இரவீந்திரநாத் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ப.ரவீந்திரநாத்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2019
முன்னவர் ஆர். பார்த்தீபன்
தொகுதி தேனி
தனிநபர் தகவல்
பிறப்பு 3 பெப்ரவரி 1980 (1980-02-03) (அகவை 43)
தென்கரை, பெரியகுளம், தேனி, தமிழ்நாடு
அரசியல் கட்சி Indian Election Symbol Two Leaves.svg அஇஅதிமுக
வாழ்க்கை துணைவர்(கள்) ஆனந்தி ரவீந்திரநாத்
உறவினர் ஓ. பன்னீர்செல்வம் (தந்தை)
பிள்ளைகள் மூன்று
இருப்பிடம் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு
பட்டப்பெயர்(கள்) ஓ.பி.ஆர்

ப.ரவீந்திரநாத் (பிறப்பு:03 பிப்ரவரி 1980) ஓர் இந்திய அரசியல்வாதியும், 17வது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வத்தின் மகனாவார்.இவர் ஓ.பி.ஆர் என்றும் அறியப்படுகிறார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தமிழ்நாடு காங்கிரசு மூத்த தலைவரான ஈ. வெ. கி. ச. இளங்கோவனை விட 76,319 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றி பெற்றார். தற்போது தேனி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவையின் மாவட்ட செயலாளராக உள்ளார்.[1][2] 2019 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற ஒரே நபர் இவர்தான்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வெற்றி". தினத்தந்தி (மே 24, 2019)
  2. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்". பிபிசி தமிழ் (மே 23, 2019)