மீ. கல்யாணசுந்தரம்
தோற்றம்
மீனாட்சிசுந்தரம் கல்யாணசுந்தரம் | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை) | |
| பதவியில் 1980–1986 | |
| பிரதமர் | இந்திரா காந்தி ராஜீவ் காந்தி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 20 அக்டோபர் 1909 பிரித்தானிய இந்தியா, சென்னை மாகாணம், திருச்சினாப்பள்ளி மாவட்டம் (தற்போதைய கரூர் மாவட்டப் பகுதி), குளித்தலை |
| இறப்பு | 20 சூன் 1988 (அகவை 78) புது தில்லி |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
| துணைவர் | கே. லோகாம்பாள் |
| தொழில் | அரசியல்வாதி |
மீனாட்சிசுந்தரம் கல்யாணசுந்தரம் (அக்டோபர் 20, 1909 - ஜூலை 27, 1988) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளி வடக்கு சட்டமன்றத் தொகுதியில் இருந்து 1952 சட்டமன்றத் தேர்தலிலும், திருச்சிராப்பள்ளி-II சட்டமன்றத் தொகுதியில் இருந்து 1962 தேர்தலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்துக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2][3] மேலும் கல்யாணசுந்தரம் 1971 முதல் 1976 வரைக்கும், 1977 முதல் 1980 வரைக்கும் மக்களவை உறுப்பினராக இருமுறையும், 1980 முதல் 1986 வரையான காலகட்டத்தில் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். கல்யாணசுந்தரம் கே. லோகாம்பாளை மணந்தார். ஐக்கிய கம்யூனிஸ்ட் என்ற கட்சியைத் தொடங்கினார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]பகுப்புகள்:
- 1909 பிறப்புகள்
- 1988 இறப்புகள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 5வது மக்களவை உறுப்பினர்கள்
- 6வது மக்களவை உறுப்பினர்கள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்
- 3 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 2 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அரசியல்வாதிகள்