செங்கல்பட்டு மாவட்டம் (சென்னை மாகாணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Chingleput District
செங்கல்பட்டு மாவட்டம்
மாவட்டம் of சென்னை மாகாணம்

1793–1997
 

Flag of Chingleput District

கொடி

Location of Chingleput District
1956இல் சென்னை மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் அமைவிடம்
தலைநகரம் கருங்குழி (1793 - 1825) மற்றும் (1835 - 1859), காஞ்சிபுரம் (1825 - 1835), சைதாபேட்டை (1859 - 1947), செங்கல்பட்டு (1947-1997)
வரலாறு
 •  ஒரு மாவட்டமாக உருவாக்கப்பட்டது 1793
 •  இம்மாவட்டமானது காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது 1997
பரப்பு
 •  1901 7,974.5 km2 (3,079 sq mi)
Population
 •  1901 13,12,122 
மக்கள்தொகை அடர்த்தி 164.5 /km2  (426.2 /sq mi)
 இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Chingleput". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 6. (1911). Cambridge University Press. 

செங்கல்பட்டு மாவட்டம் (Chingleput district) என்பது பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தின் ஒரு மாவட்டம் ஆகும். இம்மாவட்டமானது தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம், திருவள்ளூர் மற்றும் சென்னை நகரின் சிலபகுதிகளைக் கொண்டதாக இருந்தது. 7,970 சதுர கிலோமீட்டர் (3,079 சதுர மைல்) பரப்பளவு கொண்ட மாவட்டமான இது ஆறு வட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் முதல் தலைநகராக கருங்குழி 1825 முதுல் 1835வரை இயங்கிவந்த நிலையில் பின்னர் காஞ்சிபுரத்துக்கு மாற்றப்பட்டது. என்றாலும் இடையில் 1859 இல் சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியாக தற்போது உள்ள சைதாபேட்டையானது செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாக தலைநகராக இருந்தது.[1]

வரலாறு[தொகு]

1913இல் செங்கல்பட்டு கோட்டையின் தோற்றம். இந்தக் கோட்டைப் பகுதியில் 1752இல் செங்கல்பட்டு போர் நடந்தது.

இராபர்ட் புருசு ஃபூட் மேற்கொண்ட அகழ்வாய்வில், இப்பகுதியில் கற்காலத்திலிருந்தே மனிதர்கள் வாழ்ந்துவந்தது தெரியவருகிறது. கி,மு. முதல் நூற்றாண்டின் முடிவில் இப்பகுதியானது தொண்டைமான் மரபினரின் ஆட்சியின்கீழ் வந்தது. கி.பி. 500இல் இப்பகுதியை பல்லவர் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டனர். பல்லவர்கள் வீழ்ச்சியடைந்தபோது கி.பி. 760இல் சாளுக்கியர்களின் ஆதரவுடன், மேலைக் கங்கர்களால் இப்பகுதி கைப்பற்றப்பட்டது. அதன்பிறகு செங்கல்பட்டை இராஷ்டிரகூடர், சோழர், வாரங்கல்லின் காக்கத்தியர் ஆகியோர் 13ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை தில்லி சுல்தானகத்தால் வெற்றிகொள்ளப்படும்வரை ஆண்டனர். பின்னர் இப்பகுதியை வெற்றிகொண்ட விஜயநகர பேரரசர்கள்   1393 முதல் 1565 வரை ஆட்சி செய்தனர். பின்னர் 1565 முதல் 1640 வரை செங்கல்பட்டை சந்திரகிரி இராச்சியமானது கைப்பற்றி ஆண்டது.

