உள்ளடக்கத்துக்குச் செல்

அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி
வகைஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உருவாக்கம்2021
Religious affiliation
இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு
பட்ட மாணவர்கள்பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி. கணினி அறிவியல்
வளாகம்எவர்வின் பள்ளி வளாகம்

அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி என்பது,[2] இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை, கொளத்தூர் நகரில் அமைந்துள்ள ஒரு 'கலை மற்றும் அறிவியல் கல்லூரி' ஆகும். சமீபத்தில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பில், தொடங்கப்பட்டுள்ள பத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. 2021 ஆம் ஆண்டு மட்டும் (இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு) இக்கல்லூரியில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு அவர்களுக்கான கல்விக் கட்டணம் மற்றும் அவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் இலவசம். இக்கல்லூரி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது.

அமைவிடம்

[தொகு]

இக்கல்லூரி, சென்னையின் கொளத்தூர் நகரில் பெரம்பூர் செங்குன்றம் சாலையில் அமைந்துள்ள எவர்வின் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிரந்தரமாக, அதே பகுதியைச் சார்ந்த சோமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டடங்கள் கட்டப்பட்டு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியின் புவியியல் ஆள்கூறுகள்: 13.125580°N 80.220235°E.

போக்குவரத்து

[தொகு]

சாலைப் போக்குவரத்து

[தொகு]

இக்கல்லூரி, பெரம்பூர் - செங்குன்றம் சாலையில் அமைந்துள்ளது. அருகிலேயே கொளத்தூர் பேருந்து நிறுத்தம்; சுமார் ஒரு கி.மீ. தூரத்திலேயே நான்கு சாலைகள் சந்திப்பான, 'ரெட்டேரி சந்திப்பு' அமைந்துள்ளது.

தொடருந்து போக்குவரத்து

[தொகு]

அருகிலுள்ள வில்லிவாக்கம் தொடருந்து நிலையம் (2 கி.மீ.), பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் தொடருந்து நிலையம், பெரம்பூர் கேரேஜ் வொர்க்ஸ், பெரம்பூர் தொடருந்து நிலையம் போன்றவற்றினால் தொலைவில் உள்ள ஊர்களின் மாணவ, மாணவியர் பயன் பெறுகின்றனர்.

வான்வழிப் போக்குவரத்து

[தொகு]

சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்கிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

பயனடையும் ஊர்கள்

[தொகு]

அருகிலுள்ள ஊர்களான கொளத்தூர், பெரவள்ளூர், திரு. வி. க. நகர், பெரியார் நகர், பூம்புகார் நகர், பொன்னியம்மன்மேடு, ஜவஹர் நகர், செம்பியம், பெரம்பூர் மற்றும் அருகிலுள்ள சிற்றூர்களில் வாழும் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இப்பகுதியில் வேறு கல்லூரி ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாடப்பிரிவுகள்

[தொகு]

பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய நான்கு பிரிவுகளில் இளநிலைப் பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

வசதிகள்

[தொகு]

இக்கல்லூரியில் கல்லூரி முதல்வர் நிர்வாக அறை, ஏழு வகுப்பறைகள், பேராசிரியர் அறைகள், இரண்டு கணினி ஆய்வகங்கள், ஒரு நூலகம்[3] , பணியாளர்கள் அறை, கழிவறைகள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. ஒன்பது உதவிப் பேராசிரியர்கள், ஒரு நூலகர், ஓர் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகியோர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இந்தாண்டு கல்விக் கட்டணம் இலவசம் கொளத்தூரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்". Hindu Tamil. https://www.hindutamil.in/news/tamilnadu/733649-kapaleeswarar-arts-and-science-college.html. 
  2. "நடப்பு கல்வியாண்டில் அரசு தொடங்கியுள்ள அறநிலையத்துறை கல்லூரிகளுக்கு பெயர் அறிவிப்பு". Puthiyathalaimurai. https://www.puthiyathalaimurai.com/newsview/118178/Name-announced-for-new-government-colleges-in-the-academic-year-2021. 
  3. "கொளத்தூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!". Dinakaran. https://m.dinakaran.com/article/news-detail/717102. 
  4. "கபாலீசுவரர் கல்லூரி: உதவிப் பேராசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய ஸ்டாலின்". Dinamani. https://www.dinamani.com/tamilnadu/2021/oct/21/kabaliswarar-college-stalin-who-issued-appointment-orders-for-assistant-professors-3721650.html.