ஜெயபால் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயபால் ரெட்டி
பூமி அறிவியல் அமைச்சகம்
பதவியில்
2012 அக்டோபர் 29 – 2014 மே 18
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்வயலார் ரவி
பின்னவர்ஜிதேந்திர சிங்
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
பதவியில்
2012 அக்டோபர் 29 – 2014 மே 18
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்வயலார் ரவி
பின்னவர்ஜிதேந்திர சிங்
இந்தியன் நாடாளுமன்றம்
for சேவெள்ள
பதவியில்
2009 சூன் – 2014 மே
முன்னையவர்தொகுதி நிறுவப்பட்டது
பின்னவர்கே. விஸ்வேஸ்வர ரெட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1942-01-16)16 சனவரி 1942
நர்மேட்டா, ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா
(தற்போது நர்மேட்டா, நல்கொண்டா, தெலங்காணா, இந்தியா)
இறப்பு2019 சூலை 28 (77 வயது)
ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இலட்சுமி
பிள்ளைகள்2 மகன்கள் மற்றும் 1 மகள்
வாழிடம்(s)மத்குல், தெலங்காணா, இந்தியா
வேலைவிவசாயம்
தொழில்அரசியல் தலைவர்
இணையத்தளம்sjaipalreddy.com

சுதினி ஜெய்பால் ரெட்டி (Sudini Jaipal Reddy) (பிறப்பு: 1942 சனவரி 16 - இறப்பு: 2019 சூலை 28 ) இவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஐந்து முறை இந்திய மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். தெலங்காணாவின் செவெல்லா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய இவர் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார். 1998ஆம் ஆண்டில் ஐ. கே. குஜ்ரால் அமைச்சரவையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக பணியாற்றினார். 1999இல் இவர் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரசுக்கு திரும்பினார். 2004ஆம் ஆண்டில் மிரியலகுடா மக்களவைத் தொகுதியில் இருந்து 14 வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி -1 இல் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் பணியாற்றினார்.[1] 2009ஆம் ஆண்டில் இவர் செவெல்லா தொகுதியில் இருந்து 15 வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும், மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராகவும் பணியாற்றினார். 2014 அக்டோபர் 29, முதல் 2014 மே 18 வரை இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மத்திய அமைச்சராக இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ரெட்டி தெலங்காணா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தில் சந்தூர் மண்டலத்தில் உள்ள நெர்மட்டா என்ற கிராமத்தில் பிறந்தார். ஆனால் உண்மையில் தெலங்காணாவின் மகபூப்நகர் மாவட்டத்தின் மட்குலாவைச் சேர்ந்தவராவார். இவர் பிறந்து 18 மாதத்தில் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டார்.[2] மேலும் நடக்க ஊன்றுக்கோலைப் பயன்படுத்தினார்.[3]

ஐதராபாத்தின் உசுமானியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் ஒரு விவசாயியாக இருந்தார். இவர் 1960 மே 7 அன்று லட்சுமி என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.[4]

தொழில்[தொகு]

ரெட்டி தனது கல்லூரி வாழ்க்கையில் ஒரு மாணவர் தலைவராக இருந்தார். 1970களில் இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.[5] ஆந்திராவில் கல்வகூர்த்தி தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினரானார்.

ரெட்டி 1969 மற்றும் 1984க்கு இடையில் ஆந்திராவின் கல்வகூர்த்தியின் சட்ட மன்ற உறுப்பினராக நான்கு முறை இருந்தார்.[5] நெருக்கடி நிலையை எதிர்த்து காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்து விலகிய இவர் 1977இல் ஜனதா கட்சியில் சேர்ந்தார். பின்னர் அதன் பிளவுபட்ட ஜனதா தளத்தில் சேர்ந்தார். இவர் 1985 முதல் 1988 வரை ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். 1984ஆம் ஆண்டில் மகபூநகர் மக்களவைத் தொகுதியிலிருந்து 8 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999இல் காங்கிரசு கட்சியில் மீண்டும் இணைந்த இவர் 2004இல் மிரியலகுடா தொகுதியில் இருந்து 14ஆவது மக்களவிக்கும், 2009இல் 15 வது மக்களவைக்கு சவெல்லாவிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990-1996 மற்றும் 1997-1998 ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களில் இவர் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தார்.

1991 சூன் முதல் 1992 சூன் வரை ஒரு வருடம் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் வகித்தார்.[5] இவர் இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக இரண்டு சந்தர்ப்பங்களில் பணியாற்றினார்: 1997-1998 ஆம் ஆண்டில் ஐ.கே. குஜராலின் கீழ் மற்றும் 2004 முதல் மன்மோகன் சிங்கின் கீழ் கலாச்சாரத்திற்கான கூடுதல் பொறுப்புடன் பணியாற்றினார். மேலும், நகர்ப்புற மேம்பாடு மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராகவும் பணியாற்றினார்.

