வில்லிவாக்கம் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 13°6′37″N 80°12′33″E / 13.11028°N 80.20917°E / 13.11028; 80.20917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லிவாக்கம்
சென்னை புறநகர் இருப்புவழி மற்றும் தென்னக இரயில்வே தொடருந்து நிலையம்
வில்லிவாக்கம் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்வில்லிவாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்13°6′37″N 80°12′33″E / 13.11028°N 80.20917°E / 13.11028; 80.20917
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள்சென்னை புறநகர் இருப்புவழியின் மேற்கு, மேற்கு வடக்கு மற்றும் மேற்கு தெற்கு தடங்கள்
நடைமேடை4
இருப்புப் பாதைகள்5
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைக்கு மேல் நிலையானது
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுவி.எல்.கே
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்29 நவம்பர் 1979[1]
முந்தைய பெயர்கள்தென்னிந்திய இரயில்வே
போக்குவரத்து
பயணிகள் 201332,000/நாளுக்கு[2]

வில்லிவாக்கம் தொடருந்து நிலையம் (Villivakkam railway station) சென்னை புறநகர் இருப்புவழி வலையமைப்பில் சென்னை மத்திய தொடருந்து-அரக்கோணம் தொடருந்து நிலையப் பிரிவில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த நிலையம், வில்லிவாக்கம், கொளத்தூர், பாடி ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ளது. வில்லிவாக்கம் தொடருந்து நிலையம் கடல் மட்டத்திலிருந்து 10.25 மீ உயரத்தில் உள்ளது. 

வரலாறு[தொகு]

வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் நடைப்பாலம்
மேற்கு திசை நோக்கி நிலையத்தின் காட்சி

1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி சென்னை மத்திய தொடருந்து நிலையம்-திருவள்ளூர் தொடருந்து நிலையப் பிரிவின் மின்சாரமயப்படுத்தலுடன் இந்த நிலையத்தின் முதல் தடம் மின்சாரமயமாக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி வில்லிவாக்கம் தொடருந்து நிலையம்-ஆவடி தொடருந்து நிலையப் பிரிவின் மின்சாரமயப்படுத்தலுடன் இந்த நிலையத்தின் எஞ்சிய தடங்கள் மின்சாரமயமாக்கப்பட்டன.[1]

வசதிகள்[தொகு]

வில்லிவாக்கம் தொடருந்து நிலையத்தில் பாதசாரிகளுக்கான நடை மேம்பாலம், சமதள நிலை கடப்பு மற்றும் வாகன சுரங்கப்பாதை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாகன சுரங்கப்பாதையின் கட்டுமானம் 4 டிசம்பர் 2007 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது.[3] முந்தைய சமதள நிலை கடப்பு இரண்டிற்குப் பதிலாக[4]2012 ஆம் ஆண்டு சூன் மாதம் 19 அன்று போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இவ்வசதி நிலையத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் 900 அனுமதிச் சீட்டுகள் இங்கு வழங்கப்படுகின்றன. இதில் 400 பயணிகள் வடக்குப் பகுதியிலிருந்து வருகின்றனர். 2002 ஆம் ஆண்டில், வடக்குப் பகுதியில் ஒரு பயணச்சீட்டு வழங்கும் முனையம் திறக்கப்பட்டது. இருப்பினும், குறைவான பயன்படுத்தல் காரணமாக 2005 ஆம் ஆண்டு மூடப்பட்டது.[5]

மக்கள் தொகை[தொகு]

அருகிலுள்ள கொளத்தூர் பகுதியில் 54 காலனிகளில் 500,000 மக்கள் வசிக்கின்றனர். சென்னை புறநகர் இரயில்களின் சேவையை தினசரி 25,000 பேர் பயன்படுத்துகின்றனர். 2013 ஆம் ஆண்டின் போதே, இந்த நிலையம் ஒரு நாளைக்கு 32,000 பயணிகளை கையாண்டது.[2]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  2. 2.0 2.1 "Go northwest, but don't take a train". The Times of India (Chennai: The Times Group). 27 April 2013 இம் மூலத்தில் இருந்து 30 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130630104528/http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToPrint_TOINEW&Type=text/html&Locale=english-skin-custom&Path=TOICH/2013/04/27&ID=Ar00600. பார்த்த நாள்: 28 Apr 2013. 
  3. "Villivakkam subway thrown open". The Hindu (Chennai). 20 May 2012. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/article3437788.ece. 
  4. "Tamil Nadu infra gets better with new bridges, bypass, subway". The Asian Age (Chennai: Deccan Chronicle). 20 June 2012. http://www.asianage.com/chennai/tamil-nadu-infra-gets-better-new-bridges-bypass-subway-936. 
  5. Lakshmi, K. (29 December 2007). "Better facilities sought at Villivakkam railway station". The Hindu (Chennai: The Hindu) இம் மூலத்தில் இருந்து 1 ஜனவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080101235950/http://www.hindu.com/2007/12/29/stories/2007122959010400.htm. பார்த்த நாள்: 2 Sep 2012. 

புற இணைப்புகள்[தொகு]