சுமித்ரா மகஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுமித்ரா மகஜன்
இந்திய மக்களவைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
6 மே 2014
முன்னவர் மீரா குமார்
பின்வந்தவர் ஓம் பிர்லா
இந்தோர் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1989 – 29 மே 2019
முன்னவர் பிரகாஷ் சந்திர சேத்தி
தனிநபர் தகவல்
பிறப்பு 12 ஏப்ரல் 1943 (1943-04-12) (அகவை 76)
சிப்லுன், ரத்னகிரி மாவட்டம்
அரசியல் கட்சி பாஜக
வாழ்க்கை துணைவர்(கள்) ஜயந்த் மகஜன்
பிள்ளைகள் 2 மகன்கள்
இருப்பிடம் இந்தோர், மத்தியப் பிரதேசம்
As of 22 செப்டம்பர், 2006
Source: [1]

சுமித்திரா மகஜன் (Sumitra Mahajan, 12 ஏப்ரல் 1943) பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த இந்திய அரசியல்வாதியும் பதினாறாவது மக்களவையின் மக்களவைத் தலைவரும் ஆவார்.[1] 2014இல் எட்டாவது முறையாக மக்களவைத் தேர்தலில் வென்றுள்ளார். பதினாறாவது மக்களவையில் இவ்வாறு எட்டுமுறை வென்ற மூவரில் ஒருவராக உள்ளார்.[2] மிக நீண்டகாலம் உறுப்பினராக உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.[3] 1989ஆம் ஆண்டிலிருந்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து வென்று வந்துள்ளார்.

முந்தைய பாஜக ஆட்சியில் நடுவண் இணை அமைச்சராக 2002 முதல் 2004 வரை இருந்துள்ளார். மனிதவள மேம்பாடு, தொலைத்தொடர்பு, பெட்றோலியம் துறைகளில் அமைச்சராகப் பணி புரிந்துள்ளார்.[4] இந்தூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் சட்டமும் படித்துள்ளார்.

மேற்சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமித்ரா_மகஜன்&oldid=2761127" இருந்து மீள்விக்கப்பட்டது