இவர் உறுப்பினராக இருந்த பல கட்சிகளின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டார் . மேலும் 1998இல் இவருக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது வழங்கப்பட்டது.[6] தென்னிந்தியாவிலிருந்து முதன்முதலில் இந்த விருதை அடைந்த இளைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[7]

எண்ணெய் அமைச்சகத்திலிருந்து அகற்றுதல்[தொகு]

2004 மே 24 அன்று புதுதில்லியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் ஜெய்பால் ரெட்டி தனது அலுவலகத்தில்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி II வது அரசாங்கத்தின் கடைசி அமைச்சரவை மறுசீரமைப்பு 2012 அக்டோபர் 28 அன்று நடந்தது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எரிவாயு ஒதுக்கீடு மற்றும் ரிலையன்ஸ் கோரிக்கைகளை ஏற்க மறுத்ததில் வேறுபாடு ஏற்பட்டதால் ரெட்டி தனது தற்போதைய அமைச்சகத்திலிருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டார்.[5]

இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின்ர், 2011 அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எரிவாயு உற்பத்தி மற்றும் மீறல்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்ததற்காக முகேஷ் அம்பானியின் நிறுவனத்திற்கு எண்ணெய் அமைச்சகம் 7000 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. மேலும், பிபி உடனான ஒப்பந்தத்தில் நிறுவனத்தின் 7.2 பில்லியன் அமெரிக்க பங்குகளை எண்ணெய் அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை.[8][9] பாரதிய ஜனதா கட்சி, சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சி சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பெருநிறுவன நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக, குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவன குழுமத்தின் அழுத்தம் நீக்கப்பட்டதாகக் கூறினார். இருப்பினும் இவர் அந்தக் கூற்றுக்களை மறுத்து, தான் புதிய அமைச்சகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.[10][11][12]

இறப்பு[தொகு]

ரெட்டி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலியின் ஏ.ஐ.ஜி மருத்துவமனையில் 2019 சூலை 28 அன்று இறந்தார்.[13]

குறிப்புகள்[தொகு]

 1. "Jaipal's push set metro rail projects on track".
 2. "S. Jaipal Reddy brings to the government a mix of simplicity and subversion". India Today. http://indiatoday.intoday.in/story/s-jaipal-reddy-brings-to-the-government-a-mix-of-simplicity-and-subversion/1/275878.html. 
 3. "Dr. Jaipal reddy – uses crutches is one of the livewires of the present cabinet – enabled.in". enabled.in. 2011-07-14. http://enabled.in/wp/dr-jaipal-reddy-uses-crutches-is-one-of-the-livewires-of-the-present-cabinet/. 
 4. [1] பரணிடப்பட்டது 7 அக்டோபர் 2012 at the வந்தவழி இயந்திரம்
 5. 5.0 5.1 5.2 5.3 Rahul, N. (28 July 2019). "Former Union Minister S. Jaipal Reddy passes away at 77" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/former-union-minister-s-jaipal-reddy-passes-away/article28736393.ece. பார்த்த நாள்: 28 July 2019. 
 6. Shri S Jaipal Reddy. Sjaipalreddy.com. Retrieved on 21 May 2014.
 7. Shri S Jaipal Reddy. Sjaipalreddy.com. Retrieved on 21 May 2014.
 8. Steep Fall in Gas Output: Rs 7000cr Fine on Reliance பரணிடப்பட்டது 29 அக்டோபர் 2013 at the வந்தவழி இயந்திரம். IndiaWires. Retrieved on 21 May 2014.
 9. [2] பரணிடப்பட்டது 29 அக்டோபர் 2013 at the வந்தவழி இயந்திரம்
 10. Jaipal Reddy's shift from Oil Ministry creates a political storm – The Economic Times. Economictimes.indiatimes.com (30 October 2012). Retrieved on 21 May 2014.
 11. PM owes an explanation on shifting Jaipal Reddy: BJP, SP. The Hindu (29 October 2012). Retrieved on 21 May 2014.
 12. The Times of India: Latest News India, World & Business News, Cricket & Sports, Bollywood. Articles.timesofindia.indiatimes.com. Retrieved on 21 May 2014.
 13. "Former Union Minister Jaipal Reddy Dies At 77". NDTV.com. 28 July 2019. https://www.ndtv.com/india-news/former-union-minister-jaipal-reddy-dies-at-77-2076441. பார்த்த நாள்: 28 July 2019. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jaipal Reddy
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயபால்_ரெட்டி&oldid=3926783" இலிருந்து மீள்விக்கப்பட்டது