வெள்ளைப் புலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெள்ளைப் புலி
White Tiger.png
வெள்ளைப் புலி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: Felidae
பேரினம்: Panthera
இனம்: P. tigris
இருசொற் பெயரீடு
Panthera tigris
(லின்னேயஸ், 1758)
துணையினம்

பி.டி.டிக்ரிசு
பி.டி.கோர்பெட்டி
பன்தெரா டிக்ரிசு ஜாக்சொனி
பி.டி.சுமாத்ரே
பன்தெரா டிகிரிசு அல்டாய்க்கா
பன்தெராடிகிரிசு அமோயென்சிசு
பன்தெரா டிகிரிசு விர்காட்டா
பி.டி.பாலிக்கா
பி.டி.சொண்டாய்க்கா

Tiger map.jpg
புலிகளின் வரலாற்றுப் பரம்பல் (இளம் மஞ்சள்), 2006 (பச்சை).[2]
வேறு பெயர்கள்
Felis tigris லின்னேயஸ், 1758[3]

Tigris striatus செவெர்த்சொவ், 1858

Tigris regalis கிரே, 1867

வெள்ளைப் புலி (White tiger) என்பது அரியவகை மரபணுவுடன் கூடிய ஒருவகை புலி வகையாகும். வெள்ளைப் புலிகள் அதன் வரிகளுடன் கூடிய வெண்மை நிறத்தைப் பெற இந்த மரபணுவே காரணமாகும். வெள்ளைப் புலிகள் செம்மஞ்சள் நிறப்புலிகளுடனும் இனப்பெருக்கம் செய்யும். இதனால் அவற்றின் ரோமங்கள் செம்மஞ்சள் நிறத்தில் உருவாகிவிடும். ஒரேயொரு விதிவிலக்கு என்னவென்றால், செம்மஞ்சள் நிற புலிகள் ஏற்கனவே ஒரு கலப்பினப் புலியாக இருக்கும்பட்சத்தில், ஒவ்வொரு குட்டியும் அரிய வகை வெள்ளைப்புலியாகவோ அல்லது செம்மஞ்சள் நிற புலியாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கக்கூடிய 50% வாய்ப்பு இருக்கிறது.

இரண்டு வேறுபட்ட கருமுட்டைகளைக் கொண்ட புலிகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் போது, அவற்றின் வழிதோன்றல்கள் வெள்ளைப் புலிகளாக இருக்க 25% வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் செம்மஞ்சள் நிற கலப்பின புலிகளாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. 1970ஆம் ஆண்டில், ஷாசி மற்றும் ரவி என்று பெயரிடப்பட்ட செம்மஞ்சள் நிற புலிகள் ஜோடி, அலிப்போர் மிருகக்காட்சிசாலையில் 13 குட்டிகளை ஈன்றன; அவற்றின் மூன்று வெள்ளைப் புலிக்குட்டிகளாகும்.[4]

இரண்டு வெள்ளை புலிகள் இனப்பெருக்கம் செய்தால், 100 சதவீதம் அவற்றின் குட்டிகள் ஒத்தப்புணரி வெள்ளைப் புலிகளாகவே இருக்கும். ஒரேகுடும்பத்தைச் சேர்ந்தவைகளுக்கு இடையிலான புணர்ச்சியானது, ஒத்தப்புணரித்தன்மையை அதிகரிக்கிறது.

வெள்ளை மரபணுக்கள் இல்லாத செம்மஞ்சள் நிற புலிகளோடு ஒப்பிடும் போது, பிறக்கும் போதும் சரி, பருவமடைந்த நிலையிலும் சரி வெள்ளைப் புலிகள் அளவில் மிகவும் பெரிதாக இருக்கின்றன.[5] அவற்றின் வித்தியாசமான நிற அமைப்பிற்கு அப்பாற்பட்டு, அளவில் பெரிதாக இருப்பதும் அவற்றிற்கு ஒருவகையில் ஆதாயமாகவே இருக்கின்றன. இத்தன்மை அவற்றை பயங்கரமாக எடுத்துக்காட்டுகின்றன.

1960-களில் புதுடெல்லி மிருகக்காட்சிசாலையின் இயக்குனர், கைலாஷ் ஷன்கலா கூறுகையில், "வெள்ளை மரபணு தேவையில்லை என்றாலும் கூட, அதன் கூட்டத்திடையே ஓர் அளவிற்கு மரபணுவைத் தக்க வைத்திருப்பதும் அவசியமாகும்" என்றார்.[6]

தற்போது, உலகளவில் பலநூறு வெள்ளைப்புலிகள் பிடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சுமார் 100 புலிகள் இந்தியாவில் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வெள்ளைப்புலிக்கான அரியவகை மரபணுக்கள் வங்காளப் புலிகளிடம் இருந்து மட்டும் தான் வந்ததா அல்லது பிற சைபீரிய மூதாதையர்களிடம் இருந்தும் வந்ததா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.

