இராம. வீரப்பன்
இராம. வீரப்பன் | |
|---|---|
![]() | |
| தகவல் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் | |
| பதவியில் 30 சூன் 1977 – 17 பெப்ரவரி 1980 | |
| பதவியில் 9 சூன் 1980 – 9 பெப்ரவரி 1985 | |
| உள்ளாட்சித் துறை அமைச்சர் | |
| பதவியில் 10 பெப்ரவரி 1985 – 24 திசம்பர் 1987 | |
| பதவியில் 24 திசம்பர் 1987 – 7 சனவரி 1988 | |
| பதவியில் 7 சனவரி 1988 – 30 சனவரி 1988 | |
| கல்வி மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் | |
| பதவியில் 24 சூன் 1991 – 12 மே 1996 | |
| அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணைப் பொதுச் செயலாளர் | |
| பதவியில் 1989–1993 | |
| துணை | இரா. நெடுஞ்செழியன் |
| முன்னையவர் | எவருமில்லை |
| பின்னவர் | எவருமில்லை |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 9 செப்டம்பர் 1926 வல்லாதிரகோட்டை, புதுக்கோட்டை அரசாட்சி, இந்தியா (தற்போது புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு) |
| இறப்பு | 9 ஏப்ரல் 2024 (அகவை 97) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| அரசியல் கட்சி | திமுக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் கழகம் |
| துணைவர் | ராசம்மாள் |
| பிள்ளைகள் | 6 |
| பெற்றோர் | இராமசாமி, தெய்வானை |
| பணி | அரசியல்வாதி, தயாரிப்பாளர் |
ஆர்.எம்.வீ. என அறியப்படும் இராம. வீரப்பன் (R. M. Veerappan, 9 செப்டம்பர் 1926 – 9 ஏப்ரல் 2024), ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதியும் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார்.[1] தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சராகப் பணியாற்றியிருக்கிறார்.
இளமைக்காலம்
[தொகு]இராம. வீரப்பன், புதுக்கோட்டை நகருக்கு அருகிலுள்ள வல்லாதிரகோட்டை எனும் சிற்றூரில் தெய்வானை-இராமசாமி இணையருக்கு மகனாக 9 செப்டம்பர் 1926 அன்று பிறந்தார். மதுரை திருப்பரங்குன்றத்தில் 12-3-1956 அன்று, இராம. வீரப்பனுக்கும் இராஜம்மாள் என்பவருக்கும் கா. ந. அண்ணாதுரை தலைமையில் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் என். எஸ். கிருஷ்ணன். எம். ஜி. சக்ரபாணி. ம. கோ. இராமச்சந்திரன். எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.[2]
திரைப்பட வாழ்க்கை
[தொகு]எம்.ஜி.ஆர் 1953-இல் "எம்.ஜி.ஆர் நாடக மன்றம்", "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்கிற இரண்டு திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களைத் தொடங்கினார். இந்த இரு நிறுவனங்களுக்கும் இராம. வீரப்பனை நிர்வாக பொறுப்பாளராக நியமித்தார். இராம. வீரப்பன் 1963-இல் "சத்யா மூவிஸ்" என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.[3] தென்னிந்திய நடிகர்சங்க செயற்குழு உறுப்பினராக 1956-ஆம் ஆண்டில் இருந்தார்.[2]
அரசியல்
[தொகு]இராம. வீரப்பன், 1977 - 1986 வரை இருமுறை தமிழ்நாடு மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும், இருமுறை தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[4] 1986 இடைத்தேர்தலில், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், 1991[5] இடைத்தேர்தலில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.ஜி.ஆர், ஜெ. ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
சத்யா மூவிஸ் தயாரித்த பாட்ஷா பட வெள்ளி விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், அன்றைய தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியின் கீழ் சட்டம் ஒழுங்குச் சீர்குலைவுகள் பற்றி கருத்து தெரிவித்தார். அப்போது ஜெயலலிதா அமைச்சரவையில் இராம. வீரப்பன் உணவு அமைச்சராகப் பதவி வகித்துவந்த நிலையில், ரஜினிகாந்தின் பேச்சுக்குப் பின் திடீரென்று அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். சில நாட்களில், அ.தி.மு.க.வில் இருந்தும் நீக்கப்பட்டார்.[6] இதன் காரணமாக, 1995-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி, இராம.வீரப்பன் எம்.ஜி.ஆர். கழகம் என்கிற பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார்.
இறப்பு
[தொகு]ஆர். எம். வீரப்பன், 2024 ஏப்ரல் 9 திங்கட்கிழமை அன்று சென்னையில் தனது 97-ஆவது அகவையில் காலமானார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "செய்தித் தெறிப்புகள் @ ஏப்.9: ஆர்.எம்.வீரப்பனுக்கு புகழஞ்சலி முதல் 'ராமர்' அரசியல் வரை". Hindu Tamil Thisai. 2024-04-09. Retrieved 2025-07-15.
- ↑ 2.0 2.1 திராவிடநாடு (இதழ்) நாள்:1-4-1956, பக்கம் 11
- ↑ இராம. வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று நூல் ("ஆர்.எம்.வீ. ஒரு தொண்டர்)
- ↑ http://eci.nic.in/eci_main/ByeElection/Bye-ele-results%2052-95.xls
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 486-488.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ http://rajinifans.com/history/part95.php
- ↑ "RM Veerappan passes away". News Today. 9 April 2024. https://newstodaynet.com/2024/04/09/rm-veerappan-passes-away/.
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்
- தமிழக முன்னாள் அமைச்சர்கள்
- தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்
- 1926 பிறப்புகள்
- 2024 இறப்புகள்
- புதுக்கோட்டை மாவட்ட மக்கள்
- தமிழ்நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- தமிழ்நாடு கல்வி அமைச்சர்கள்
- 8 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 10 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
