உள்ளடக்கத்துக்குச் செல்

பா. வளர்மதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பா. வளர்மதி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1985–1989
முன்னையவர்டி. கே. கபாலி
பின்னவர்என். கணபதி
தொகுதிமயிலாப்பூர்
பதவியில்
2011–2016
முன்னையவர்மு. க. ஸ்டாலின்
பின்னவர்கு. க. செல்வம்
தொகுதிஆயிரம் விளக்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1957-10-02)2 அக்டோபர் 1957
ஏர்குடி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
வாழிடம்கருணாநிதி நகர், சென்னை
தொழில்விவசாயி

பா. வளர்மதி (B. Valarmathi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர். இவர் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.

அரசியல்

[தொகு]

வளர்மதி, 1984ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] பின்னர் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] இவர் தமிழக அரசின் சமூகநலத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.[4] தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக தமிழக அரசால் 8-1-2017 அன்று நியமிக்கப்பட்டார்.[சான்று தேவை] இவர் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 661-663.{{cite book}}: CS1 maint: year (link)
  2. "தொகுதி ஓர் அறிமுகம்: ஆயிரம் விளக்கு". தினமணி. https://www.dinamani.com/all-sections/tn-election-2016/2016/Apr/08/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5-1310294.html. பார்த்த நாள்: 4 August 2025. 
  3. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுயவிபரக்குறிப்பு". தமிழக அரசு சுயவிபரகுறிப்பு.
  4. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. Archived from the original on 2011-08-25. Retrieved 2011-12-10.
  5. வளர்மதி, கோகுல இந்திரா தோல்வி[தொடர்பிழந்த இணைப்பு] தி இந்து தமிழ் 20 மே 2016


"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._வளர்மதி&oldid=4389925" இலிருந்து மீள்விக்கப்பட்டது