உள்ளடக்கத்துக்குச் செல்

கு. சண்முகசுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கு. சண்முகசுந்தரம்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்சி. மகேந்திரன்
தொகுதிபொள்ளாச்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1970[1]
திருப்பூர், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிமுக
துணைவர்வனிதா
பிள்ளைகள்நிஹாரிகா
கல்விஇயந்திரப் பொறியியல்

கு. சண்முகசுந்தரம் (K. Shanmugasundaram) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள பெருமாள் புதூர் ஆகும். இவர் 1970 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு இயந்திரப் பொறியியல் பட்டதாரி ஆவார். இவருக்கு வனிதா என்ற மனைவியும், நிஹாரிகா என்ற மகளும் உள்ளனர்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

இவர் தற்போது திமுகவின் பொறியாளர் அணி மாநில துணைத் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இதே தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் 46,025 வாக்குகள் வேறுபாட்டில் தோல்வியடைந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சண்முகசுந்தரம்- பொள்ளாச்சி திமுக வேட்பாளர்: பாலியல் கொடூர சம்பவம் தேர்தலில் தாக்கம் ஏற்படுத்துமா?". ஒன்இந்தியா (மார்ச் 27, 2019)
  2. "பொள்ளாச்சி: திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரம் வெற்றி". தினத்தந்தி (மே 24, 2019)
  3. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்".பிபிசி தமிழ் (மே 23, 2019)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._சண்முகசுந்தரம்&oldid=3943407" இலிருந்து மீள்விக்கப்பட்டது