உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பத்தூர் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்பத்தூர் ரயில் நிலையம், (ஆங்கிலம்: Ambattur Railway station) சென்னை புறநகர் ரயில்வேயின், சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் பிரிவின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று. அம்பத்தூர் தொடருந்து நிலையமானது சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் முனையத்திற்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சென்னையின் புறநகர்ப் பகுதியான அம்பத்தூருக்கும் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளான விஜயலட்சுமிபுரம் கிருஷ்ணாபுரம், கருக்கு, ஒரகடம், புதூர், கள்ளிக்குப்பம், மேனாம்பேடு ஆகிய பகுதி மக்களுக்கும், கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணி செய்யும் பணியாளர்களுக்கும் தொடருந்து சேவை அளிக்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 19.18 மீட்டர் உயரத்தில் அம்பத்தூரிலுள்ள வரதராஜபுரத்தில் அமைந்துள்ளது.

அம்பத்தூர்
தென்னக இரயில்வே
மறுவளர்ச்சிபடுத்தப்பட உள்ள அம்பத்தூர் ரயில் நிலையத்தின் திட்டமிடப்பட்ட பிரதான நுழைவாயில்
பொது தகவல்கள்
அமைவிடம்வரதராஜபுரம், அம்பத்தூர், சென்னை, தமிழ் நாடு, இந்தியா (பாரதம்)
ஆள்கூறுகள்13°06′52″N 80°09′09″E / 13.114342°N 80.152524°E / 13.114342; 80.152524
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய ரயில்வே
தடங்கள்சென்னை புறநகர் இருப்புவழி.
நடைமேடை3
இருப்புப் பாதைகள்8
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைவழக்கமான தரைதள தொடர்வண்டி நிலையம்
தரிப்பிடம்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுABU[1]
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்29 நவம்பர் 1979
முந்தைய பெயர்கள்தென்னக இரயில்வே
பயணிகள்
பயணிகள் 201350,000
அமைவிடம்
அம்பத்தூர் is located in இந்தியா
அம்பத்தூர்
அம்பத்தூர்
இந்தியா இல் அமைவிடம்
அம்பத்தூர் is located in தமிழ் நாடு
அம்பத்தூர்
அம்பத்தூர்
அம்பத்தூர் (தமிழ் நாடு)


வரலாறு

[தொகு]
பெயர் பலகையுடன் கூடிய நடை மேடை எண் 1 (நிலையத்தின் மேற்குப்புறம்)

இந்நிலையத்தில் 21 ஜனவரி 1946 அன்று மாலை 4.15 மணிக்கு மகாத்மா காந்தி காமராஜாரால் வரவேற்கப்பட்டார. பிறகு நிலையத்தை பார்வையிட்டனர்.

இந்நிலையத்தின் முதல் இருப்புப்பாதை, 1979 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் பிரிவில் மின்சாரமயமாக்கப்பட்டது. நிலையத்தில் கூடுதல் இருப்புப்பாதை அக்டோபர் 2, 1986 அன்று, வில்லிவக்கம்-திருநின்றவூர் பிரிவின் மின்மயமாக்கலுடன் மின்மயமாக்கப்பட்டன.

தளவமைப்பு

[தொகு]
விரைவு ரயில்களுக்கான இருப்புப்பாதை வலது புறத்தில் (மேற்கு நோக்கி எடுக்க பட்ட புகைப்படம்)
நிலையத்தின் புறநகர் ரயில்களுக்கான இருப்புப்பாதை (மேற்கு நோக்கி எடுக்க பட்ட புகைப்படம்)

