மு. முகமது அப்துல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. முகமது அப்துல்லா (M. Mohamed Abdullah) என்பவர் தமிழ்நாட்டினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவர் மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டினை பிரதிநிதிப்படுத்துகின்றார்.[1]

பிறப்பும் கல்வியும்[தொகு]

அப்துல்லா 1975ஆம் ஆண்டு சூலை 30 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம் செம்பூதி கிராமத்தில் முகம்மது இசுமாயில் என்பவருக்கு மகனாக பிறந்தார். அப்துல்லா வணிகவியல் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் படித்துள்ளார்.[2]

அரசியலில்[தொகு]

அப்துல்லா 1993-ல் புதுக்கோட்டை நகர திமுக மாணவரணி துணை அமைப்பாளரார், நகர அமைப்பாளர், 2008 முதல் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருக்கின்றார். 2014ல் சிறுபாண்மையினர் அணி துணை செயலாளராகவும், 2018-ல் திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாலராகவும், 2021-ல் தி.மு.க வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல அணி இணை செயலாளராகவும் இருக்கின்றார். 2021 ஆகத்து முதல் இந்திய மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகின்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._முகமது_அப்துல்லா&oldid=3916683" இலிருந்து மீள்விக்கப்பட்டது