மகாராஷ்டிரா மாநிலங்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் மகாராஷ்டிரம் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 19 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

உறுப்பினர்கள் பட்டியல்[தொகு]

தற்போது மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

வ.எண். உறுப்பினர் பெயர் அரசியல் கட்சி பதவிக்காலம்
1 கோவிந்தராவ் வாமன்ராவ் அதிக் தேசியவாத காங்கிரசு கட்சி 04-08-2009 முதல் 02-04-2012 வரை
2 பலவந்த் (எ) பால் அப்தே பாரதிய ஜனதா கட்சி 03-04-2006 முதல் 02-04-2012 வரை
3 பிரித்விராஜ் சவான் இந்திய தேசிய காங்கிரஸ் 03-04-2008 முதல் 02-04-2014 வரை
4 விஜய் ஜவஹர்லால் தர்டா இந்திய தேசிய காங்கிரஸ் 05-07-2010 முதல் 04-07-2016 வரை
5 முரளி தியோரா இந்திய தேசிய காங்கிரஸ் 03-04-2008 முதல் 02-04-2014 வரை
6 விலாஸ்ராவ் தகோஜிராவ் தேஷ்முக் இந்திய தேசிய காங்கிரஸ் 04-08-2009 முதல் 02-04-2012 வரை
7 ராஜ்குமார் தூத் சிவசேனா 03-04-2008 முதல் 02-04-2014 வரை
8 பியூஸ் வேதபிரகாஷ் கோயல் பாரதிய ஜனதா கட்சி 05-07-2010 முதல் 04-07-2016 வரை
9 ஐஸ்வர்லால் சங்கர்லால் ஜெயின் தேசியவாத காங்கிரசு கட்சி 05-07-2010 முதல் 04-07-2016 வரை
10 பிரகாஷ் ஜாவடேகர் பாரதிய ஜனதா கட்சி 03-04-2008 முதல் 02-04-2014 வரை
11 டாக்டர் மனோகர் ஜோசி சிவசேனா 03-04-2006 முதல் 02-04-2012 வரை
12 ரஞ்சித்சிங் விஜய்சிங் மோஹித் தேசியவாத காங்கிரசு கட்சி 04-08-2009 முதல் 02-04-2012 வரை
13 அவினாஷ் பாண்டே இந்திய தேசிய காங்கிரஸ் 05-07-2010 முதல் 04-07-2016 வரை
14 பாரத்குமார் ரவுட் சிவசேனா 03-04-2008 முதல் 02-04-2014 வரை
15 சஞ்சய் ரவுட் சிவசேனா 05-07-2010 முதல் 04-07-2016 வரை
16 ராஜீவ் சுக்லா இந்திய தேசிய காங்கிரஸ் 03-04-2006 முதல் 02-04-2012 வரை
17 தாரீக் அன்வர் தேசியவாத காங்கிரசு கட்சி 05-07-2010 முதல் 04-07-2016 வரை
18 ஒய்.பி.திரிவேது தேசியவாத காங்கிரசு கட்சி 03-04-2008 முதல் 02-04-2014 வரை
19 டாக்டர் ஜனார்த்தன் வாக்மேர் தேசியவாத காங்கிரசு கட்சி 03-04-2008 முதல் 02-04-2014 வரை
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

இதையும் பார்க்க[தொகு]