நவாஸ் கனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவாஸ் கனி
Navaskani.jpg
நவாஸ் கனி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் அன்வர் ராஜா
தொகுதி இராமநாதபுரம்
தனிநபர் தகவல்
பிறப்பு 14 மே 1979 (1979-05-14) (அகவை 43)
இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி Flag of the Indian Union Muslim League.svg இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
பிள்ளைகள் 2

நவாஸ் கனி (Navaskani, பிறப்பு: மே 14 1979) ஓர் இந்திய அரசியல்வாதியும், 17வது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், இராமநாதபுரம் தொகுதியிலிருந்து, இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

பிறப்பு[தொகு]

இவர் இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்திலுள்ள, குருவாடி என்னும் ஊரில் காதர் மீரா கனி - ரம்ஜான் பீவி தம்பதியருக்கு 1979 ஆம் ஆண்டு மே 14 நாளன்று மகனாக பிறந்தார். பள்ளிப் படிப்பை கடலாடியில் முடித்த பிறகு படிப்படியாக தொழிலில் உயர்ந்து நின்று எஸ். டி. கூரியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக விளங்குகின்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பணம் கொடுத்த வெற்றியல்ல... ஜனம் கொடுத்த வெற்றி! - நவாஸ்கனி நறுக்..." விகடன் (சூன் 01, 2019)
  2. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்". பிபிசி தமிழ் (மே 23, 2019)
  3. "எஸ்.டி கொரியர் முதல் தேர்தல் பணிகள் வரை.. ஐயூஎம்எல் ராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ் கனி யார்".[தொடர்பிழந்த இணைப்பு] ஒன்இந்தியா தமிழ் 01, 2019)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவாஸ்_கனி&oldid=3218092" இருந்து மீள்விக்கப்பட்டது