உ. தனியரசு
உ.தனியரசு | |
|---|---|
| பதவியில் மே 2016 – மே 2021 | |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தொகுதி | காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி) |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | மார்ச் 20, 1967 தாராபுரம் |
| அரசியல் கட்சி | தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை |
| துணைவர் | உமாராணி |
| பிள்ளைகள் | இரண்டு பிள்ளைகள் |
| பெற்றோர் | உடையாக்கவுண்டர், பழனியம்மாள் |
| வாழிடம் | 21/ஏ, கவுண்டச்சிபுதூர், எல்லீஸ்நகர் - 638 657, தாராபுரம் வட்டம், திருப்பூர் மாவட்டம். |
| கல்வி | முதுகலை அரசியல் அறிவியல் |
| பணி | அரசியல் |
உ. தனியரசு (U.Thaniyarasu), ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். தாராபுரத்தைச் சேர்ந்த இவர் 2016 முதல் 2021 வரை காங்கேயம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]கோவை மாவட்டம் (தற்போதைய திருப்பூர் மாவட்டம்) தாராபுரம் வட்டம், கவுண்டச்சிபுதூர் என்ற கிராமத்தில் உடையாக்கவுண்டர், பழனியம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக மார்ச் 20 1967-இல் பிறந்தார்.[1] கவுண்டச்சிபுதூரில் ஆரம்பக் கல்வியும், மேனிலைப்பள்ளி தாராபுரத்திலும் கற்றார்.
அரசியல்
[தொகு]முதுகலை அரசியல் அறிவியல் பயின்றார். தன் இனத்திற்கான அரசியல் அதிகாரத்திற்காகவும், சமூக பாதுகாப்பிற்காகவும் தொடங்கப்பட்ட இயக்கங்கள், கட்சிகள் தோல்வியுற்று, முடங்கியதால், அரசியல், பொருளியியல், சமுகப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு, ஆட்சி அதிகாரத்தில் தன் இனத்திற்குரிய பங்கீடு தேவை என்று கருதி 2001 மார்ச் 14 அன்று கோவை எஸ். என். அரங்கத்தில் நூற்றிற்கும் குறைவான உறுப்பினர்களை வைத்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை என்ற அமைப்பைத் தொடங்கினார்.
வேளாளர், கவுண்டர் இன சாமானிய மக்களிடையே சமநீதி ஏற்படுத்தி அரசியல் விழிப்புணர்வு பெற்று அதிகாரம் பெற வேண்டி 7 மாநாடுகள் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் சார்பாக நடத்தி உள்ளார்.[சான்று தேவை]
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]கடந்த 2011ஆம் ஆண்டு 14ஆம் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உ.தனியரசு நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியில், போட்டியிட்டு 31,018 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[2][3]
2016-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் உ.தனியரசு தலைமையிலான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, அதிமுகவுடன் கூட்டணி வைத்து காங்கேயம் தொகுதியில் 13,135 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://nocorruption.in/politician/thaniyarasu-u/
- ↑ http://dinamani.com/tamilnadu/article789601.ece
- ↑ http://www.thehindu.com/news/national/tamil-nadu/kongu-ilaignar-peravai-given-one-seat/article1530123.ece
- ↑ "Kangayam Assembly Election 2016 Latest News & Results". India.com (in ஆங்கிலம்). Retrieved 2021-09-29.