மல்லிகார்ச்சுன் கர்கெ
மல்லிகார்ச்சுன் கர்கெ | |
---|---|
மக்களவையில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 4 சூன் 2014 | |
முன்னவர் | சுசில்குமார் சிண்டே |
தொடர்வண்டித்துறை அமைச்சர் | |
பதவியில் 17 சூன் 2013 – 26 மே 2014 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னவர் | சி. பி. ஜோஷி |
பின்வந்தவர் | டி. வி. சதானந்த கௌடா |
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் | |
பதவியில் 29 மே 2009 – 16 சூன் 2013 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னவர் | ஓசுக்கார் பெர்னாண்டசு |
பின்வந்தவர் | சிசு ராம் ஒலா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 21 சூலை 1942 வார்வத்தி, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிற அரசியல் சார்புகள் |
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா) (2004–இன்றுவரை) |
வாழ்க்கை துணைவர்(கள்) | இராதாபாய் கர்கெ |
படித்த கல்வி நிறுவனங்கள் | அரசினர் கல்லூரி, குல்பர்கா சேத் சங்கர்லால் லகோட்டி சட்டக் கல்லூரி |
சமயம் | பௌத்தம் |
மபன்னா மல்லிகார்ச்சுன் கர்கெ (Mapanna Mallikarjun Kharge, பிறப்பு:21 சூலை 1942) இந்திய அரசியல்வாதி ஆவார். பதினாறாவது மக்களவையில் இந்திய தேசியக் காங்கிரசின் களத்தலைவராக பொறுப்பாற்றுகிறார்[1]. முன்னதாக தொடர்வண்டித்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். 2009ஆம் ஆண்டிலிருந்து கருநாடகத்தின் குல்பர்காவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். கருநாடகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான கர்கெ கர்நாடக சட்டப் பேரவையில் எதிர்க் கட்சித் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். 2008ஆம் ஆண்டில் கர்நாடக மாநில இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவராக இருந்துள்ளார்.[2]
தொடர்ந்து குல்பர்காவிலிருந்து பத்து முறை சட்டப்பேரவைக்கான தேர்தல்களிலும் (1972, 1979, 1983, 1985, 1989, 1994, 1999, 2004, 2008,2009) அண்மையில் நடைபெற்ற 2014 மக்களவைக்கான பொதுத் தேர்தலிலும் வென்று சாதனை படைத்துள்ளார்.[2] இவரது நேர்மையையும் அரசியல் திறனையும் கருத்தில் கொண்டே மக்களவையில் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .[3]
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ "Spectacular rise for Kharge". Chennai, India: The Hindu. 29 மே 2009. http://www.hindu.com/2009/05/29/stories/2009052953700400.htm. பார்த்த நாள்: 2009-05-29.
- ↑ 2.0 2.1 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4315
- ↑ "Team Manmohan". Indian Express. http://www.indianexpress.com/news/the-newlook-team-manmohan/467056/3.