1687 ஆம் ஆண்டில் முகலாயர்கள் ஆட்சியின்கீழ் இந்தப் பகுதியை இணைக்கப்பட்டது. பின்னர் இப்பகுதியின் ஆட்சியாளராக 1763 முதல் ஆற்காடு நவாப் மாறினார்.1763 ஆம் ஆண்டில், செங்கல்பட்டானது பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆற்காடு நவாபான முகம்மது அலியால் வழங்கப்பட்டது. இப்பகுதியானது கர்நாடகப் போர்களின் களமாக இருந்தது. மேலும் அடிக்கடி திப்பு சுல்தானால் கைப்பற்றப்பட்டும் வந்தது. 1801 ஆம் ஆண்டில், இறுதியாக ஆற்காடு நவாப் இப்பகுதியின் முழு இறையாண்மையும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் இழந்தார்.[2]

இந்திய விடுதலைக்குப் பிறகு இந்த மாவட்டமானது 1950இல் புதிய பெயரைப் பெற்ற சென்னை மாநிலத்தின் ஒரு பகுதியாக ஆனது. 1956 ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தால் இயற்றப்பட்ட மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் விளைவாக, மொழிவாரியாக மாநில எல்லைகள் மறு வரையறை செய்யப்பட்டது. சென்னை மாநிலமானது இறுதியாக 1969 சனவரி 14 அன்று தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது.[3]

வட்டங்கள்[தொகு]

செங்கல்பட்டு மாவட்டமானது எட்டு வட்டங்களாக பிரிக்கப்பட்டு இருந்தது:

 • செங்கல்பட்டு (பரப்பு: 1,130 square kilometres (436 சது மை); தலைமையகம்:செங்கல்பட்டு)
 • கஞ்சிவரம் (பரப்பு: 1,330 square kilometres (514 சது மை); தலைமையகம்: காஞ்சிபுரம்)
 • மதுராந்தகம் (பரப்பு: 1,800 square kilometres (696 சது மை); தலைமையகம்:மதுராந்தகம்)
 • பொன்னேரி (பரப்பு: 900 square kilometres (347 சது மை); தலைமையகம்:பொன்னேரி)
 • சைதாப்பேட்டை (பரப்பு: 890 square kilometres (342 சது மை); தலைமையகம்:சைதாப்பேட்டை)
 • திருவள்ளூர் (பரப்பு: 1,930 square kilometres (744 சது மை); தலைமையகம்:திருவள்ளூர்)

நிர்வாகம்[தொகு]

இந்த மாவட்டமானது மூன்று துணைக் கோட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவொரு கோட்டமும் மூன்று சாராட்சியர்களின் நிர்வாகத்தில் இருந்தது:

 • செங்கல்பட்டு துணைக்- கோட்டம்: செங்கல்பட்டு, மதுராந்தகம், காஞ்சிவரம் ஆகிய வட்டங்கள்
 • சைதாபேட்டை துணைக்-கோட்டம்: சைதாப்பேட்டை வட்டம்
 • திருவள்ளூர் துணைக்-கோட்டம்: திருவள்ளூர் மற்றும் பொன்னேரி வட்டங்கள்.

1901 ஆம் ஆண்டில், இந்த மாவட்டத்தில் கஞ்சிவரம், செங்கல்பட்டு ஆகிய இரு நகராட்சிகள் இருந்தன.

மக்கள் வகைப்பாடு[தொகு]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.
1871 9,38,184 —    
1881 9,81,381 +4.6%
1891 12,02,928 +22.6%
1901 13,12,122 +9.1%
Sources:
 • Imperial Gazetter of India, Volume 10. Clarendon Press. 1908. 

1901 ஆம் ஆண்டில், செங்கல்பட்டு மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையானது 1,312,222 ஆக இருந்தது. இதில் 96 விழுக்காட்டு மக்கள் இந்துக்கள், மீதமுள்ளவர்கள் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களாவர். நான்கில் மூன்று பங்கினரின் தாய்மொழியாக தமிழ் இருந்தது. மீதமுள்ளவர்கள் தெலுங்கர்களாவர். இந்த மாவட்டமானது சென்னைக்கு அருகில் இருந்த காரணத்தால் ஏராளமான ஐரோப்பியரும் இருந்தனர்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. The Imperial Gazetteer of India. Vol. 10: Central Provinces to Coopta. New edition. Clarendon Press, Oxford 1908, p. 252–268
 2. Imperial Gazetter of India, Volume 10. Clarendon Press. 1908. 
 3. States of India since 1947