மாநிலங்களவைத் தேர்தல்கள் 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2015

← 2014 பல்வேறு நாட்கள் (2015-ல்) 2016 →

13 இடங்கள் மாநிலங்களவை
  First party Second party
 
தலைவர் குலாம் நபி ஆசாத் அருண் ஜெட்லி
கட்சி காங்கிரசு பா.ஜ.க
கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி
தலைவரான
ஆண்டு
8 சூன் 2014 3 சூன் 2009
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
சம்மு காசுமீர் குசராத்து
முன்பிருந்த தொகுதிகள் 69 45
வென்ற
தொகுதிகள்
66 48
மாற்றம் 3 3

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2015 (2015 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவைக்கு எட்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களாகும். மேலும் ஐந்து இடைத்தேர்தல்களும் நடத்தப்பட்டன. சம்மு காசுமீர்,[1] கேரளா,[2] மற்றும் பாண்டிச்சேரி ஒன்றிய பிரதேசங்களில் இடங்களை நிரப்ப வழக்கமான தேர்தல்கள் நடத்தப்பட்டன.[3]

சம்மு காசுமீர்[தொகு]

சம்மு காசுமீரில் 7 பிப்ரவரி 2015 [1] தேர்தல் நடைபெற்றது.[1]

எண் முந்தைய நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி குறிப்பு
1 குலாம் நபி ஆசாத் இந்திய தேசிய காங்கிரசு குலாம் நபி ஆசாத் இந்திய தேசிய காங்கிரசு [4]
2 சைபுதீன் சோசு ஷம்ஷீர் சிங் மன்ஹாசு பாரதிய ஜனதா கட்சி
3 ஜிஎன் ரத்தன்புரி ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு பயாசு அகமது மிர் சம்மு காசுமீர் மக்களின் சனநாயகக் கட்சி
4 முகமது ஷஃபி நசீர் அகமது லாவே

கேரளா[தொகு]

கேரளாவில் 16 ஏப்ரல் 2015[2] தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், தேர்தல் ஏப்ரல் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.[5]

எண் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி குறிப்பு
1 எம். பி. அச்சுதன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கே.கே.ராகேஷ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [6]
2 பி ராஜீவ் பிவி அப்துல் வஹாப் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
3 வயலார் ரவி இந்திய தேசிய காங்கிரஸ் வயலார் ரவி இந்திய தேசிய காங்கிரஸ்

பாண்டிச்சேரி[தொகு]

பாண்டிச்சேரியில் 28 செப்டம்பர் 2015 அன்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.[3]

எண் முந்தைய நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி
1 பி.கண்ணன் இந்திய தேசிய காங்கிரசு என் கோகுலகிருஷ்ணன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

இடைத்தேர்தல்[தொகு]

கீழ்க்கண்ட இடைத்தேர்தல்களும் 2015ல் நடத்தப்பட்டன.

  • மகாராட்டிராவை பிரதிநிதித்துவப்படுத்திய முரளி தியோராவின் மரணம், மேற்கு வங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்ரீஞ்சாய் போஸ் பதவி விலகல் மற்றும் உத்தரகாண்டிலிருந்து மனோரமா டோப்ரியால் சர்மாவின் மரணம் ஆகியவற்றால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப மார்ச் 20 அன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்று புதிய உறுப்பினர்கள் 2015 மார்ச் 14 அன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். காலியாக இருந்த அமர் ஷங்கர் சேபிள் பதவிக்காலம் ஏப்ரல் 2, 2020 வரையிலும், டோலா சென் 18 ஆகத்து 2017 வரையிலும், ராஜ் பப்பர் 25 நவம்பர் 2020 வரையிலும் பதவிக்காலத்திலிருந்தனர்.
  • சார்க்கண்ட் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய கன்வர் தீப் சிங் பதவி விலகியதால் ஏற்பட்ட காலியிடத்திற்கு சூலை 2-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பாஜகவின் எம்.ஜே. அக்பர் ஜே. எம். எம்-ன் ஹாஜி உசைன் அன்சாரியை தோற்கடித்துத் தேர்தலில் வெற்றி பெற்று சூன் 29, 2016 வரை பதவி வகித்தார்.
  • ஒடிசாவை பிரதிநிதித்துவப்படுத்திய கல்பதரு தாசு மரணமடைந்ததால் ஏற்பட்ட காலியிடத்திற்குத் திசம்பர் 14-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. நரேந்திர குமார் சுவைன் 7 திசம்பர் 2015அன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் 2 ஏப்ரல் 2020 வரை இருந்தது.
எண் மாநிலம் முந்தைய உறுப்பினர் கட்சி குறிப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி பார்ட்டி குறிப்பு
1 மகாராட்டிரா முரளி தியோரா காங்கிரசு [7] அமர் சங்கர் சேபிள் பா.ஜ.க
2 உத்தரகாண்ட் மனோரமா டோப்ரியால் சர்மா காங்கிரசு ராஜ் பப்பர் காங்கிரஸ்
3 மேற்கு வங்காளம் ஸ்ரீஞ்சாய் போஸ் திரிணாமுல் காங்கிரஸ் டோலா சென் திரிணாமுல் காங்கிரஸ்
4 சார்கண்ட் கன்வர் தீப் சிங் ஜே. மு. மு. [8] எம்.ஜே.அக்பர் பா.ஜ.க [9]
5 ஒடிசா கல்பதரு தாசு பிஜூ ஜனதா தளம் [10] நரேந்திர குமார் ஸ்வைன் BJD

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Biennial elections to the Council of States from the State of Jammu and Kashmir" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2015-05-01.
  2. 2.0 2.1 "Biennial elections to the Council of States from Kerala" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2016-05-17.
  3. 3.0 3.1 "Biennial elections to the Council of States (Rajya Sabha) from the Union Territory of Pondicherry" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2016-05-17.
  4. "Rajya Sabha Polls in Jammu and Kashmir: BJP Opens Account, PDP Wins Two". என்டிடிவி. 7 February 2015. http://www.ndtv.com/india-news/rajya-sabha-polls-in-jammu-and-kashmir-bjp-opens-account-pdp-wins-two-737782. 
  5. "Archived copy" (PDF). eci.nic.in. Archived from the original (PDF) on 18 May 2016. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. "No surprises in Kerala Rajya Sabha election". 21 April 2015. http://www.dailypioneer.com/nation/no-surprises-in-kerala-rajya-sabha-election.html. 
  7. "Archived copy" (PDF). eci.nic.in. Archived from the original (PDF) on 24 April 2015. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  8. "Archived copy" (PDF). eci.nic.in. Archived from the original (PDF) on 17 May 2016. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  9. "MJ Akbar Wins Rajya Sabha By-Poll from Jharkhand". NDTV.com. 2 July 2015.
  10. "Archived copy" (PDF). eci.nic.in. Archived from the original (PDF) on 18 May 2016. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)