உள்ளடக்கத்துக்குச் செல்

திருவள்ளுவமாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவள்ளுவ மாலை (Tiruvalluva Malai) எனும் நூல் திருக்குறளின் பெருமைகளையும், திருவள்ளுவரின் பெருமைகளையும் புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். திருவள்ளுவமாலை ஒருநூலுக்கோ, நூலாசிரியனுக்கோ இப்படி எல்லாப் புலவர்களும் வரிசை கட்டிப் புகழாரம் தொடுத்தளித்தது, திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் மட்டுமே கிடைத்த முதற் சிறப்பு. திருவள்ளுவமாலையில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளன. ஐம்பத்து மூன்று புலவர்கள் பாடியுள்ளார்கள். இடைக்காடர், ஔவையார் இருவரும் குறட்பாவிலும், ஏனைய ஐம்பத்து மூவரும் வெண்பாக்களாலும், வள்ளுவரையும் திருக்குறளையும் புகழ்ந்த பாமாலைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

காலம்

[தொகு]

இதில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் சார்த்தப்பட்டவை. இந்தத் தொகுப்புநூல் உருவான காலம் பொ.ஊ. 11 -ஆம் நூற்றாண்டு.

சான்றுகள்
  • சங்கப் புலவர்களும் சம காலத்தவர் அல்லர்.
  • இதில் உள்ள புலவர் பாரதம் பாடிய பெருந்தேவனார், 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
  • புலவர் எண்ணிக்கையில் குழப்பம்.
  • ஒருவர் பாடிப் பிறர்மேல் சாற்றிய நூல்கள் (திருமூலர் ஞானம், திருவள்ளுவர் ஞானம்)
பிற்காலப் புகழாரம்

இவை தவிர்த்துக் கல்லாடனார், சிவப்பிரகாசர், பாரதியார், பேராசிரியர் மனோன்மணீயம் பெ.சுந்தரனார், கவிமணி, பாரதிதாசன் போன்ற இடைக்கால மற்றும் பிற்காலப் புலவர்களும் திருக்குறளைப் புகழ்ந்து பாடல்கள் இயற்றி உள்ளனர். அவை திருவள்ளுவ மாலையில் இடம் பெறா.

திருவள்ளுவ மாலையிலுள்ள பாடல்கள்

[தொகு]

கற்பனைப் படைப்புகளின் பாடல்கள்

[தொகு]

1 அசரீரி — சங்கப்பலகையில் திருவள்ளுவரோடு உருத்திரசன்மன் புலவரும் வீற்றிருக்கலாம்.
2 நாமகள் — முன்பு நான்கு வேதங்களைப் பிரமன் வாயிலிருந்து சொன்னேன். அடுத்து பாரதம் சொன்னேன். இப்போது திருவள்ளுவர் வாயிலிருந்து திருக்குறள் சொல்கிறேன்.
3 இறையனார் — திருக்குறள் வாடாத கற்பக மலர் போன்றது.

புலவர் பாடல்கள்

[தொகு]

திருக்குறளுக்குப் பெருமை சேர்க்க விரும்பிய ஒரு சிறந்த புலவர் சங்க காலப் புலவர்கள் சிலரது பெயரில் பாடல்கள் எழுதித் தொகுத்துத் தந்த நூலே திருவள்ளுவ மாலை எனபதை ஊன்றெண்ணிப் பார்த்துப் படிப்போர் எளிதாக உணர்ந்துகொள்ள முடியும்.
இவர்கள் திருக்குறளைப் பெரிதும் மதித்துப் போற்றிச் சூட்டியுள்ள புகழாரங்களைத் திருக்குறளுக்குப் புகழாரம் என்னும் பகுதியில் காணலாம்.

