அன்புத்தோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்புத்தோழி
இயக்கம்எல்.ஜி.ரவிச்சந்திரன்
தயாரிப்புஜெய் பீ சினிமா
இசைசக்தி ராஜ்
நடிப்புதொல். திருமாவளவன்
பிரபு
/பிரித்தி வர்மா
மயில்சாமி
ஒளிப்பதிவுசித்திரை செல்வன்
படத்தொகுப்புN. பாபு
வெளியீடு17 ஆகத்து 2007 (2007-08-17)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்பு தோழி 2007 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இப்படத்தின் கதை முக்கோண காதல் கதை ஆகும். இசையில் ஆர்வமுள்ள இளைஞர் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர் மற்றும் ஒரு தமிழ் போராளித் தலைவருக்கு இடையிலான கதை ஆகும்.

படத்தின் இசையமைப்பளர் ஜே.கே. செல்வா, எல்.ஜி.ரவிச்சந்திரன் படத்தை இயக்கயுள்ளார்.

படம் தமிழ்நாட்டிலுள்ள ஒரு சிறிய கிராமத்தின் அழகியலை குறிக்கும் விதமாக படம் துவங்குகிறது. பிரபு (பிரபு) தனது கனவு வாழ்க்கையைத் தேடி சென்னை செல்கிறார், அங்கு அவர் பாண்டையாவை சந்திக்கிறார். நகர வாழ்க்கையில் பிரபுவுக்கு பாண்டையா உதவுகிறார். பிரபல இயக்குனரை சந்திக்க உதவும் யாழினியை பிரபு சந்திக்கிறார், அவர் தனது இசை திறனை வெளிப்படுதடத பிரபுவுக்கு வாய்ப்பு எற்பாடு செய்கிறார்.

பிரபுன் வாழ்கை இனிதாக பயணிக்கும்போது யாழினி மீது காதல் மலருகிறது. யாழினியிடம் தனது காதலை வெளிப்படுத்தும்போது, பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் நடந்த போரின்போது கருப்பு தனக்கு உதவியதை அறியும்போது கருப்பு மீது அன்பு மலர்கிறது.

பிரபு தனது காதலை மறைத்து கருப்புவைக் கண்டுபிடிக்க புறப்படுகிறான்.

யாழினியும் பிரபுவும் இணைந்து வாழ்வதாக படம் முடிகிறது.

[[தொல். திருமாவளவன்|திருமாவளவன்]] கருப்பு கதாபாத்திரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|பிரபாகரன்]] முன்மாதிரியாக வைத்து நடித்ததாக விமர்சிக்கப்படுகின்றது.

பாடல்கள்[தொகு]

படத்தில் ஒலிப்பதிவில் 7 பாடல்கள் உள்ளன:

  1. "பூங்காற்றே"
  2. "பூங்காற்றே" (மெதுவான நடையில்)
  3. "சிறுத்தைய"
  4. "வானம் எங்கே"
  5. "வானத்தில்"
  6. "வெயிலுக்கேற்ற"
  7. "யாள் போலா"
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்புத்தோழி&oldid=3672268" இருந்து மீள்விக்கப்பட்டது