உள்ளடக்கத்துக்குச் செல்

கு. செல்வப்பெருந்தகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கு. செல்வப்பெருந்தகை
K. Selvaperunthagai
தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
18 பிப்ரவரி 2024
முன்னையவர்கே. எஸ். அழகிரி
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரசு சட்டமன்றக் கட்சித் தலைவர்
பதவியில்
மே 2021 – பிப்ரவரி 2024
முன்னையவர்க. ரா. இராமசாமி
பின்னவர்செ. ராஜேஷ் குமார்
மாநிலத் தலைவர், தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி
பதவியில்
2012–2022
பொதுக் கணக்குக் குழுவின் தலைவர், தமிழ்நாடு சட்டப் பேரவை[1]
பதவியில் உள்ளார்
பதவியில்
25 சூன் 2021
முன்னையவர்மு. க. ஸ்டாலின்
உறுப்பினர், தமிழ்நாடு சட்டப் பேரவை (MLA)
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மே 2021
முன்னையவர்கே. பழநி
தொகுதிதிருப்பெரும்புதூர்
பதவியில்
2006–2011
முன்னையவர்சி. வி. கணேசன்
பின்னவர்திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி
தொகுதிமங்களுர்
உறுப்பினர், பட்டியல் இனத்தவர்/பட்டதாரி நலக்குழு, தமிழ்நாடு அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
24 சூலை 2021
மாநிலத் தலைவர் பகுஜன் சமாஜ் கட்சி, தமிழ்நாடு
பதவியில்
11 நவம்பர் 2008 – 4 சூலை 2010
முன்னையவர்கி. ஆம்சுடிராங்கு
பின்னவர்கி. ஆம்சுடிராங்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 ஏப்ரல் 1964 (1964-04-14) (அகவை 62)
மணிமங்கலம், சென்னை மாநிலம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு(2010 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
பகுஜன் சமாஜ் கட்சி (2008 - 2010)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2008 வரை)
புதிய தமிழகம் கட்சி
புரட்சி பாரதம் கட்சி
துணைவர்உமையாள் செல்வப்பெருந்தகை
வாழிடம்சிறீபெரும்புதூர், தமிழ்நாடு
முன்னாள் மாணவர்சட்டம் (சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகம்)
முது கலை (சென்னைப் பல்கலைக்கழகம்)
பணிஅரசியல்வாதி, வழக்கறிஞர்

கு. செல்வப்பெருந்தகை (K. Selvaperunthagai) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவரும் ஆவார்.[2]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

இவர் தனது அரசியல் வாழ்க்கையை பூவை மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம் கட்சியில் தொடங்கினர். பின்பு அதில் இருந்து விலகி கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியில் இணைந்தார். [3] அதன் பின்பு தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்து, அக்கட்சி சார்பாக 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மங்களூர் தொகுதியிலிருந்து போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்பு திருமாவளவன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகினார். அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து, அக்கட்சியின் மாநில தலைவரானர். பின்பு அக்கட்சியில் இருந்து விலகி 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.[4] அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு செங்கம் சட்டமன்றத் தொகுதியிலும்,2016 ஆம் ஆண்டு திருபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] 2024 பெப்ரவரி 17 அன்று தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார்.

தேர்தல் கட்சி தொகுதி முடிவு பெற்ற வாக்கு வாக்கு பங்கீடு%
2006 விடுதலை சிறுத்தைகள் கட்சி  மங்களூர் வெற்றி 62,217 43.7
2011 இந்திய தேசிய காங்கிரசு  செங்கம் தோல்வி 72,225 40.50
2016 திருப்பெரும்புதூர் தோல்வி 90,285 38.23
2021 இந்திய தேசிய காங்கிரசு திருப்பெரும்புதூர் வெற்றி 1,15,353 43.65

மேற்கோள்கள்

[தொகு]
  1. Selvaperunthagai K [SPK_TNCC] (25 June 2021). "நன்றி 🙏 t.co/XlbCSftokG" (Tweet). Archived from the original on 4 July 2021. Retrieved 29 August 2021.
  2. "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி SC துறை". inctamilnadu.
  3. "நிரூபிக்கும் தாவல் பெருந்தகை!". விகடன் இதழ்.
  4. நாளை காங்கிரஸில் இணைகிறார் செல்வப்பெருந்தகை. தினமணி இதழ். 20 செப்டெம்பர் 2012.{{cite book}}: CS1 maint: year (link)
  5. நள்ளிரவில் வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்.. வாரிசுகளுக்கு வாய்ப்பு. நியூஸ் 18 தமிழ். 14 மார்ச் 2021.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._செல்வப்பெருந்தகை&oldid=4500339" இலிருந்து மீள்விக்கப்பட்டது