திருவள்ளுவர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவள்ளுவர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் திருக்குறள் நெறி பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். 1986 ஆண்டிலிருந்து இவ்விருது வழங்கப்படுகிறது. 1986 ஆம் ஆண்டிலிருந்து 1997 ஆம் ஆண்டு வரை ரூபாய் இருபதாயிரம் பணமுடிப்பும் தகுதியுரையும் வழங்கப்பட்டது. 1998 வரை ரூபாய் இருபதாயிரம் பணமுடிப்பும் தகுதியுரையும் வழங்கப்பட்டது. 1999 இலிருந்து ரூபாய் ஒரு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.

விருது பெற்றவர்கள் பட்டியல்[தொகு]

வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1986
2 கி. ஆ. பெ. விசுவநாதம் 1987
3 ச. தண்டபாணி தேசிகர் 1988
4 வ. சுப. மாணிக்கம் 1989
5 கு. ச. ஆனந்தன் 1990
6 சுந்தர சண்முகனார் 1991
7 இரா. நெடுஞ்செழியன் 1992
8 கல்லை தே. கண்ணன் 1993
9 திருக்குறள் வீ. முனிசாமி 1994
10 க. சிவகாமசுந்தரி 1995
11 முனைவர் மு. கோவிந்தசாமி 1996
12 முனைவர் கு. மோகனராசு 1997
13 முனைவர் இரா. சாரங்கபாணி 1998
14 முனைவர் வா. செ. குழந்தைசாமி 1999
15 த. சி. க. கண்ணன் 2000
16 பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் 2001
17 முனைவர் இ. சுந்தரமுர்த்தி 2002
18 முனைவர் கு மங்கையர்க்கரசி 2003
19 இரா. முத்துக்குமாரசாமி 2004
20 பெரும்புலவர் ப. அரங்கசாமி 2005
21 முனைவர் ஆறு அழகப்பன் 2006
22 முனைவர் க. ப. அறவாணன் 2007
23 தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் 2008
24 முனைவர் பொற்கோ 2009
25 ஐராவதம் மகாதேவன் 2010
26 முனைவர் பா. வளன் அரசு 2011
26 புலவர் செ. வரதராசன் 2012
27 கலைமாமணி டாக்டர் ந. முருகன் (சேயோன்) 2013

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவள்ளுவர்_விருது&oldid=2765736" இருந்து மீள்விக்கப்பட்டது