திருக்குறளைப் பகுத்துக் காட்டும் பாடல்கள்

[தொகு]

16 நத்தத்தனார் — 'ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும் பாயிரத்தினோடு பயின்றபின்' வேறு நூலைக் கேட்க வேண்டியதில்லை என்னும்போது பாயிரம் பாடல் 1330-ல் அடங்கவில்லை.
இதன் விரிவை திருக்குறள் பகுப்புக்கள் என்னும் பகுதியில் காணலாம்.

பாடலாசிரியர்கள்

[தொகு]

திருவள்ளுவ மாலையின் பங்களிப்பாளர்களில் மூன்று தெய்வீகக் கவிஞர்களும் 52 சங்கக் கவிஞர்களும் அடங்குவர்.

  1. அசரீரி
  2. நாமகள்
  3. இறையனார் (சிவன்)
  4. உக்கிரப் பெருவழுதி
  5. கபிலர்
  6. பரணர்
  7. நக்கீரர்
  8. மாமூலனார்
  9. கல்லாடனார்
  10. சீத்தலைச் சாத்தனார்
  11. உறையூர் மருத்துவன் தாமோதரனார்
  12. மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
  13. அரிசில் கிழார்
  14. பொன்முடியார்
  15. கோதமனார்
  16. நத்தத்தனார்
  17. சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
  18. நல்லந்துவனார்
  19. கீரந்தையார்
  20. நன்பலூர்ச் சிறுமேதாவியார்
  21. நல்கூர் வேள்வியார்
  22. தொடித்தலை விழுத்தண்டினார்
  23. வெள்ளிவீதியார்
  24. மாங்குடி மருதனார்
  25. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்
  26. போத்தியார்
  27. மோசிகீரனார்
  28. காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்
  29. மதுரைத் தமிழ்நாகனார்
  30. பாரதம் பாடிய பெருந்தேவனார்
  31. உருத்திர சன்மகண்ணர்
  32. பெருஞ்சித்திரனார்
  33. நரிவெரூஉத் தலையார்
  34. மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார்
  35. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
  36. கவிசாகரப் பெருந்தேவனார்
  37. மதுரைப் பெருமருதனார்
  38. கோவூர்க் கிழார்
  39. உறையூர் முதுகூத்தனார்
  40. இழிகண் பெருங்கண்ணனார்
  41. செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார்
  42. செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்
  43. வண்ணக்கஞ் சாத்தனார்
  44. களத்தூர்க் கிழார்
  45. நச்சுமனார்
  46. அக்காரக்கனி நச்சுமனார்
  47. நப்பாலத்தனார்
  48. குலபதி நயனார்
  49. தேனிக்குடிக் கீரனார்
  50. கொடிஞாழல் மாணிபூதனார்
  51. கவுணியனார்
  52. மதுரைப் பாலாசிரியனார்
  53. ஆலங்குடி வங்கனார்
  54. இடைக்காடர்
  55. ஐவையார்

திருவள்ளுவமாலைப் பாடல்கள்

[தொகு]

குறிப்புதவி

[தொகு]

திருக்குறள் - பரிமேலழகர் உரை பின்னிணைப்பு.

இணைப்பு

[தொகு]

மேலே உள்ள பாடல்கள் பற்றிய தொகுப்புக் கண்ணோட்டம் \ திருவள்ளுவ மாலை \ திருக்குறளுக்குப் புகழாரம்

கருவிநூல்

[தொகு]
  • திருக்குறள் உரைக்கொத்து, காமத்துப்பால், ஸ்ரீ காசிமடம்-திருபனந்தாள் வெளியீடு, இரண்டாம் பதிப்பு, 1961
  • சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), அறிஞர் கழகம், தொகுப்பும் பகுப்பும் பேராசிரியர் எஸ் வையாபுரிப் பிள்ளை, 1940, இரண்டாம் பதிப்பு 1967
  • Index des mots de la letterature tamoule ancienne, INSTITUT FRANCAIS D'INDOLOGIE, PONDICHERY, 1967

அடிக்குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவள்ளுவமாலை&oldid=4470926" இலிருந்து மீள்விக்கப்பட்டது