சென்னமல்லீசுவரர் கோயில்

ஆள்கூறுகள்: 13°5′2″N 80°16′12″E / 13.08389°N 80.27000°E / 13.08389; 80.27000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னமல்லீசுவரர் கோயில்
Mallikesvarar Temple
சென்னமல்லீசுவரர் கோயில்
சென்னமல்லீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
சென்னமல்லீசுவரர் கோயில்
தமிழ் நாடு-இல் உள்ள இடம்
பெயர்
பெயர்:மல்லிகேஸ்வரர் திருக்கோவில், மல்லிகார்ஜுனர் திருக்கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவு:சென்னை
ஆள்கூறுகள்:13°5′2″N 80°16′12″E / 13.08389°N 80.27000°E / 13.08389; 80.27000
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

சென்னமல்லீசுவரர் கோயில் அல்லது மல்லிகேஸ்வரர் திருக்கோவில், மல்லிகார்ஜுனர் திருக்கோவில் (Mallikesvarar Temple) என்பது சென்னை நகரம் உருவாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் கட்டபட்ட முதல் கோயிலாகும். சென்னமல்லீசுவரர் கோயிலானது தேவராஜ முதலியார் தெரு, சௌகார்பேட்டை, சென்னையில் அமைந்துள்ளது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வழங்கிய நிதி உதவியுடன் கட்டப்பட்ட கோயில்களில் இதுவும் ஒன்று.

வரலாறு[தொகு]

தற்போதைய சென்னை உயர்நீதிமன்றம் இருக்கும் வளாகத்தில் இருந்த சென்னகேசவப் பெருமாள் கோயில் மற்றும் சென்னமல்லீசுவரர் கோயில் போன்றவற்றை, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தங்களது வணிக வசதிக்காக 1757ஆம் ஆண்டில் இடித்த போது, பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். பின்னர் கம்பேனி நிறுவனத்தார், மணலி முத்துகிருஷ்ண முதலியாருக்கு இடமும் பொருளும் கொடுத்து, 1762ஆம் ஆண்டில் தற்போது உள்ள இடத்தில் இந்த இருகோயில்களும் அடுத்தடுத்து மீண்டும் கட்டப்பட்டன. இந்த இரண்டு கோயில்களையும் இணைத்து பட்டணம் கோவில் என்று அப்பகுதி மக்கள் அழைக்கிறனர்.

கோயில் அமைப்பு[தொகு]

சென்னமல்லீஸ்வரர் திருக்கோயிலின் நுழைவு வாயிலில் மணிமண்டபம் ஒன்று காணப்படுகிறது. உள்ளே நுழைந்ததும் பிரசன்ன விநாயகர் காட்சியளிக்கிறார். மேற்குப் பிராகாரத்தில் வில்வ மரமும் முருகர் சன்னிதியும் உள்ளன. அன்னை பிரமராம்பிகைக்கு தனிச் சன்னிதி உள்ளது. வடக்குப் பிராகாரத்தில் அருணகிரிநாதர் தனிச் சன்னிதியில் உள்ளார். அருணகிரிநாதருக்கு தனிச் சன்னிதி அமைந்த ஆலயங்கள் குறைவு. அவற்றில் இதுவும் ஒன்று.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஜி.எஸ்.எஸ். (20 சூன் 2018). "ஒன்றில் இரண்டு: மாநகருக்குள் ஓர் அமைதித் தீவு". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2018.