எறிச்சலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோனாட்டு எறிச்சலூர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் உள்ள எரிச்சி[1] என்னும் ஊர்தான் சங்ககாலக் கோனாட்டு எறிச்சலூர். இதனை டாக்டர் உ. வே. சாமிநாதையர் குறிப்பிட்டுள்ளார்.[2] இவ்வூரில் வாழ்ந்த புலவர் மாடலன். இவர் மதுரைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு அவரை மதுரைக் குமரனார் என வழங்கலாயினர். புறநானூறு இவரது வரலாற்றை உணர்த்தும் வகையில் ‘கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்’ என்று குறிப்பிடுகிறது.

கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் இவரது பாடல்கள் புறநானூற்றில் ஆறு பாடல்களும் பாடல் எண் (54, 61, 167, 180, 197, 394).
திருவள்ளுவ மாலையில் ஒரு பாடல், பாடல் எண் 25 இடம்பெற்றுள்ளது.
பாயிரம் நான்குஇல் லறம்இருபான் பன்மூன்றே
தூய துறவறம்ஒன் றுஊழாக – ஆய
அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்
திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து.
என்ற பாடல் திருவள்ளுவ மாலையில் இடம் பெற்றுள்ளது.

விளக்கம்:திருவள்ளுவர் நன்றாக ஆய்ந்து பாயிரம் நான்கதி காரமும் இல்லறவியல் இருபததிகாரமும் துறவறவியல் பதின்மூன்றதிகாரமும் ஊழ் ஓரதிகாரமுமாக, அறத்துப்பாலை நால்வகையாக வகுத்துரைத்தார்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. "எரிச்சி". Archived from the original on 2015-03-23. பார்க்கப்பட்ட நாள் 2011-08-28.
  2. புறநானூறு 167 அடிக்குறிப்பு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எறிச்சலூர்&oldid=3684545" இலிருந்து மீள்விக்கப்பட்டது