வெள்ளைப்புலிகளின் இந்த வித்தியாசமான நிறஅமைப்பின் காரணமாக, இவை மிருகக்காட்சிசாலைகளிலும், ஏனைய பொழுதுபோக்கு மையங்களிலும் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இரண்டு வெள்ளைப்புலிகளை உயிர்கலப்பு செய்விப்பதிலும், அவற்றை வித்தைகளைச் செய்து காட்ட பயிற்சி அளிப்பதிலும் சீய்க்ஃபெரட் & ராய் மிகவும் பிரபலமானவர்கள்.

ரோன் ஹாலிடே, ஜாய் ஹாலிடே மற்றும் சக் லிஜ்ஜா ஆகிய முப்பெரும்குழு புலிகளைக் கொண்டு வித்தைக் காட்டும் நிகழ்ச்சி ஒன்றை HBO ஆவணப்படமாக செய்தார்கள். அவர்கள் ஒரு வெள்ளைப்புலியுடன் இந்த நிகழ்ச்சியை நடத்திய போது அதில் இரண்டு நபர்கள் கொல்லப்பட்டார்கள்.

காடுகளில் வெள்ளைப்புலிகள்[தொகு]

சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலையில் இரண்டு வெள்ளை வங்காளப்புலிகள்

1909, நவம்பர் 15-ல், Journal Of The Bombay Natural History என்பதில் ஒரு கட்டுரை வெளியானது. ஒரிசாவில் உள்ள தென்கனால் மாவட்டத்தின் முலின் துணை-பிரிவு காட்டில் ஒரு வெள்ளைப் பெண்புலி சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்த கட்டுரை குறிப்பிட்டது. இந்த அறிவிப்பு முன்னதாக, 1909 மே மாதமே, Indian Forester என்பதில், காட்டிலாக்கா அதிகாரி திரு. பாவிஸ் சிங்கினால் வெளியிடப்பட்டிருந்தது. ஓர் எருமையைக் கொல்வதற்கான முயற்சியில் அந்த வெள்ளைநிறப் பெண்புலி சுடப்பட்டுவிட்டதாகவும், அப்போது அது "எவ்வித நோயின் அறிகுறியும் இல்லாமல் நல்ல நிலையில் இருந்ததாகவும்" தெரிவிக்கப்பட்டிருந்தது.

Col. F.T. பொல்லக், பர்மா மற்றும் அசாம்களில் நடக்கும் காட்டு விளையாட்டுக்கள் என்பதில் எழுதுகையில், "விம்போல் தெருவில் எட்வின் வார்டுகளில் ஒரு புலியின் பருத்த தோலை நான் பார்த்திருக்கிறேன். மேலும் கோஸ்யாஹ் மற்றும் ஜின்தெஹ் மலையின் துணை ஆய்வாளர் திரு. ஷாத்வாலும் கூட இரண்டு முழு வெள்ளை நிறத்திலான தோல்களை வைத்திருக்கிறார்" என்றார். இந்தியாவில் மிருக விளையாட்டு (1907) என்ற புத்தகத்தில் திரு. லெடெக்கர் வெள்ளைப் புலிகளின் சுமார் ஐந்து வகையான தோல்களைப் பற்றி எழுதியுள்ளார்."[7] 1820-ல் இலண்டனின் எட்சீற்றர் சேன்ஜில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளைப்புலி தான் ஐரோப்பாவிலேயே முதல் வெள்ளைப்புலி ஆகும்.

இந்திய மிருகங்கள் பற்றிய புத்தகம் என்பதில் S.H. பிரேட்டர் எழுதுகையில், "முழுவதும் வெள்ளையாக இருக்கும் அல்லது சிறிதளவிற்கு வெள்ளையாக இருக்கும் புலிகள் பொதுவாக மத்திய இந்தியாவின் திறந்தவெளி வறண்ட காடுகள் சிலவற்றில் காணப்படுவதில்லை" என்று குறிப்பிட்டார்.[8] வெள்ளைப்புலிகளால் காடுகளில் உயிர்வாழ முடியாது என்பது வெறும் கட்டுக்கதை தான். ரீவாவிற்கு அருகிலுள்ள சிறப்பு மண்டலத்தில் இருக்கும் காடுகளுக்குள் பிடிபட்ட-கலப்பின வெள்ளைப் புலிகளை மீண்டும் கொண்டு போய்விட இந்தியா திட்டமிட்டது.[9]

