சிறீ வெங்கடேசுவரா கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ வெங்கடேசுவரா கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம்
முந்தைய பெயர்
 • கால்நடை அறிவியல் கல்லூரி, பாபட்லா
 • கால்நடை அறிவியல் கல்லூரி, திருப்பதி
வகைபொது
உருவாக்கம்2005
வேந்தர்ஆந்திரப் பிரதேச ஆளுஞர் (ex-officio)
துணை வேந்தர்வேளுகோட்டி பத்மநாப ரெட்டி
அமைவிடம், ,
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்svvu.edu.in

சிறீ வெங்கடேசுவரா கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் (Sri Venkateswara Veterinary University) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியில் அமைந்துள்ள மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் 2005ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அரசால் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம்கால்நடை மருத்துவப் படிப்பு மற்றும் ஆய்வில் கவனம் செலுத்துகிறது.

வரலாறு[தொகு]

சிறீ வெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் 1955-ல் பாபட்லாவில் கால்நடை அறிவியல் கல்லூரியை நிறுவியதன் மூலம் தொடங்கியது. பின்னர் 1957-ல் திருப்பதிக்கு மாற்றப்பட்டது.

செப்டம்பர் 2004-ல் கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டத்தின் போது, அப்போதைய ஆந்திரப் பிரதேச முதல்வர் பல்கலைக்கழகத்தை நிறுவுவதாக அறிவித்தார். இக்கல்லூரி பல்கலைக்கழகமாக மார்ச் 30, 2005 அன்று நிறைவேற்றப்பட்ட சிரீ வெங்கடேசுவரா கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சட்டம், 2005[1] மூலம் செயல்பாட்டிற்கு வந்தது. 2005 ஜூலை 15 அன்று எ. சா. ராஜசேகர் ரெட்டியால் இப்பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. ஆச்சார்யா என். ஜி. ரங்கா வேளாண்மைப் பல்கலைக்கழக கால்நடை அறிவியல் துறையின் செயல்பாடுகளை இப்பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.[2]

துணை வேந்தர்[தொகு]

பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் அவர்கள் பொறுப்பேற்ற நாளுடன்:[2]

 • பிரியதர்ஷி தாஷ்: 5 ஆகஸ்ட் 2005 (சிறப்பு அதிகாரி)
 • மன்மோகன் சிங்: 25 மே 2006 சிறப்பு அதிகாரியாக, 15 செப்டம்பர் 2006 துணைவேந்தராக, 12 நவம்பர் 2007 துணைவேந்தர் பொறுப்பு.
 • டி. வி. ஜி.கிருஷ்ண மோகன்: 14 ஏப்ரல் 2008
 • முகமது அபீசு: 12 ஜனவரி 2010 (பொறுப்பு)
 • வி. பிரபாகர் ராவ்: 27 அக்டோபர் 2010
 • மன்மோகன் சிங்: 31 அக்டோபர் 2013
 • ஒய். அரி பாபு: 17 ஏப்ரல் 2017[3]
 • பூனம் மலகொண்டையா: 17 ஏப்ரல் 2017 (பொறுப்பு)
 • வேலுகோடி பத்மநாப ரெட்டி: 5 ஆகஸ்ட் 2020[4]

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்[தொகு]

 • கண்ணேபோயின நாகராஜு, பேராசிரியர், பிங்காம்டன் பல்கலைக்கழகம்[5]

மேற்கோள்கள்[தொகு]

 

வெளி இணைப்புகள்[தொகு]