திருமலை மலைச் சாலைகள்
திருமலை மலைச் சாலைகள் | |
---|---|
![]() திருப்பதி- திருமலை மலைச்சாலை | |
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு திருமலை திருப்பதி தேவஸ்தானம் | |
நீளம்: | 19 km (12 mi) |
பயன்பாட்டில் இருந்த காலம்: | 1944 – present |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | திருப்பதி, சித்தூர் மாவட்டம் |
அலிபிரி | |
To: | திருமலை, சித்தூர் மாவட்டம் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
திருமலை மலைச் சாலைகள் (Tirumala ghat roads) என்பது திருப்பதி மற்றும் திருமலை இடையேயான இரண்டு நிலக்கீல் செங்குத்தான இயற்கை சரிவுகளால் ஆன மலைப் பகுதி சாலைகள் ஆகும். இவரி கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சேசாசலம் மலைத்தொடரில் உள்ளன.[1]
பாதை விளக்கம்[தொகு]
இரண்டு மலைச் சாலைகளும் இரட்டை தடப் பாதைகள் ஆகும். இவை மலைகள் மேலே செல்லவும் மலையிலிருந்து கீழே இறங்கவும் வெவ்வேறு பாதைகளாக அமைக்கப்பட்டுள்ளன. பழைய மலைப் பாதை 1944-ல் அமைக்கப்பட்டது. மற்றொன்று 1974-ல் அமைக்கப்பட்டது. திருமலையிலிருந்து திருப்பதிக்கு வாகனங்கள் செல்ல பழைய மலைச் சாலையும், திருப்பதியிலிருந்து திருமலைக்கு புதிய மலைச் சாலையும் பயன்படுத்தப்படுகின்றன. திருமலை மலையில் ஏறுவதற்கான பாதை அலிபிரியில் தொடங்குகிறது. மேலும் இங்கு அஞ்சலி தோரணையில் பிரமாண்டமான கருடன் சிலை உள்ளது. ஒவ்வொரு சாலையும் தோராயமாக 19 கி. மீ. நீளமுடையதாகும். இச்சாலைகளில் 36க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. திருமலை வெங்கடாசலபதி கோயிலை அடைய சுமார் 40 நிமிடங்கள் ஆகும்.[2]
வடிவமைப்பு[தொகு]
அடர்ந்த காடுகளின் வழியாக 12 மைல் தூரம் மலைகள் மற்றும் குறுக்கே வளைந்து செல்லும் பழைய மலைச் சாலையின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் திவான் பகதூர் ஏ. நாகேசுவர ஐயர் அவர்களால் மிகவும் பொறியியல் திறமை மற்றும் திறனுடன் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பு: தி இந்து. தேதி: ஏப்ரல் 11, 1944.
குறிப்பு: தி இந்து. தேதி: மே 16, 2006 [1]
சுங்கச் சாவடி[தொகு]
அலிபிரியில், பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளிடம் இருந்து மலைகளைப் பாதுகாக்க, திருமலைக்குள் வரும் வாகனங்கள் மற்றும் பக்தர்களைச் சோதனையிடுவதற்காகச் சுங்கச்சாவடி மற்றும் பாதுகாப்பு மண்டலம் ஏற்படுத்தப்பட்டது.[3]
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Tirupati to Tirumala by Road". http://www.tirumala.org/TirupatitoTirumalaByRoad.aspx.
- ↑ Shantha, Nair (2013). Sri Venkateswara. Mumbai: Jaico Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788184954456. https://books.google.com/books?id=CY9eAAAAQBAJ.
- ↑ "New security set-up at Alipiri". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/new-security-setup-at-alipiri/article188746.ece.