கதை"]], எச்பிஓ, 2007.
 4. Schwartz, Jeffrey M. and Begley, Sharon. The Mind and the Brain: Neuroplasticity and the Power of Mental Force, Regan Books, 2002, p. 161ff.
  • Pacheco, Alex and Francione, Anna. The Silver Spring Monkeys, in Peter Singer (ed.) In Defense of Animals, Basil Blackwell 1985, pp. 135–147.
 5. "PETA's mission statement", PETA, accessed July 3, 2010.
 6. For Newkirk and Pacheco being the leading exporters of AR, see Garner, Robert. Animals, politics, and morality. Manchester University Press, 1993; this edition 2004, p. 70. *For Francione's criticism, see Francione, Gary. Rain without Thunder: The Ideology of the Animal Rights Movement. Temple University Press, 1996, pp. 67–77.
 7. Brandt, Peter. "PETA's Ingrid Newkirk" பரணிடப்பட்டது 2011-02-01 at the வந்தவழி இயந்திரம், Salon, April 30, 2001. The full quote:

  "What I say to myself all the time is that we have our heads in the clouds looking for Utopia, but we have our feet firmly planted on the ground dealing with reality. We make no bones about the fact that we want an end to all cruelty to animals. But I think the meat industry and the leather industry and the experimenters understand, especially if we're fighting them, that we will back off if they move society and their industry a step forward. We're not going to stop everything overnight, so while we work for the ideal we certainly wish to provide the carrot-and-stick incentives to move along toward that goal.

  "Animals are going to die by the millions today in all sorts of ugly ways for all sorts of ridiculous, insupportable reasons. If one animal who is lying in a battery egg farm cage could have the extra room to stretch her wing today because of something you've done, I think she would choose to have that happen."
 8. For the feminist criticism, see Adams, Carole J. Neither Man nor Beast: Feminism and the Defense of Animals. Continuum International Publishing Group, 1995, pp. 135, 228. Also see Garner, Robert. The political theory of animal rights. Manchester University Press, 2005, p. 144.

மேலும் அறிய

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]