உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் வைப்புமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்குறள் 133 அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துப் பாடல்கள் உள்ளன. இந்தப் பத்தைத் திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர்கள் வரிசைப்படுத்திக்கொள்வதில் மாறுபடுகின்றனர். ஒரு அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களை வரிசைப்படுத்தும் முறை வைப்பு முறை ஆகும். இக்காலத்தில் நாம் கையாளும் பதிப்புகள் பரிமேலழகர் வைப்பு முறையைப் பின்பற்றியுள்ளன.

எடுத்துக்காட்டுக்கு அன்புடைமை என்னும் அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களின் வெவ்வேறு வைப்புமுறை வரிசையை நோக்குவோம்.

மணக்குடவர் 12ஆம் நூற்றாண்டு பரிதியார் 13ஆம் நூற்றாண்டு காலிங்கர் 13ஆம் நூற்றாண்டு பரிப்பெருமாள் 13ஆம் நூற்றாண்டு பரிமேலழகர் 13ஆம் நூற்றாண்டு திருக்குறள் முதற்குறிப்பு
10 8 3 - 1 அன்பிற்கும் உண்டோ
5 9 7 - 2 அன்பிலார் எல்லாம்
6 5 8 - 3 அன்போடு இயைந்த
8 6 6 - 4 அன்பீனும்
7 7 5 - 5 அன்புற்(று) அமர்ந்த
9 10 9 - 6 அறத்திற்கே அன்பு
1 1 1 - 7 என்பில் அதனை
2 2 2 - 8 அன்பகத் தில்லா
3 3 4 - 9 புறத்துறுப்(பு) எல்லாம்
4 4 10 - 10 அன்பின் வழியது

கருவிநூல்

[தொகு]
  • திருக்குறள் உரைக்கொத்து, தா. ம. வெள்ளைவாரணம் பதிப்பு, திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் வெளியீடு, 1983
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்குறள்_வைப்புமுறை&oldid=2745495" இலிருந்து மீள்விக்கப்பட்டது