மத்திய இந்தியாவில் காட்டு விலங்குகள் என்ற புத்தகத்தில் A.A. உடுன்பார் பிரேன்டர் எழுதுகையில், "வெள்ளைப்புலிகள் எப்போதாவது தான் கண்ணில் தென்படுகின்றன. ரீவா அரசு பகுதியிலும், மாண்டலா மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களின் சந்திப்புகளிலும், அமர்கன்தக்கிற்கு அருகில் இந்த மிருகங்கள் வழக்கமாக இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. 1919-ஆம் ஆண்டு நான் கடைசியாக மாண்டலாவில் இருந்த போது, ஒரு வெள்ளைப்பெண் புலியும், இரண்டு மூன்று வளர்ந்த வெள்ளைப்புலி குட்டிகளும் இருந்தன. 1915-ஆம் ஆண்டு ஓர் ஆண் வெள்ளைப்புலி ரீவா அரசால் பிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டது. இந்திய காவல்துறையில் பணியாற்றிய திரு.ஸ்காட்டால் எழுதப்பட்ட மிருகங்களைப் பற்றிய விபரங்கள், பம்பாய் இயற்கை வரலாற்று சமூகத்தின் இதழின் இருபத்தி ஏழாவது தொகுதியின் எண் 47-ல் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது" என்று குறிப்பிட்டார்.[10]

Journal Of The Bombay Natural History இதழில் இடம்பெற்றிருக்கும் இதரபிற குறிப்புகள்: "ரீவாவின் கூண்டில் இருந்த ஒரு வெள்ளைப்புலி, 1915 டிசம்பரில் சோஹாக்பூருக்கு அருகில் இருந்த காடுகளில் பிடிக்கப்பட்டது. அப்போது அதற்கு ஏறத்தாழ இரண்டு வயது இருக்கும். அந்த புலியோடு தொடர்புபட்ட மேலும் இரண்டு வெள்ளைப்புலிகளும் தெற்கு ரீவாவில் இருந்தன. ஆனால் இவற்றின் தாய் ஒரு வெள்ளைப்புலி கிடையாது என்று நம்பப்பட்டது... சுமார் 10 அல்லது 12 ஆண்டுகளுக்கு முன்னர், தெற்கு ரீவா, சோஹான்பூர் தாலுக்காவில் ஒரு வெள்ளைப்புலி ஒரு சீக்கியரால் கொல்லப்பட்டது. சாஹ்தோல் மற்றும் அன்னுப்பூர், B.N.Ry. ஆகிய இடங்களுக்கு அருகில் முரசடித்தப்போது மேலும் இரண்டு புலிகளும் பார்வைக்குத் தட்டுப்பட்டன. ஆனால் முந்தைய நீதிமன்ற ஆணைகளின்படி அவற்றை கொல்லக்கூடாது என்று இருந்தது. அன்னுப்பூரில் (பிலாம் துன்காரி காட்டில்) இருந்த ஒன்று, சிறைக்கூண்டில் இருந்த ஒன்றின் உடன்பிறப்பு என்று கூறப்பட்டது. இந்த வெள்ளைப்புலிகள் மத்திய மாவட்டங்களுக்கு அருகில் சுற்றிக் கொண்டிருப்பதாக தெரிகிறது."[11][12]

பர்மா மற்றும் மேகாலயாவின் ஜின்தேஹ் மலைகளில் வெள்ளைப்புலிகள் இருந்ததற்கான ஆதாரங்கள், 1900-ஆம் ஆண்டுகளில் பொல்லாக்கால் உருவாக்கப்பட்ட அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 1892 மற்றும் 1922-க்கு இடையில், பூனா, மேல் அசாம், ஒரிசா, பலிஸ்பூர் மற்றும் கூச் பிகார் ஆகிய இடங்களில் வெள்ளைப்புலிகள் சுட்டு கொல்லப்பட்டன. 1920கள் மற்றும் 1930களிலும் பல்வேறு பகுதிகளில் வெள்ளைப்புலிகள் சுட்டு கொல்லப்பட்டன. அதே காலகட்டத்தில் பிகாரிலும் பதினைந்து புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டன.

