ஆர். தர்மர்
ஆர். தர்மர் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சூன் 2022 | |
தொகுதி | தமிழ்நாடு |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
ஆர். தர்மர் (R. Dharmar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவையின் உறுப்பினரும் ஆவார். இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், புளியங்குடி கிராமம் இவருடைய சொந்த ஊராகும். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் மறவர் இனத்தைச் சேர்ந்தவராவார்.[1][2][3]
1987-ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த தர்மர் கிளைச் செயலாளர், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் பதவிகளை வகித்துள்ளார். மேலும், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர், முதுகுளத்தூர் ஒன்றியக்குழு துணைத் தலைவர், 4 முறை ஒன்றிய கவுன்சிலர், 2 முறை நிலவள வங்கித் தலைவர் என பதவிகள் வகித்துள்ளார். தொடர்ந்து 12 ஆண்டுகளாக முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளராகவும் 2020 ஆம் ஆண்டு முதல் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். 2022-ஆம் ஆண்டில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chidambaram and five others to be elected unopposed to RS". டெக்கன் ஹெரால்டு. 1 June 2022. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
- ↑ "Shanmugam, Dharmar are AIADMK RS candidates". Julie Mariappan. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 26 May 2022. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
- ↑ "AIADMK names Shanmugham, Dharmar as candidates for RS bypolls". DT next. 25 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2 June 2022.
- ↑ அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் - யார் இந்த ஆர்.தர்மர்?
- ↑ யார் இந்த தர்மர்? அதிமுக ராஜ்யசபா எம்.பி வாய்ப்பு எப்படி கிடைத்தது?