மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{body}}} மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்
Emblem of India.svg
Emblem of India
Shri Mallikarjun Kharge takes over the charge of Union Minister for Railways, in New Delhi on June 19, 2013 (cropped).jpg
தற்போது
மல்லிகார்ஜுன் கார்கே

17 டிசம்பர் 2022 முதல்
வாழுமிடம்புது தில்லி
பதவிக் காலம்5 ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்சியாம் நந்தன் பிரசாத் மிசுரா (1969–1971)
ஊதியம்3,30,000 (US$4,300)
(கூடுதல் சலுகைகள்) /மாதம்
இணையதளம்rajyasabha.nic.in

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் (Leader of the Opposition in Rajya Sabha- IAST: ராஜ்ய சபா Rājya Sabhā ke Vipakṣa ke Netā ) என்பவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியை வழிநடத்தும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆவார். இவர் ஆட்சியில் இல்லாத மாநிலங்களவையில் உள்ள மிகப்பெரிய அரசியல் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஆவார்.

வரலாறு[தொகு]

மாநிலங்களவையில் 1969 வரை, எதிர்க்கட்சித் தலைவர் பதவி நடைமுறையில் மட்டுமே இருந்தது மற்றும் முறையான அங்கீகாரம், தகுதி அல்லது சிறப்புரிமை எதுவும் இல்லை. பின்னர், எதிர்க்கட்சித் தலைவருக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் சட்டம் 1977 மூலம் நீட்டிக்கப்பட்டது. அப்போதிலிருந்து, மாநிலங்களவை தலைவர் மூன்று நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும், அதாவது,

 1. இவர் மாநிலங்களைவை உறுப்பினராக இருக்க வேண்டும்
 2. மிகப் பெரிய எண்ணிக்கை பலம் (10% உறுப்பினர்) கொண்ட அரசாங்கத்திற்கு எதிரான கட்சி மற்றும்
 3. மாநிலங்களவைத் தலைவரால் அங்கீகரிக்கப்பட வேண்டும்

திசம்பர் 1969-ல், காங்கிரசு கட்சி பாராளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. இதன் தலைவராக சியாம் நந்தன் மிசுரா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். சியாம் நந்தன் பிரசாத் மிசுரா பதவிக் காலம் முடித்த பின்னர் எம். எஸ். குருபாதசுவாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், குருபாதசாமி நியமனம் குறித்து முறையான அறிவிப்பு ஏதுவுமின்றி பதவி வகித்தார்.

செயல் மற்றும் பொறுப்புகள்[தொகு]

எதிர்க்கட்சித் தலைவர் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக உருவாக்கப்பட்ட அரசாங்கக் கொள்கைகளை அலசிப் பார்க்கிறார். இதன் மீது தேவை என்றால் விவாதத்தைக் கோருவார். இத்தகைய கொள்கை மீதான விவாதங்களை ஆளும் கட்சி தவிர்க்க முயன்றால் அரசாங்கத்தை விமர்சிக்கிறார். தேசியப் பாதுகாப்புக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும்போது, நாட்டின் வெளிநாட்டு உறவுகள் மற்றும் வர்த்தகம் குறித்தும் விவாதிக்க வழிவகுக்கின்றார்.[1][2]

சலுகைகள் மற்றும் சம்பளம்[தொகு]

எதிர்க்கட்சித் தலைவர் அரசின் கொள்கைகளிலும், ஆளும் கட்சியால் செயல்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கின்றனர். சில நேரங்களில், எதிர்க்கட்சித் தலைவர்கள் நாட்டின் தேசியப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து அரசிடம் கேள்வி எழுப்புகின்றனர்.[3] 1977ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கென தனிச் சட்டம் இயற்றிய பிறகு, சம்பளம் அதிகரிக்கப்பட்டது.[4]

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர்கள் பட்டியல்[தொகு]

பின்வரும் உறுப்பினர்கள் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்தனர்.

