உள்ளடக்கத்துக்குச் செல்

கமலாபதி திரிபாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமலாபதி திரிபாதி
உத்தரப் பிரதேசத்தின் ஏழாம் முதலமைச்சர்
பதவியில்
4 ஏப்ரல் 1971 – 13 சூன் 1973
முன்னையவர்திருபுவன நாராயண சிங்
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
இந்திய இருப்புப்பாதை அமைச்சர்
பதவியில்
11 பிப்ரவரி 1975 – 23 மார்ச் 1977
முன்னையவர்லலித் நாராயண் மிஸ்ரா
பின்னவர்மது தண்டவதே
பதவியில்
14 சனவரி 1980 – 12 நவம்பர்1980
முன்னையவர்தோன்சே ஆனந்த் பை
பின்னவர்கேதார் பாண்டே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 செப்டம்பர் 1905
வாரணாசி, காசி நாடு, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு8 அக்டோபர் 1990
(வயது 85)
வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

கமலாபதி திரிபாதி (3 செப்டம்பர்1905[1] – 8 அக்டோபர் 1990) ஓர் இந்திய அரசியல்வாதியும், எழுத்தாளரும், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். அவர் வாரணாசி தொகுதியிலிருந்து வந்த ஒரு மூத்த இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும் ஆவார். மேலும், உத்தரப்பிரதேசனத்தின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் இந்திய இரயில்வே அமைச்சரும் ஆவார்.அவர் 1969 முதல் 1970 வரை உத்தரப் பிரதேசத்தின் துணை முதல்வராகவும் , முதல் மற்றும் இன்றுவரை 1983 முதல் 1986 வரை இந்திய தேசிய காங்கிரஸின் செயல் தலைவராகவும் பணியாற்றினார்.

குடும்பம்[தொகு]

கமலாபதி திரிபாதிக்கு 3 மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் லோக்பதி திரிபாதி உத்திரப்பிரதேசத்தின் அமைச்சராகப் பணிபாற்றினார். இரண்டாவது மகன் மாயாபதி திரிபாதி அகில பாரதீய கிசான் மஸ்தூர் வாகினி என்ற சமூகத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஆவார், இவரது இளைய மகன் மங்களாபதி திரிபாதி ஆவார்.

இளமைக் காலம்[தொகு]

இவரது தந்தையார் பெயர் பண்டிட் நாராயண் பதி திரிபாதி ஆவார்.[2] உண்மையில் இவர் பிண்டி திரிபாதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவருக்கு உன்னாவ் மற்றும் கான்பூருடன் எந்தத் தொடர்பும் இல்லை. இவர் உத்தரப்பிரதேசத்தின் சரயு நதிக்கரைப் பகுதியில் வாழ்ந்த சரயுபாரின் சமூகத்தைச் சார்ந்தவர் ஆவார். இவரது மூதாதையர்கள் ஒளரங்கசீப் காலத்தில் வாரணாசிப் பகுதியில் வந்து குடியமர்ந்தார்கள். சன்சார் என்ற இந்தி தினசரிப் பத்திரிக்கையில் இதழியலாளராகத் தனது பணியைத் தொடங்கினார். பண்டிட் நாராயண் பதி திரிபாதி 19 ஆவது வயதில் திருமணம் புரிந்தார். இவருக்கு 5 குழந்தைகள் பிறந்தனர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இந்திய விடுதலை இயக்கம்[தொகு]

1921 ஆம் ஆண்டில், கமலாபதி திரிபாதி ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். இவர் உப்புச்சத்தியாக்கிரகத்தில் பங்கு பெற்றார். இதற்காக இவர் சிறை சென்றார். 1942 ஆம் ஆண்டில் மும்பைக்குச் செல்லும் வழியில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு பெற்று இதற்காக 3 ஆண்டுகள் சிறையில் இருந்தார் [3]

உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர்[தொகு]

இவர் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் 1973 ஆம் ஆண்டு சூன் 12 வரை இருந்தார். இவர் 1973 ஆம் ஆண்டு புரட்சியின் காரணமாக முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

இந்திய இரயில்வே அமைச்சராக[தொகு]

1975 முதல் 1977 வரையிலும் மற்றும் 1980 ஆம் ஆண்டில் சிறிது காலமும் இந்திய இரயில்வே அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். இவர் இந்திய இருப்புப்பாதை நிதியறிக்கை : 1975–76, 1976–77, 1980–81 (இடைக்கால) மற்றும் 1980–81 (இறுதி) ஆகியவற்றை தாக்கல் செய்துள்ளார்.[4] இவருடைய ஆட்சிக்காலத்தில் பின்வரும் தொடருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன:[5]

 • சபர்மதி விரைவுவண்டி
 • கங்கா காவேரி விரைவுவண்டி
 • நீலாம்பரி விரைவுவண்டி
 • வாரணாசி விரைவுவண்டி (புது தில்லி-லக்னே விரைவுவண்டி. நீட்டிக்கப்பட்டது)
 • தமிழ்நாடு விரைவுவண்டி
 • காசி விஸ்வநாத் விரைவுவண்டி

8-கிலோமீட்டர்- தொலைவு இருப்புப்பாதையானது தெலாபூர்-பதஞ்சேரா இவரது பதவிக்காலத்தில் திறக்கப்பட்டது.[6]

இவரது பதவிக்காலத்தில் டீசல் இயக்கூர்திப் பணிமனையானது புனேயில் தொடங்கப்பட்டது.

இதேகா செயல் தலைவர்[தொகு]

மகன் சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்த பிறகு , இந்திரா காந்தி திரிபாதியை செயல் தலைவராக்கினார்.ஆனால், இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு ராஜீவ் காந்தி காங்கிரஸ் தலைவராகவும் பிரதமராகவும் பதவியேற்றதும் , திரிபாதி அவருடன் முரண்பட்டார். நவம்பர் 1986 இல், அவர் ராஜினாமா செய்தார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. [1] பரணிடப்பட்டது 14 செப்டெம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம்
 2. "Shahid Smark". Varanasi.nic.in. Archived from the original on 2013-09-06. பார்க்கப்பட்ட நாள் 2013-11-02.
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-03-13. பார்க்கப்பட்ட நாள் 2019-09-22.
 4. "[IRFCA] Railway Ministers". Irfca.org. பார்க்கப்பட்ட நாள் 2013-11-02.
 5. "[IRFCA] Trains introduced by railway ministers". Irfca.org. பார்க்கப்பட்ட நாள் 2013-11-02.
 6. [2] பரணிடப்பட்டது 27 திசம்பர் 2015 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலாபதி_திரிபாதி&oldid=3944307" இலிருந்து மீள்விக்கப்பட்டது