அம்பத்தூர் தொடருந்து நிலையத்தில் மொத்தமாக 8 இருப்புப்பாதைகளும் அதில் 4 துணை இருப்புப்பாதையாக செயல்படுகிறது. நிலையத்தின் 1 மற்றும் 2 வது நடைமேடை புறநகர் ரயில்களுக்காக மட்டுமே உபயோகப்படுகிறது. 3 வது நடைமேடை உள்ளுர் துரித வண்டிகளுக்கும், விரைவு வண்டிகளுக்கும் உபயோகப்படுகிறது. முதல் நடைமேடை ஒரு பக்க மேடை side platform மற்றும் நிலையத்தின் நுழைவாயில் மற்றும் பயணச்சீட்டு வழங்கும் இடத்தைக் கொண்டுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைமேடை, island platform தீவு தள நடைமேடையாக உள்ளது. நடைமேடைகள் நடைமேம்பாலம், footbridge மூலம் இணைக்கப்பட்டுள்ளன. லெவல் கிராசிங்கில் கட்டப்பட்ட இரண்டாவது நடை மேம்பாலம் அக்கம்பக்கத்தின் வடக்கு மற்றும் தெற்குப் பக்கங்களை இணைக்கிறது. 2001 ஆம் ஆண்டில், தெற்கு ரயில்வே {{INR},400,000 செலவில் லெவல் கிராசிங்கில் நடைபாதையை மேம்பாலம் புதுப்பித்தது. [2]

இந்த நிலையத்தில் புறநகர் தொடருந்துகளுக்கான மூன்று நடைமேடைகள் உள்ளன.சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையேயான மேற்குத் தடம் தொடருந்துப் பாதையில் (West line) சராசரியாக 280 நடை பயணங்கள் நிகழ்கிறது. 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தத் தொடருந்து நிலையத்தில் அதிகமாக புறநகர் வண்டிகளுக்கான பயணச்சீட்டுகள் விற்பனையாகிறது. ஒவ்வொரு நாளும் 70,000 க்கும் அதிகமான பயணிகளை கையாளுகிறது அம்பத்தூர் தொடருந்து நிலையம்.

வசதிகள்

[தொகு]

அம்பத்தூர் தொடருந்து நிலையத்திற்கு அருகில் பேருந்து நிலையமும், 'ஆட்டோ ரிக்சா', 'டாக்ஸி' நிறுத்தும் இடமும் உள்ளது. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் உள்ளன.

வளர்ச்சி

[தொகு]

இந்நிலையத்தில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீண்ட தொலைவு செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு மையம் திறக்கப்பட்டது மேலும் நடைமேடை விரிவாக்கத்திற்கும் [3] ஒரு சில விரைவு வண்டிகள் நின்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

[தொகு]

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [4][5][6][7]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, அம்பத்தூர் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 21.67 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[8][9][10][11][12]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "அம்பத்தூர் தொடருந்து நிலையம்". Stationcode.net. பார்க்கப்பட்ட நாள் 1 Sep 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Bhattacharya, Saptarshi (17 June 2001). "Most foot overbridges at rail stations in a state of disuse". The Hindu (Chennai: The Hindu) இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125071554/http://hindu.com/2001/06/17/stories/04174019.htm. பார்த்த நாள்: 26 Aug 2012. 
  3. Madhavan, D. (21 July 2019). "Extension of Ambattur Railway Station platforms put on a fast track". The Hindu (Chennai: Kasturi & Sons): pp. 2 (DownTown). https://www.thehindu.com/news/cities/chennai/extension-of-ambattur-railway-station-platforms-put-on-a-fast-track/article28619274.ece. பார்த்த நாள்: 21 Jul 2019. 
  4. "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980. 
  5. https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
  6. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
  7. https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
  8. https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
  9. https://www.dtnext.in/news/city/upgradation-of-15-stations-in-chennai-division-under-amrit-bharat-station-scheme-762832
  10. https://sr.indianrailways.gov.in/cris//uploads/files/1705928319674-PRESS%20RELEASE%20-%20REDEVELOPMENT%20UNDER%20ABSS%20IN%20CHENNAI%20BEACH%20-%20CHENGALPATTU%20SECTION.pdf
  11. https://www.hindutamil.in/news/tamilnadu/1160597-ambattur-tiruvallur-railway-station-renovation-work-in-progress.html
  12. https://www.dinakaran.com/amrit-bharat-station-railway-stations-renovation/#google_vignette

வெளி இணைப்புகள்

[தொகு]

இந்திய இரயில்வேயின் அதிகாரப்பூர்வத் தளம்