எஸ். இராகவானந்தம்
எஸ். இராகவானந்தம் | |
---|---|
பொதுச் செயலாளர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | |
பதவியில் 14 மார்ச் 1985 – 16 அக்டோபர் 1986 | |
முன்னவர் | ப. உ. சண்முகம் |
பின்வந்தவர் | ம. கோ. இராமச்சந்திரன் |
எஸ். இராகவானந்தம் (1917–1999) என்பவர் இந்திய அரசியல்வாதியும், அஇஅதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளாரும் ஆவார். 1977, 1980இல் அமைத்த ம. கோ. இராமச்சந்திரனின் அமைச்சரவைகளில் தொழில்துறை அமைச்சராக இருந்தார்.[1][2] ம.கோ.ராவிற்கு அடுத்த மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர். ஆரம்ப காலத்தில் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ம.கோ.ரா, முதல்வரானதும் பொதுச்செயலாளர் பதவியை நாவலர் நெடுஞ்செழியன், ப. உ. சண்முகம் ஆகியோருக்கு வழங்கினார். இவர்களுக்கு அடுத்து இவர்களின் சகாவான ராகவானந்திற்கு பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார். இவர் அந்த பதவியில் 1985-1986 வரை இருந்தார். இவர் அதிமுக ஜா அணியின் துணை பொதுச்செயாலாளராகவும் பதவி ஆற்றினார்.1972ல் திமுக ம.கோ.ராவை நீக்கியபோது அவர் தொடங்கிய அதிமுகவில் சேர்ந்து விட்டார் ராகவானந்தம். அந்தக் கோபத்தில் தனது எம்.எல்.சி. பதவியை இவர் ராஜினாமா செய்து விட்டதாக ஒரு கடிதம் அன்றைய மேலவைத் தலைவரிடம் தரப்பட்டது. ஆனால் தான் விலகல் கடிதத்தை எழுதவில்லை என்று ராகவானந்தம் மறுத்தார்.