விநாயகபுரம், இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விநாயகபுரம்
கிராமம்
விநாயகபுரம் is located in இலங்கை
விநாயகபுரம்
விநாயகபுரம்
ஆள்கூறுகள்: 7°08′0″N 81°51′0″E / 7.13333°N 81.85000°E / 7.13333; 81.85000
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு மாகாணம், இலங்கை
மாவட்டம்அம்பாறை
பிரதேச செயலகம்திருக்கோவில் பிரதேச செயலகம்

விநாயகபுரம் (Vinayagapuram) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் அடங்கியுள்ள கிராமம் ஆகும்.[1] ஆரம்ப காலப்பகுதியில் கரையோரக் காணிகளாயிருந்த நிலங்கள் யாவும் அரசினால் தென்னந்தோட்டங்களாக்கப்பட்டு 1959 இல் நிலமற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. 1962 இல் குடியேற்ற கிராமமாக இருந்த இக்கிராமத்திற்கு விநாயகபுரம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

இக்கிராமத்தில் 1990 இல் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட மீனோடைக்கட்டு, திராய்க்கேணி, அட்டப்பள்ளம், துறைநீலாவணை, கஞ்சிகுடிச்சாறு, களுதாவளை போன்ற பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடியேறி வாழ்கின்றனர்.

கோயில்கள்[தொகு]

இக்கிராமத்தில் 99.99% ஆன மக்கள் சைவ சமயத்தை பின்பற்றுகின்றனர். இங்கு பல இந்து ஆலயங்கள் உள்ளன.

  • விநாயகபுரம் சிவன் கோயில்
  • விநாயகபுரம் சித்தி விநாயகர் கோயில்
  • விநாயகபுரம் காளி கோயில்
  • விநாயகபுரம் முத்துமாரியம்மன் கோயில்
  • பாலக்குடா பாலவிநாயகர் கோயில்
  • மங்கைமாரியம்மன் கோயில்

பாடசாலைகள்[தொகு]

மேலும் வாசிக்க[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விநாயகபுரம்,_இலங்கை&oldid=2973456" இலிருந்து மீள்விக்கப்பட்டது