தேசிய சமசுகிருதப் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை | Tamasoma Jyotirgamaya |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Lead me into light from darkness |
வகை | மத்தியப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1956 |
வேந்தர் | என். கோபாலசாமி |
துணை வேந்தர் | வி. முரளிதரா சர்மா[1] |
அமைவிடம் | , , |
இணையதளம் | www |
தேசிய சமசுகிருதப் பல்கலைக்கழகம் (National Sanskrit University) என்பது முன்பு இராஷ்ட்ரிய சமசுகிருத வித்யாபீடம் என்று அழைக்கப்பட்டது. இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியில் உள்ள மத்திய பல்கலைக்கழகமாகும்.[2][3]
வரலாறு
[தொகு]சமசுகிருத ஆய்வுகள், பாரம்பரிய சாத்திரங்கள் மற்றும் கல்வியியல் ஆகியவற்றைப் பரப்புவதற்காக இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் 1956-ல் பள்ளியாக நிறுவப்பட்டது. தற்பொழுது இப்பல்கலைக்கழகம் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையினால் முதல் தரச் சான்று பெற்றுள்ளது.
பாரம்பரிய சாஸ்திரங்களில் அதன் சாதனைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான திறனைக் கருத்தில் கொண்டு, 1989ஆம் ஆண்டு பத்தாண்டு திட்டக் காலத்தில், பாரம்பரிய சாத்திரங்களில் சிறந்து விளங்கும் மையம் என்ற தகுதி இப்பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது.
மார்ச் 2020-ல், மத்திய சமசுகிருதப் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீலால் பகதூர் சாசுதிரி தேசிய சமசுகிருதம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களுடன், மத்தியப் பல்கலைக்கழகமாக ராசுட்ரிய சம்சுகிருத வித்யாபீடத்தை தேசிய சமசுகிருத பல்கலைக்கழகமாக மேம்படுத்துவதற்கான மத்திய சமசுகிருத பல்கலைக்கழக சட்டம், 2020 இந்திய நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது.[4]
பொதுப் படிப்பு
[தொகு]1. பட்டப் படிப்பு
[தொகு]- ப்ராக்-சாஸ்திரி (சம. முதல் +2/இடைநிலை)
- சாஸ்திரி ஆனர்ஸ் (சம. முதல் பி.ஏ )
- சாஸ்திரி வேதபாஷ்ய (சம. முதல் பி.ஏ )
- பி. ஏ. ஹான்ர்சு
- பி. எஸ்சி. (கணினி அறிவியல்)
2. முதுகலை படிப்புகள்
[தொகு]- 14 சாத்திரங்களில் ஆச்சார்யா (எம். ஏ. முதல்).
- சமசுகிருதத்தில் எம்.ஏ (சப்தபோதா அமைப்புகள் மற்றும் மொழி தொழில்நுட்பம்)
- எம். எஸ்சி. கணினி அறிவியல் & மொழி தொழில்நுட்பத்தில்
- இந்தியில் எம். ஏ
பல்கலைக்கழக மானியக் குழுவின் புதுமையான திட்டங்களின் கீழ்
- உலகளாவிய பார்வையில் ஒப்பீட்டு அழகியலில் பட்டப்படிப்பிற்கு பிந்திய பட்டயப்படிப்பு (சாஹித்யா)
- பண்டைய இந்திய மேலாண்மை நுட்பங்களில் முதுநிலைப் படிப்பு
3. ஆராய்ச்சி திட்டங்கள்
[தொகு]- ஆய்வியல் நிறைஞர் கையெழுத்து இயல் மற்றும் பேலியோகிராபி உட்பட 11 பாடங்களில்
- ஆய்வியல் நிறைஞர் (கல்வி)
- அனைத்து சாத்திரங்கள்/சாகித்தியம்/கல்வி ஆகியவற்றில் வித்யாவாரிதி (=முனைவர் பட்டம்).
- அனைத்து சாத்திரங்களிலும் கல்வியிலும் வித்யாவசஸ்பதி (=டி. லிட்.).
4. தொழில்முறை படிப்புகள்
[தொகு]- சிக்ஷா சாஸ்திரி (=பி. எட்.)
- சிக்ஷா ஆச்சார்யா (=எம். எட்.)
மாலை மற்றும் பகுதி நேர படிப்பு
[தொகு]1. பட்டப் படிப்பிற்கு பிந்தைய படிப்புகள்
[தொகு]- யோகவிஜ்ஞன்
- இயற்கை மொழி செயலாக்கம்
- இணைய தொழில்நுட்பம்
2. பட்டயப் படிப்புகள்
[தொகு]- கோவில் கலாச்சாரம்
- பௌரோஹித்யா
- சமசுகிருதம் & சட்டம்
- கிழக்கத்திய நோக்குநிலை மேலாண்மை
3. சான்றிதழ் படிப்புகள்
[தொகு]- கோவில் கலாச்சாரம்
- பௌரோஹித்யா
- செயல்பாட்டு ஆங்கிலம்
- ஜோதிஷா
- மின் கற்றல்
4. கூடுதல் படிப்புகள்
[தொகு]பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவியுடன் வித்யாபீடம் பின்வரும் தொழில் சார்ந்த படிப்புகளைக் கூடுதல் படிப்புகளாக வழங்குகிறது.
- புராணேதியாசா
- வாஸ்து சாஸ்திரம்
மேலும் பார்க்கவும்
[தொகு]- இந்திய மத்தியப் பல்கலைக்கழகங்கள்
- மத்தியப் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு
- தேசியத் தேர்வு முகமை
- என். எஸ் ராமானுஜ டட்டச்சார்யா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Governing bodies-official website
- ↑ "RSVP holds common entrance test for Sanskrit varsities". The Hindu, A.D. RANGARAJAN 22 June 2015
- ↑ "Tirupati Rashtriya Sanskrit Vidyapeetha salvages Andhra Pradesh’s pride". Deccan Chronicle. 14 November 2014. https://www.deccanchronicle.com/141114/nation-current-affairs/article/tirupati-rashtriya-sanskrit-vidyapeetha-salvages-andhra.
- ↑ "Central Sanskrit Universities Act, 2020". The Gazette of India (இந்திய அரசு). 25 March 2020. http://www.sanskrit.nic.in/uploads/2020_05_09_VC/The_Central_Sanskrit_Universities_Act_2020.pdf.