1943-ஆம் ஆண்டு வடக்கு சீனாவில் இருந்த வெள்ளைப்புலிகள் குறித்து விக்டர் H. சஹாலேன் நிறைய குறிப்பிட்டிருந்தார்.[13] எவ்வாறிருப்பினும், வெள்ளைப்புலிகள் வெளிறிய உயிரிகள் கிடையாது. வடக்கு சீனா மற்றும் கொரியாவிலும் வெள்ளைப்புலிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.[14][15]

இரண்டு செம்மஞ்சள் நிற குட்டிகளைக் கொண்டிருந்த ஒரு வெள்ளைப் பெண் புலியை ஜிம் கோர்பெட் காட்டில் படமெடுத்தார். இந்த படம் 1957-ஆம் ஆண்டு ஜிம் கோர்பெட்டினால் எழுதப்பட்டிருந்த புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். வெள்ளைப்புலிகள் காடுகளிலும் உயிர் வாழக்கூடியவை; அத்துடன் இனப்பெருக்கமும் செய்யக்கூடியவை என்பதற்கு இது மற்றொரு ஆதாரமாக இருக்கிறது. பந்தவ்கார்ஹ் தேசிய பூங்காவின் வலைத்தளத்தில், வெள்ளைப்புலிகளின் படங்கள் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வலைத்தளம் குறிப்பிடுவதாவது, "பந்தவ்கார்ஹின் காடுகள், முந்தைய ஆண்டுகளில் வெள்ளைப்புலிகளின் காடுகளாக இருந்தன" என்று குறிப்பிடுகிறது. இன்று, பந்தவ்கார்ஹில் 46 முதல் 52 வரையிலான செம்மஞ்சள் புலிகள் இருக்கின்றன. இது இந்தியாவிலேயே எந்த தேசிய பூங்காவிலும் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையாகும்.[16]

வெள்ளை சைபீரியன் புலிகள்[தொகு]

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் காட்டு சைபீரிய புலிக்கூட்டம் ஏறக்குறைய வழக்கத்தில் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டது.

ஒரு வெள்ளை வங்காளப்புலியின் இயற்கையான பிறப்பு இன்றும் கூட காட்டில் மிகவும் அரிய நிகழ்வாக தான் இருக்கிறது. 10,000 காட்டுப்புலிகள் பிறந்தால் அவற்றில் சுமார் ஒன்றேயொன்று தான் ஒரு வெள்ளைப்புலியாக இருக்க சாத்தியம் இருப்பதாக கணிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.

வெள்ளைப்புலியானது ஒரு துணைஉயிரின புலியாக கருதப்படுவதில்லை, மாறாக இப்போதிருக்கும் துணைஉயிரின புலிகளின் ஒரு சடுதிமாற்றத்தால் ஏற்பட்ட மாற்றமாகவே கருதப்படுகின்றன. வெள்ளைப்புலிகளின் பிரபலத்தன்மையால், அது பார்வையாளர்களை மிருகக்காட்சிசாலைக்குக் கவர்ந்திழுக்கிறது. அத்துடன் அது புலிகள் மற்றும் அவற்றின் சூழ்நிலைகள் பற்றிய விழிப்புணர்வை உயர்த்தவும் உதவுவதாக நம்பப்படுகிறது.

வரிகள் இல்லாத வெள்ளைப்புலிகளும், தங்கநிற வரிகளுடனான புலிகளும்[தொகு]

ஏறக்குறைய வரியில்லாத புலி, மிராஜில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது

மரபணு கூடுதலாக இருக்கும்பட்சத்தில் ஒரு வெள்ளைப்புலியின் மீதிருக்கும் வரிகளைக் கூட அது நீக்கிவிடக்கூடும். இதன் மூலம் அது முற்றிலுமாக வெள்ளை நிற மிருகமாக தோற்றமளிக்கும். 1820-ல் இங்கிலாந்தின் எக்சிட்டெர் சேலன்ஜில் இதுபோன்ற ஒரு புலி பொதுமக்களின் காட்சிக்கு கொண்டு வரப்பட்டது. "ஒரு வெள்ளைநிற புலியின் வரிகள் சிலநேரங்களில் ஒளியால் பிரதிபலிக்காமல், ஒளியின் சில குறிப்பிட்ட கோணங்களில் மட்டும் பிரதிபலிக்கும். மற்ற நிலைகளில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும்" என்று ஜார்ஜஸ் கூவியர் குறிப்பிடுகிறார்.[17] இயற்கைவாதியான ரிச்சர்டு லெடெக்கர் கூறுகையில், "இலேசான நிறத்துடனும், அதன் வழக்கமான வரிகள் சில பகுதிகளில் மங்கலாக பார்வைக்குத் தெரியும் வகையிலும் இருந்த ஒரு வெள்ளைப் புலி, சுமார் 1820-ஆண்டு எக்சிட்டெர் சேன்ஜின் பழைய மிருகக்காட்சிசாலையில் பொதுமக்களின் பார்வைக்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது" என்று தெரிவித்தார்.[18]

