இந்திய உணவக நிறுவனம், திருப்பதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய உணவக நிறுவனம், திருப்பதி (ஐசிஐ-திருப்பதி)(Indian Culinary Institute, Tirupati (ICI-Tirupati) என்பது ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டம் திருப்பதியில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தால் இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் உணவக மேலாண்மை நிறுவனம் ஆகும். இது அலிபிரையில் மாநில உணவக மேலாண்மை நிறுவன வளாகத்தில் தற்காலிகமாக 2016-17 கல்வியாண்டில் வகுப்புக்கள் தொடங்கியது. இந்நிறுவனத்தின் மாணவர் சேர்க்கை கூட்டு நுழைவுத் தேர்வு மூலம் நடைபெறுகிறது. 2018ஆம் ஆண்டில் திருப்பதி விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இதன் வளாகத்திற்குக் கட்டடப் பணிகள் முடிவடைந்ததும் மாற்றப்பட்டது. இதே ஆண்டில் உணவக ஆர்வலர்களுக்கா நொய்டாவில் வளாகத்தையும் திறந்தது.

2019-20 கல்வியாண்டிலிருந்து இரண்டு வளாகங்களிலும் முதுநிலை வணிக நிர்வாகம் உணவக மேலாண்மை படிப்பில் மாணவர் சேர்க்கைத் தொடங்கியது.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]

 

வெளி இணைப்புகள்[தொகு]