பாரதம் பாடிய பெருந்தேவனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாரதம் பாடிய பெருந்தேவனார் சங்ககாலப் புலவர் அல்லர். சங்கநூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தவர். எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்தவர். இவரது கடவுள் வாழ்த்துப் பாடல்களை நூலுக்குத் தொடக்கப் பாடலாக இணைத்துள்ளார்.

இவரது பாடல்கள் அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு[1] ஆகிய ஐந்து நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல்களாக அமைந்துள்ளன.

காலம்
  • இவரது காலம் கி.பி. 700-க்கு முன்பாகும். [2]
  • ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்பர். [3]
நூல் கடவுள் நூலின் எண்ணிக்கைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதா?
அகநானூறு சிவன் இல்லை
ஐங்குறுநூறு சிவன் இல்லை
குறுந்தொகை முருகன் இல்லை
நற்றிணை திருமால் இல்லை
புறநானூறு சிவன் ஆம்

இவரால் பாடப்பட்ட பாரத வெண்பாக்கள் 818 தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறநானூறு 1 கடவுள் வாழ்த்துப் பாடல்
  2. மு. அருணாசலம் தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, பாகம் 1, பக்கம் 3
  3. மு. அருணாசலம் தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பக்கம் 19