புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர்கள் (List of Rajya Sabha members from Puducherry) இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்யசபா என அழைக்கப்படுகின்ற அவையில் புதுச்சேரி மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஒருவர். புதுச்சேரியிலிருந்து 1964ஆம் ஆண்டு முதல் தேர்ந்தெடுக்கப்படும் இவரது பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.[1]

உறுப்பினர்கள் பட்டியல்[தொகு]

தற்போது புதுச்சேரியிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினராக இருப்பவர், அவர் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

உறுப்பினர் கட்சி பதவி-முதல் பதவி-வரை காலம்
எஸ். செல்வகணபதி பாஜக 07-அக்டோபர்-2021 06-அக்டோபர்-2027 1
என். கோகுலக்கிருஷ்ணன் அதிமுக 07-அக்டோபர்-2015 06-அக்டோபர்-2021 1
பி. கண்ணன் இதேகா 07-அக்டோபர்-2009 06-அக்டோபர்-2015 1
வே. நாராயணசாமி இதேகா 07-அக்டோபர்-2003 06-அக்டோபர்-2009 3
சி. சி. திருநாவுக்கரசு திமுக 07-அக்டோபர்-1997 06-அக்டோபர்-2003 1
வே. நாராயணசாமி இதேகா 05-ஆகத்து-1991 04-ஆகத்து-1997 2
வே. நாராயணசாமி இதேகா 05-ஆகத்து-1985 04-ஆகத்து-1991 1
வி. பி. எம். சாமி அதிமுக 28-சூலை-1977 27-சூலை-1983 1
எசு. சிவப்பிரகாசம் திமுக 07-ஆகத்து-1969 06-ஆகத்து-1975 1
பி. ஆப்ரகாம் இதேகா 07-ஆகத்து-1963 06-ஆகத்து-1969 1
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

இதையும் பார்க்க[தொகு]

  1. Rajya Sabha At Work (Second ). New Delhi: Rajya Sabha Secretariat. October 2006. பக். 24. http://rajyasabha.nic.in/rsnew/rsat_work/main_rsatwork.asp. பார்த்த நாள்: 20 October 2015.