எண் படம் பெயர் பதவிக்காலம்[5] பிரதமர் கட்சி
காலியிடம் 13 மே 1952 17 திசம்பர் 1969
1 ஷியாம் நந்தன் பிரசாத் மிஸ்ரா 18 திசம்பர் 1969 11 மார்ச் 1971 இந்திரா காந்தி நிறுவன காங்கிரசு
2 எம். எஸ். குருபாதசாமி 24 மார்ச் 1971 2 ஏப்ரல் 1972
காலியிடம் 2 ஏப்ரல் 1972 30 மார்ச் 1977
3 No image available.svg கமலாபதி திரிபாதி 30 மார்ச் 1977 15 பிப்ரவரி 1978 மொரார்ஜி தேசாய் இந்திய தேசிய காங்கிரசு
4 No image available.svg போலா பாஸ்வான் சாசுதிரி 24 பிப்ரவரி 1978 23 மார்ச் 1978
(3) No image available.svg கமலாபதி திரிபாதி 23 மார்ச் 1978 8 சனவரி 1980 மொரார்ஜி தேசாய்

சரண் சிங்
5 Lkadvani.jpg லால் கிருஷ்ண அத்வானி 21 சனவரி 1980 7 ஏப்ரல் 1980 இந்திரா காந்தி ஜனதா கட்சி
காலியிடம் 7 ஏப்ரல் 1980 18 திசம்பர் 1989 இந்திரா காந்தி

இராஜீவ் காந்தி
No Official Opposition
6 பி.சிவ் சங்கர் 18 திசம்பர் 1989 2 சனவரி 1991 வி. பி. சிங் இந்திய தேசிய காங்கிரசு
(2) எம். எஸ். குருபாதசாமி 28 சூன் 1991 21 சூலை 1991 பி. வி. நரசிம்ம ராவ் ஜனதா தளம்
7 Jaipal Sudini Reddy - Kolkata 2004-11-10 03212 Cropped.jpg ஜெயபால் ரெட்டி 22 சூலை 1991 29 சூன் 1992
8 சிக்கந்தர் பக்த் 7 சூலை 1992 16 மே 1996 பாரதிய ஜனதா கட்சி
9 Shankarrao Chavan 2007 stamp of India (cropped).jpg எசு. பி. சவாண் 23 மே 1996 1 June 1996 அடல் பிகாரி வாச்பாய் இந்திய தேசிய காங்கிரசு
(8) சிக்கந்தர் பக்த் (அரசியல்வாதி) 1 சூன் 1996 19 மார்ச் 1998 தேவ கௌடா

ஐ. கே. குஜரால்
பாரதிய ஜனதா கட்சி
10 Prime Minister Dr. Manmohan Singh in March 2014.jpg மன்மோகன் சிங் 21 மார்ச் 1998 22 மே 2004 அடல் பிகாரி வாச்பாய் இந்திய தேசிய காங்கிரசு
11 Jaswant Singh (cropped).jpg ஜஸ்வந்த் சிங் 3 சூன் 2004 16 மே 2009 மன்மோகன் சிங் பாரதிய ஜனதா கட்சி
12 The official photograph of the Defence Minister, Shri Arun Jaitley (cropped).jpg அருண் ஜெட்லி 3 சூன் 2009 26 மே 2014
13 Ghulam Nabi Azad-cropped.JPG குலாம் நபி ஆசாத் 8 சூன் 2014 15 பிப்ரவரி 2021 நரேந்திர மோதி இந்திய தேசிய காங்கிரசு
14 மல்லிகார்ச்சுன் கர்கெ 16 பிப்ரவரி 2021 1 அக்டோபர் 2022 17 டிசம்பர் 2022 பதவியில்

மேலும் பார்க்கவும்[தொகு]

 • இந்திய துணை ஜனாதிபதி (மாநிலங்களவைத் தலைவர்)
 • மாநிலங்களவைத் துணைத் தலைவர்
 • மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
 • மாநிலங்களவை அவைத் தலைவர்
 • மக்களவை அவைத் தலைவர்
 • மாநிலங்களவை பொதுச் செயலாளர்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Leader of Opposition: His role and responsibilities – India News". Latest News India. 17 June 2019. 27 February 2021 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Rajya Sabha – Role of The Leader of The House, Leader of the Opposition and Whips Brief History". rajyasabha.nic.in.
 3. Kumar, Sanjay. "Why India Needs an Opposition Leader". thediplomat.com.
 4. Salary and other suitable facilities are extended to them through a separate legislation brought into force on 1 November 1977
 5. "FORMER OPPOSITION LEADERS OF THE HOUSE – RAJYA SABHA". rajyasabha.nic.in.

மேலும் படிக்க[தொகு]