உள்ளடக்கத்துக்குச் செல்

தொல். திருமாவளவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருமாவளவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முனைவர் தொல். திருமாவளவன்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
30 மே 2019
முன்னையவர்எம். சந்திரகாசி
தொகுதிசிதம்பரம்
பதவியில்
31 சூலை 2009 – 17 மே 2014
முன்னையவர்இ. பொன்னுசாமி
பின்னவர்எம். சந்திரகாசி
தொகுதிசிதம்பரம்
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
14 மே 2001 – 3 பிப்ரவரி 2004
முன்னையவர்எஸ். புரட்சிமணி
பின்னவர்வெ. கணேசன்
தொகுதிமங்களூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 ஆகத்து 1962 (1962-08-17) (அகவை 63)
அங்கனூர், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு
குடியுரிமைஇந்தியர்
தேசியம்தமிழர்
அரசியல் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
வாழிடம்சென்னை

தொல். திருமாவளவன் (Thol. Thirumavalavan, பிறப்பு: ஆகத்து 17, 1962) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத்தலைவரான இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி இயங்கி வருகின்றார்.

அரசியல் வாழ்வு

ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்னும் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய அ. மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்டபோது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல். திருமாவளவன் மதுரையில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அந்த அமைப்பின் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் எனப் பெயர் மாற்றிய திருமாவளவன் நீலம், சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அந்த இயக்கத்திற்காக வடிவமைத்து 1990 ஏப்ரல் 14 ஆம் நாள் மதுரையில் அக்கொடியை ஏற்றினார்.[1]

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்தபோது, 1999 ஆம் ஆண்டு ஆகத்து 17 ஆம் நாள் தொல். திருமாவளவன் தனது அரசுப் பணியைத் துறந்தார்.[1]

தேர்தலில் ஈடுபடுவது என்று விசிக முடிவெடுத்தவுடன் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 1999ஆம் ஆண்டு திமுக, அதிமுக கூட்டணி அல்லாத மூன்றாவது கூட்டணியான தமிழ் மாநில காங்கிரசு (தமாகா) வின் சார்பில் தமாகா சின்னத்தில் நின்றார். அதில் அதிமுக கூட்டணியிலிருந்த பாமகவின் பொன்னுசாமியிடம் தோல்வியுற்றார். 2001ஆம் ஆண்டு திமுக+பாசக கூட்டணியில் திமுக சின்னத்தில் மங்களூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அதிமுக+ பாமக+ பொதுவுடமை கட்சிகள் கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரசின் புரட்சிமணியை தோற்கடித்து ”வெற்றி” பெற்றார்.

இவர் 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், சிதம்பரம் தொகுதியிலிருந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

இவர் 2014 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், இதே சிதம்பரம் தொகுதியில், திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளரான சந்திரகாசியிடம் தோல்வியடைந்தார்.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து, மீண்டும் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். இத்தேர்தலில் திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்று (அதிமுக வேட்பாளரை விட 3219 வாக்குகள் வித்தியாசம்) வெற்றி பெற்றார்.

வகித்துள்ள பொறுப்புகள்

ஆண்டு நிலைப்பாடு நிறுவனம்
2001-2004 உறுப்பினர் தமிழ்நாடு சட்டமன்றம்[4]
2009 உறுப்பினர் 15வது மக்களவை[4]
2019 உறுப்பினர் 17வது மக்களவை[4]
2024 உறுப்பினர் 18வது மக்களவை[4]

தேர்தல் செயல்பாடு

மக்களவைத் (பொதுத்) தேர்தல்

Year தொகுதி கட்சி வாக்குகள் % எதிராளி எதிராளியின் கட்சி எதிராளி பெற்ற வாக்குகள் % முடிவு வாக்கு வேறுபாடு %
2024 சிதம்பரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 505,084 43.28 எம். சந்திரகாசன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 401,530 34.40 வெற்றி 103,554 8.68
2019 500,229 43.52 பி. சந்திரசேகர் 497,010 43.24 வெற்றி 3,219 0.28
2014 301,041 27.97 எம். சந்திரகாசி 429,536 39.91 தோல்வி −128,495 −11.94
2009 428,804 49.30 இ. பொன்னுசாமி பாட்டாளி மக்கள் கட்சி 329,721 37.96 வெற்றி 99,083 11.41
2004 ஐக்கிய ஜனதா தளம் 255,773 34.41 343,424 46.20 தோல்வி −87,651 −11.79
1999 தமிழ் மாநில காங்கிரசு 225,768 31.17 345,331 47.68 தோல்வி −119,563 −16.51