சின்சின்னாட்டி மிருகக்காட்சிசாலையில் இருந்த பீம் மற்றும் சுமித்ரா என்ற இரண்டு புலிகளின் குட்டிகளில் நான்கில் ஒன்று வரிகள் இல்லாமலேயே பிறந்தன. வரிகளைக் கொண்டிருந்த வெள்ளைநிற குட்டிகள், உலகெங்கிலும் இருக்கும் மிருகக்காட்சிசாலைகளுக்கு விற்கப்பட்டன. செக் குடியரசு, ஸ்பெயின் மற்றும் மெக்சிகோ போன்ற தொலைதூரங்களில் இருக்கும் மிருகக்காட்சிசாலைகளிலும் வரியில்லா வெள்ளைப்புலிகள் காணப்படுகின்றன. அரங்க மேஜிக்காரர்களான ஷெக்ஃபெரெட் & ராய் ஆகிய இருவரும் முதன்முதலில் வரியில்லாத புலிகளைத் தேர்ந்தெடுத்து புணர்ச்சியில் ஈடுபடுத்த முயற்சி செய்தார்கள்; அவர்கள் சின்சின்னாட்டி மிருகக்காட்சிசாலையில் இருந்து வெள்ளைநிற வங்காளப்புலிகளையும் (சுமுரா, மந்த்ரா, மிரேஜ் மற்றும் அக்பர்-காபூல்) மற்றும் கௌடலாஜாரா, மெக்சிகோ (விஷ்ணு மற்றும் ஜஹான்) ஆகியவற்றுடன் அப்பொல்லோ என்றழைக்கப்பட்ட வரியில்லாத சைபீரியன் புலியையும் வாங்கினார்கள்.[19]

2004-ல், நீல நிற கண்களுடன், வரியில்லாத வெள்ளைப்புலி ஒன்று ஸ்பெயினின் அலிகேண்டில் ஒரு காட்டுவாழ் முகாமில் பிறந்தது. சாதாரண செம்மஞ்சள் நிற வங்காளப்புலிகள் தான் அதன் பெற்றோர்கள். அந்த குட்டிக்கு ஆர்டிக்கோ (Artico) (அதாவது, "ஆர்டிக்") என்று பெயரிடப்பட்டது.

பீம் மற்றும் சுமித்தாவின் ஒரு மகளான சிய்ங்ஃபெரெய்ட்டும், ராயின் வரியில்லா வெள்ளைப் பெண்புலியான சித்தாராவும் பிரசவிப்பதற்கு முன்னால் வரைக்கும், வரியில்லாத வெள்ளைப்புலிகள் மலடுகளாகவே கருதப்பட்டன. வெள்ளைப் புலிகளிலிருந்து வழக்கத்தில் இல்லாத மங்கிய-செம்மஞ்சள் நிறப் புலிகளும் தோன்றின. இவை "தங்கநிற வரிகளுடனான புலிகள்" என்று அழைக்கப்பட்டன. இவை அரியவகையாக இருப்பதால், வரிகள் இல்லாத வெள்ளைப் புலிகளின் மரபணுக்களைக் கொண்ட செம்மஞ்சள் நிற புலிகளாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இந்தியாவில் இருக்கும் சில வெள்ளைப் புலிகள் மிகவும் வெளிறியத்தன்மையுடன் வெள்ளைக்கும், செம்மஞ்சளுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றன.

வரலாற்று ஆவணங்கள்[தொகு]

லூசியானா, நியூ ஆர்லியன்ஸில் உள்ள அடுபான் மிருகக்காட்சிசாலையில் இருக்கும் வெள்ளைப்புலி தூங்கி கொண்டிருக்கிறது.

1960-ஆம் ஆண்டிற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே ரீவாவின் வேட்டைக்காரர்கள் நாளேட்டில் 9 வெள்ளைப் புலிகளைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. பம்பாய் இயற்கை வரலாற்று சமூகத்தின் இதழின் குறிப்புப்படி, 1907-ஆம் ஆண்டு முதல் 1933-ஆம் ஆண்டுக்குள் 17 வெள்ளைப்புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டன.

1959-ஆம் ஆண்டு வரையில் காடுகளில் இருந்து 35 வெள்ளைப்புலிகளை ஈ.பி. ஜீ கணக்கெடுத்திருக்கிறார். இதற்கு மேலும் பல அசாமில் கணக்கிடப்படாமல் இருந்தன. அங்கே அவர் தேயிலை தோட்டம் வைத்திருந்தார். எவ்வாறிருப்பினும், அசாம் அதன் அடர்ந்த காடுகளுக்காக கருப்பு புலிகளுக்கு உகந்த வசிப்பிடமாக கருதப்பட்டது என்று ஜீ குறிப்பிட்டார். காட்டில் இருந்த சில வெள்ளைப்புலிகள், சிவப்புநிற வரிகளையும் கொண்டிருந்தன. இவை "சிவப்பு புலிகள்" என்று அழைக்கப்பட்டன. 1900-களின் தொடக்கத்தில் அசாமின் தேயிலை தோட்டத்தில் இரண்டு வெள்ளைப்புலிகள் சுட்டு கொல்லப்பட்டன. ஆர்தர் லூக், "இட்ரின்கானுவின் புலிகள்" (1954) என்பதில் எழுதுகையில் வெள்ளைப்புலிகள் குறித்து குறிப்பிடுகிறார்.

