உள்ளடக்கத்துக்குச் செல்

மத்தியப் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மத்தியப் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test (CUET), இந்திய அரசு நடத்தும் 54 இந்திய மத்தியப் பல்கலைகழகங்களில் உள்ள இளநிலை படிப்புகளில், 1.68 இலட்சம் மாணவர்களை சேர்ப்பதற்கான பொது நுழைத்தேர்வாகும்[1]. இந்த நுழைவுத் தேர்வு 2020 தேசியக் கல்விக் கொள்கையின்படி அகில இந்திய அளவில் 2022 - 2023 கல்வி ஆண்டு முதல் நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு 20 மார்ச் 2022 அன்று அறிவித்துள்ளது.

2022-ஆம் ஆண்டிற்கான பொது நுழைவுத் தேர்வு விவரங்கள்

[தொகு]

2022-ஆம் ஆண்டிற்கான பொது நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு நாட்கள் அறிவிக்கப்படவில்லை. எனினும் தேர்வுக்கான விண்ணப்பத் தளம், ஏப்ரல் முதல் வாரத்தில் செயல்பாட்டுக்கு வருகிறது. இதன் முதல் நுழைவுத் தேர்வு வரும் 2022-ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் வாரத்தில் நடைபெறும். கணினி வழியில் மூன்றரை மணி நேரம் தேர்வுகள் நடைபெறும். நுழைவுத் தேர்வில் உள்ள அனைத்து கேள்விகளும் 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். எனவே மாணவர்கள் என்சிஇஆர்டி பாடநூல்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். இந்த நுழைவுத் தேர்வை இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, பெங்காலி, பஞ்சாபி, அசாமி, ஒடியா உள்ளிட்ட 13 மொழிகளில் தேசியத் தேர்வு முகமை நடத்தும். பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு எந்த மதிப்பும் இந்த நுழைவுத் தேர்வின் போது வழங்கப்படாது.[2]

நுழைவுத் தேர்வு மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கும். முதலாவது மொழிப் பாடம், இரண்டாவது சிறப்புப் பாடங்கள், மூன்றாவது பொது அறிவு மற்றும் பகுத்தறிவு. தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் கொண்டிருக்கும். [3][4]

விமர்சனங்கள்

[தொகு]

அந்தந்த மாநிலங்களின் பாடத்திட்டங்களில் படித்த மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இந்த நுழைவுத் தேர்வால் எப்பயனும் இல்லை என்று கல்வியாளர்கள் கருகின்றனர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]