சு. திருநாவுக்கரசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சு. திருநாவுக்கரசர்
Su. Thirunavukkarasar in 2012.jpg
2012 ஆம் ஆண்டில் திருநாவுக்கரசர்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் ப. குமார்
தொகுதி திருச்சி
கப்பல் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணை அமைச்சர்
பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்
தொகுதி புதுக்கோட்டை
சட்ட மன்ற உறுப்பினர்
தொகுதி அறந்தாங்கி
தனிநபர் தகவல்
பிறப்பு மே 7, 1949 (1949-05-07) (அகவை 72)
தீயத்தூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி 1)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (1977-1991)
2)தாயக மறுமலர்ச்சி கழகம் (1991-1996)
3)எம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (1996-2002)
4)பாரதிய ஜனதா கட்சி (2002 - 2009)
5)காங்கிரஸ் கட்சி (2009-தற்போது வரை)
வாழ்க்கை துணைவர்(கள்) ஜெயந்தி
பிள்ளைகள் மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு
கல்வி முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை

சு. திருநாவுக்கரசர் (Su. Thirunavukkarasar, பிறப்பு: மே 07, 1949) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் புதுக்கோட்டை மாவட்டம், தீயத்தூர் கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார்.[1]

1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். அ.தி.மு.க.வில் இருந்து விலகிய இவர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார்.[2] ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் தேசிய செயலாளராக பணியாற்றிய இவர், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.[3][4]

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், திருச்சி தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._திருநாவுக்கரசர்&oldid=3162576" இருந்து மீள்விக்கப்பட்டது