சில பகுதிகளில், இந்த புலிகள் அப்பகுதிக்கான பாரம்பரியத்தையும் உருவாக்குகின்றன. சீனாவில், மேற்கின் கடவுள், பைஹூ (ஜப்பானில் பியோக்கோ மற்றும் கொரியாவில் பியாக்-ஹோ ) என்று போற்றப்படுகின்றன. தென்கொரியாவில், ஒரு வெள்ளைப்புலியானது கொடியில் டியாகியூக் சின்னமாக பதிக்கப்படுகிறது - வெள்ளைப்புலி கொடூரத்தைக் குறிக்கிறது, எதிரில் இருக்கும் டிரேகன் நன்மையைக் குறிக்கிறது. இந்தியாவில், ஒரு வெள்ளைப் புலியானது இந்து கடவுளின் திரு அவதாரமாகவும், அதை கொன்றவர் யாரும் ஓர் ஆண்டுக்குள் இறந்துவிடுவார்கள் என்றும் நம்பப்பட்டது. ஜாவாவில் வெள்ளைப்புலியானது மறைந்து போன இந்து அரசர்களுடனும், ஆவிகளுடனும், ஆன்மாக்களுடனும் தொடர்புபடுத்தப்பட்டிருந்ததாக கருதப்பட்டது. இது பதினேழாம் நூற்றாண்டு நீதிமன்றத்தில் பாதுகாப்பு முத்திரையாகவும் இருந்தது.

கருமையான வரிகளுடன் கூடிய வெள்ளைப்புலிகள் இந்திய காடுகளில் மொகலாய சாம்ராஜ்ஜிய காலங்களின் (1556 - 1605) போது பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அக்பரின் 1590-ஆம் ஆண்டு ஓவியத்தில், குவாலியருக்கு அருகில் வேட்டையாடும் போது, நான்கு புலிகள் வரைந்து காட்டப்படுகின்றன. அவற்றில் இரண்டு வெள்ளைப்புலிகள்.[12] நீங்கள் இந்த ஓவியத்தை, http://www.messybeast.com/genetics/tigers-white.htm, என்ற வலைத்தளத்தில் பார்க்கலாம்.

இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் 1907-ஆம் ஆண்டிலிருந்து 1933-க்குள் வெள்ளைப்புலிகளைப் பற்றிய சுமார் 17 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஜனவரி 22, 1939-ஆம் ஆண்டில், நேபாளின் பிரதம மந்திரி நேபாளின் தேராயில் உள்ள பார்தா முகாமில் ஒரு வெள்ளைப்புலியைச் சுட்டுக் கொன்றார். கடைசியாக பார்க்கப்பட்ட காட்டு வெள்ளைப்புலி 1958-ல் சுட்டுக்கொல்லப்பட்டது. மேலும் அதிலிருந்து உருவான சடுதிமாற்ற உயிரினம் காட்டில் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.[9] அப்போதிருந்து இந்தியாவின் காடுகளில் வெள்ளைப்புலிகள் இருப்பதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. இருந்தும் எதுவும் நம்பும்படியாக இல்லை.

ஜிம் கோர்பெட் எடுத்த படத்தில்(1946)[20] இரண்டு செம்மஞ்சள் புலிக்குட்டிகளுடன் ஒரு வெள்ளைப் பெண்புலியும் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. வெள்ளைப்புலிகள் காடுகளில் உயிர் வாழ்ந்ததாகவும், இனப்பெருக்கம் செய்ததாகவும் அதில் எடுத்துக்காட்டப்பட்டிருந்தது. இந்த படம், "இந்தியாவின் மனித-உண்பிகள்" (1984) என்ற ஒரு நேஷனல் ஜியோகிராபிக் ஆவணப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது. இது கோர்பெட்டின் வாழ்க்கையைப் பற்றியும், அதே தலைப்பில் அவருடைய 1957 புத்தகத்தின் அடித்தளத்தில் எடுக்கப்பட்டிருந்தது.