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்

Year தொகுதி கட்சி வாக்குகள் % எதிராளி எதிராளியின் கட்சி எதிராளி பெற்ற வாக்குகள் % முடிவு வாக்கு வேறுபாடு %
2016 காட்டுமன்னார்கோயில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 48,363 29.28 நா. முருகுமாறன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 48,450 29.33 தோல்வி −87 −0.05
2001 மங்களூர் திராவிட முன்னேற்றக் கழகம் 64,627 47.87 எசு. புரட்சிமணி தமிழ் மாநில காங்கிரசு 62,772 46.49 வெற்றி 1,855 1.37
  • 2001: முதன் முறை தமிழக சட்டமன்றத்துக்கு திமுக + பாசக கூட்டணி சார்பாக தேர்வாகிறார்.[5]
  • மே 2009: முதன் முறை மக்களவைக்கு (பதினைந்தாவது) தேர்வாகிறார்.
  • மே 2019: இரண்டாவது முறை பதினேழாவது மக்களவைக்கு தேர்வாகிறார்.

அரசியல் கொள்கை

சாம்பவர் (பறையர்) மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துதல், தனித்தமிழ் வளர்ச்சிக்கு உதவுதல், சாதிய அடக்குமுறைக்கு எதிராக கருத்திடுதல், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், தனித்தமிழீழக் கொள்கைக்கும் ஆதரவளித்தல், இந்துத்துவ கொள்கையினை எதிர்த்தல் போன்றவை அவரது முக்கியக் கொள்கைகளாகும்.

படைப்புகள்

சாதீய அடக்குமுறையினை எதிர்த்தல், ஈழ விடுதலை ஆதரவு, இந்துத்துவ கருத்துகளை எதிர்த்தல் போன்ற கொள்கையினை வலியுறுத்தும் விதமாக முனைவர் திருமாவளவன் பல கட்டுரைகள் மற்றும் நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில:

  • அத்துமீறு
  • தமிழர்கள் இந்துக்களா?
  • ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ஈழம்
  • இந்துத்துவத்தினை வேரறுப்போம்
  • அமைப்பாய் திரள்வோம்

இவற்றில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

நூல்கள்

  • முள்வலி
  • அமைப்பாய்த் திரள்வோம்
  • கருத்தியலும் நடைமுறையும் (கட்டுரைத் தொகுப்பு)

திரைப்படங்கள்

திருமாவளவன் தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றிலும் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார். இவரது முதல் திரைப்படம் அன்புத்தோழி ஆகும். இதில் இவர் கிளர்ச்சித் தலைவர் வேடம் ஏற்று நடித்துள்ளார்.[6] இப்பாத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை மாதிரியாக வைத்து அமைக்கப்பட்டதாக விமர்சிக்கப்படுகின்றது. இது தவிர கலகம், என்னைப்பார் யோகம் வரும், மின்சாரம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி! சூனியர் விகடன் 2015 மே 3
  2. "நள்ளிரவு வரை நீடித்த இழுபறி - சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி". NEWS7 (மே 24, 2019)
  3. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்".பிபிசி தமிழ் (மே 23, 2019)
  4. 4.0 4.1 4.2 4.3 "Member Detail -Lok Sabha". Lok Sabha.
  5. பாஜக முதல் பாமக வரை... விசிக கடந்து வந்த கூட்டணி சொல்லும் கதை என்ன?
  6. Anbu Thozhi cleared by censors oneindia[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்._திருமாவளவன்&oldid=4482245" இலிருந்து மீள்விக்கப்பட்டது