ஆதிர் ரஞ்சன் சௌத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆதீர் ரஞ்சன் சௌத்திரி
மக்களவை உறுப்பினர்
தலைவர், இந்திய தேசிய காங்கிரசு, மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
19 சூன் 2019
முன்னவர் மல்லிகார்ச்சுன் கர்கெ
இந்திய மக்களவை உறுப்பினர்
பகரம்பூர் மக்களவைத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
அக்டோபர் 1999
இரயில்வே இணை அமைச்சர்
பதவியில்
28 அக்டோபர் 2012 – 16 மே 2014
மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1996–1999
முன்னவர் சிசார் சர்க்கார்
பின்வந்தவர் நிருபன் சௌத்திரி
தொகுதி நபக்ரம் சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 2 ஏப்ரல் 1956 (1956-04-02) (அகவை 65)
பகரம்பூர், மேற்கு வங்காளம், இந்தியா
வாழ்க்கை துணைவர்(கள்) அர்பிதா சௌத்திரி
பிள்ளைகள் ஹொமோந்தி (மகள்)
இருப்பிடம் 9, ஹரிபாபு தெரு
காசிம் பஜார்
பகரம்பூர் - 2
மேற்கு வங்காளம் - 742102
தொழில் அரசியல்வாதி & சமூக ஆர்வலர்

ஆதீர் ரஞ்சன் சௌத்திரி (Adhir Ranjan Chowdhury) (பிறப்பு:2 ஏப்ரல் 1956), இந்தியாவின் மேற்கு வங்காள மாநில அரசியல்வாதியும், சமூக ஆர்வலரும் ஆவார். இவர் மே 2019-இல் பகரம்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய மக்களைவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மக்களவை காங்கிரசு கட்சிக் குழுத் தலைவராக[தொகு]

19 சூன் 2019 அன்று ஆதிர் ரஞ்சன் சௌத்திரி, மக்களவை இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர்களுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுகக்ப்பட்டார்.[3] [4]

அரசியல் வாழ்க்கை[தொகு]

ஆதிர் ரஞ்சன் சௌத்திரி 1996-இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில், நபாகிராம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] [6]1999-இல் அதிர் ரஞ்சன் சௌத்திரி பகரம்பூர் மக்களவைத் தொகுதிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] [7] 28 அக்டோபர் 2012-இல் சௌத்திரி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் இரயில்வே இணை அமைச்சராக பதவியேற்றார்.[8]10 பிப்ரவரி 2014-இல் மேற்கு வங்காள காங்கிரசு கட்சியின் தலைவரானார்.[9]19 சூன் 2019 அன்று மக்களவை காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10]இவர் 2020 -2021 ஆண்டிற்கான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கபட்டார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]