1965-ல், மர்ஜோரி மெர்ரிவெதர் போஸ்டிடம் (Marjorie Merriweather Post) ஒரு வெள்ளைப்புலியின் தோலினால் செய்யப்பட்ட ஒரு பழைய ஆசனம் இருந்தது. இது வாஷிங்டன் டி.சி-யில் இருந்த அவருடைய ஹில்வுட் பண்ணையில் இருந்தது. தற்போது இது அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது. இந்த பொருளின் வண்ணப் புகைப்படம் லைஃப் இதழின் நவம்பர் 5, 1965 இதழில் வெளியிடப்பட்டது.[21] நேஷனல் ஜியோகிராபிக் பத்திரிக்கையின் அக்டோபர் 1975-ஆம் ஆண்டு இதழில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு மந்திரி அவருடைய அலுவலகத்தில் ஒரு பதப்படுத்தப்பட்ட வெள்ளைப்புலியின் புகைப்படம் வெளியிடப்பட்டது.[22] நடிகர் சீசர் ரோமிரோவும் ஒரு வெள்ளைப்புலியின் தோலை வைத்திருந்தார்.

வெகுஜன கலாச்சாரம்[தொகு]

இலக்கியங்கள், ஒளிப்பட விளையாட்டுக்கள், தொலைக்காட்சிகள், மற்றும் குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்களில் வெள்ளைபுலிகள் அதிகமாக இடம்பெறுகின்றன. ஸ்வீடனின் கென்ட் ராக் இசைக்குழுவை இதற்கோர் எடுத்துக்காட்டாகக் கூறலாம். 2002-ல் அவர்களால் வெளியிடப்பட்ட வாபென்&ஆம்யுனிஷன் (Vapen & ammunition) என்ற இசைத்தொகுப்பின் அட்டை படத்தில் அக்குழு வெள்ளைப் புலியை வெளியிட்டிருந்தது.

அமெரிக்காவின் பிரபல சின்த்-ராக் இசைக்குழுவான தி கில்லர்ஸ் என்பதால் ஒளிப்பதிவு செய்யப்பட்ட, ‘’மனிதர்கள்’’ என்ற பாடலில் வெள்ளைப் புலியும் இடம்பெற்றிருந்தது. 1980-ல் இருந்து ஓர் அமெரிக்க கிளாம் மெட்டல் (glam metal) வாத்தியக்குழுவின் பெயராகவும் வெள்ளைப் புலி இருந்து வந்தது.

அரவிந்த் அடிகாவின் ‘’வெள்ளைப் புலி’ என்ற நாவல் 2008-ல் புக்கர் பரிசை வென்றது. அதில் வரும் முக்கிய கதாபாத்திரமும் தன்னைத்தானே வெள்ளை புலி என்று குறிப்பிட்டுக் கொள்வதாக எழுதப்பட்டிருக்கிறது. அவர் குழந்தை பருவத்தில் தனிச்சிறப்புடன் இருந்ததாலும், மற்றவர்களை விட அவர் துடிப்பாக இருந்ததாலும் அக்கதையில் அவருக்கு அந்த புனைப்பெயர் அளிக்கப்படுகிறது.

ஜூ தைகூன் (Zoo Tycoon) மற்றும் வார்கிராஃப்ட் யூனிவர்ஸ் (Warcraft universe) ஆகியவை வெள்ளைப் புலிகளைக் குறிப்பிடும் விளையாட்டுகளாகும். மைட்டி மார்ஃபின் பவர் ரேஞ்சர்கள் மற்றும் ஜப்பானிய சூப்பர் சென்டாய் தொடர்கள் இரண்டுமே வெள்ளைப் புலியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவற்றின் அடிப்படையில் தான் பவர் ரேஞ்சர்கள் தொடர் அமைக்கப்பட்டிருந்தது. Power Rangers: Wild Force என்பதிலிருந்து எடுக்கப்பட்ட தி ஒயிட் ரேஞ்சரிலும், அதன் எதிர்பலமான சென்டாய்யும் கூட வெள்ளை புலியின் சக்திகளைக் கொண்டிருக்கிறது.

கனடாவின் ஒனடாரியோவிலுள்ள, பௌமேன்வில்லே மிருகக்காட்சிசாலையில் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு வெள்ளைப் புலி, அனிமார்ப்ஸ் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க பயன்படுத்தப்பட்டது.

