ஸ்ரீ வெங்கடேசுவரா விலங்கியல் பூங்கா

ஆள்கூறுகள்: 13°37′30″N 79°21′53″E / 13.6249°N 79.3646°E / 13.6249; 79.3646
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ வெங்கடேசுவரா விலங்கியல் பூங்கா
இந்திய மயில் ஸ்ரீ வெங்கடேசுவரா விலங்கியல் பூங்காவில்
திறக்கப்பட்ட தேதி1987
இடம்திருப்பதி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பரப்பளவு5,532 ஏக்கர்கள் (2,239 ha)
அமைவு13°37′30″N 79°21′53″E / 13.6249°N 79.3646°E / 13.6249; 79.3646
முக்கிய காட்சிகள்யானை, மயில், கடமான், கிளி, சிறுத்தை, சிங்கம், கரடி, வெள்ளைப் புலி & முதலை,[சான்று தேவை]

ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்கா (Sri Venkateswara Zoological Park) இந்தியாவின் ஆந்திராவின் திருப்பதியில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

இந்த உயிரியல் பூங்கா 29 செப்டம்பர் 1987இல் நிறுவப்பட்டது.[1] இந்த உயிரியல் பூங்கா 5,532 ஏக்கர்கள் (22.39 சதுர கிலோமீட்டர்கள்) பரப்பளவில் அமைந்துள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய விலங்கியல் பூங்காவாகும். [2]

விலங்குகள்[தொகு]

மிருகக்காட்சிசாலையின் முக்கிய அம்சங்கள்:

இந்த மிருகக்காட்சிசாலையில் 'பாலாஜி' என்று அழைக்கப்படும் அதிக எடையுடன் கூடிய சிறுத்தை ஒன்று இருந்தது, இதன் எடை 139–143 kg (306–315 lb) (சாதாரண எடை 70 kg (150 lb). 1996இல் பிடிக்கப்பட்டபோது பாலாஜியின் வயது 12 எடை வயதில் 108–113 kg (238–249 lb) ஆகும். இச்சிறுத்தை தினமும் 4 kg (8.8 lb) மாட்டிறைச்சியினை, மிருகக்காட்சிசாலையில் உள்ள மற்ற சிறுத்தைகளைப் போலவே உண்ணுகிறது. பூங்காவின் நிர்வாகம் கின்னஸ் புத்தக அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்தனர்.[3] நோய் மற்றும் முதுமை காரணமாக, 11 ஜூன் 2013 அன்று தனது 27 வயதில் பாலாஜி இறந்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]