கர்நாடகா மாநிலங்களவை உறுப்பினர்கள்
இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் கர்நாடகா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 12 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.
உறுப்பினர்கள் பட்டியல்[தொகு]
தற்போது கர்நாடகாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.
வ.எண். | உறுப்பினர் பெயர் | அரசியல் கட்சி | பதவிக்காலம் |
---|---|---|---|
1 | ராஜீவ் சந்திரசேகர் | சுயேச்சை | 03-04-2006 முதல் 02-04-2012 வரை |
2 | ஆஸ்கர் பெர்னாண்டஸ் | இந்திய தேசிய காங்கிரஸ் | 01-07-2010 முதல் 30-06-2016 வரை |
3 | எம்.ராமா ஜோயிஸ் | பாரதிய ஜனதா கட்சி | 26-06-2008 முதல் 25-06-2014 வரை |
4 | கே.ரஹ்மான்கான் | இந்திய தேசிய காங்கிரஸ் | 03-04-2006 முதல் 02-04-2012 வரை |
5 | டாக்டர் பிரபாகர் கோர் | பாரதிய ஜனதா கட்சி | 26-06-2008 முதல் 25-06-2014 வரை |
6 | எஸ்.எம்.கிருஷ்ணா | இந்திய தேசிய காங்கிரஸ் | 26-06-2008 முதல் 25-06-2014 வரை |
7 | அணில் ஹெச்.லாட் | இந்திய தேசிய காங்கிரஸ் | 26-06-2008 முதல் 25-06-2014 வரை |
8 | டாக்டர் விஜய் மல்லையா | சுயேச்சை | 01-07-2010 முதல் 30-06-2016 வரை |
9 | ஆயனூர் மஞ்சுநாத் | பாரதிய ஜனதா கட்சி | ----- |
10 | எம்.ராஜசேகர மூர்த்தி | மதசார்பற்ற ஜனதா தளம் | 03-04-2006 முதல் 02-04-2012 வரை |
11 | எம்.வெங்கைய நாயுடு | பாரதிய ஜனதா கட்சி | 01-07-2010 முதல் 30-06-2016 வரை |
12 | கே.பி.சானப்பா | பாரதிய ஜனதா கட்சி | 03-04-2006 முதல் 02-04-2012 வரை |
- மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.