குறிப்புதவிகள்[தொகு]

 1. "Panthera tigris". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் Version 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).
 2. "Wild Tiger Conservation". Save The Tiger Fund. பார்த்த நாள் 2009-03-07.
 3. லின்னேயஸ், Carolus (1758). Systema naturae per regna tria naturae:secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis.. 1 (10th ed.). Holmiae (Laurentii Salvii). p. 41. http://www.biodiversitylibrary.org/page/726936. பார்த்த நாள்: 2008-09-08. 
 4. ஷன்கலா , K.S., புலி! இந்தியப்புலியின் கதை, சைமன் & சுஸ்டர் நியுயார்க் 1977
 5. மில்ஸ், ஸ்டீபன், புலி, ஃபயர்ஃபிளை பதிப்பகம், பிபிசி புத்தகங்கள் 2004 பக்கம் 133
 6. லெஹௌசென், பால் , & ரீட், தியோடோர் H., “வெள்ளைப்புலியின் பராமரிப்பு மற்றும் இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் அசாதரணமான போக்கைக் கொண்ட விலங்கின் பூர்வீகம்” ஸ்மித்ஸோனியன், ஏப்ரல் , 1971.
 7. இதர குறிப்புகள். எண். I-A ஒரிசாவில் பெண் வெள்ளைப்புலிகள், பம்பாய் இயற்கை வரலாறு சங்கம், தொகுதி XIX நவம்பர்15,1909 பக்கம் 744 http://www.messybeast.com/genetics/tigers-white.htm
 8. ப்ராடர்,குரேடர் , பம்பாய் இயற்கை வரலாறு சங்கம், இந்திய மிருகங்களின் புத்தகம், பம்பாய் இயற்கை வரலாறு சங்கம் மற்றும் இந்தியாவின் மேற்கு பகுதி அருங்காட்சியகம், வேல்ஸ் இளவரசர், இரண்டாவது (திருத்தப்பட்டது) பதிப்பு 1965, முதல் பிரசுரம் 1948 பக்கம் 54
 9. 9.0 9.1 ஷங்கலா, K.S., புலி ! இந்தியப்புலியின் கதை, சைமன் & சுஸ்டர் நியுயார்க் 1977
 10. டண்பார் ப்ரான்டர், A.A. (ஆர்ச்சிபால்ட் அலெக்ஸாண்டர் ) மத்திய இந்தியாவில் காட்டு மிருகங்கள், லண்டன்: E. அர்னால்ட், 1923
 11. Miscellaneous Notes: எண். 1-A வெள்ளைப்புலி பிடிபட்டது (ஒரு புகைப்படத்துடன்) பம்பாய் இயற்கை வரலாறு சங்கம் இதழ், தொகுதி XX VII எண் 47, 1921 http://www.messybeast.com/genetics/tigers-white.htm
 12. 12.0 12.1 "Mutant Big Cats". Messybeast.com. பார்த்த நாள் May 28, 2009.
 13. காஹலேன்,விக்டர் H., பூனைகளின் அரசர் மற்றும் அவருடைய அமைச்சரவை, நேஷனல் ஜியாக்கிராபிக், பிப்ரவரி 1943 பக்கம். 236
 14. பெர்ரி, ரிச்சர்டு, புலிகளின் உலகம், நியூயார்க்; 1965 (c. 1964)
 15. செர்ஃபாஸ், ஜெர்மி, ஜூன் 2000 , லண்டன், பிரிட்டிஸ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேசன்1984
 16. Garhwal Himalayan Expedition, India, Delhi. "Bandhavgarh National Park, National Park in Madhya Pradesh, National Park India, National Park Tour in Madhya Pradesh". Bandhavgarhnationalpark.com. பார்த்த நாள் May 28, 2009.
 17. Cuvier, Georges (1832). The Animal Kingdomtthey can grow to as tall as. G & C & H Carvill. 
 18. Lydekker, Richard (1893). The Royal Natural History. Frederick Warne. 
 19. மெக்ஸ்கோவில் வெள்ளைப்புலிகளின் கழிவுகள் இறங்குகின்றன; சீஜ்ஃபிரைட் மற்றும் ராயின் லாஸ் வேகாஸ் சட்டம் ஜுலை 6, 2007-யின்படி பூனைகளை அளிப்பதற்கு என அறியப்பட்ட மிருகக்காட்சிசாலை http://msnbc.msn.com/id/19627911
 20. கார்பெட், ஜிம், ’’குமாவோன் நகரத்தின் மனித உண்பிகள்’’ ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அச்சகம் 1946
 21. திருமதி. போஸ்ட்டின் பரந்த உலகம், வாழ்க்கை தொகுதி 59 எண் நவம்பர் 19. 5, 1965
 22. புட்மேன், ஜான் J., "அரபிய வோல்டு இன்க்." நேஷனல் ஜியாக்ராபிக் அக்டோபர் 1975 பக்கம் 494-533 494-533

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளைப்_புலி&oldid=2260061" இருந்து மீள்விக்கப்பட்டது