இந்தியச் சிறுத்தை
இந்தியச் சிறுத்தை | |
---|---|
நாகர்ஹோளே தேசிய பூங்காவில் இந்திய சிறுத்தை (ஆண்) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பாந்தெரா
|
இனம்: | பா. பசுகா
|
துணையினம்: | பா. பா. பசுகா
|
முச்சொற் பெயரீடு | |
பாந்தெரா பார்டசு பசுகா (மெய்யர், 1794 |
இந்தியச் சிறுத்தை என்பது (Indian leopard, பாந்தெரா பார்டசு பசுகா) இந்தியத் துணைக்கண்டத்தில் பரந்து வாழும் சிறுத்தைத் துணையினமாகும். வாழிடம் இன்மை, இடப்பற்றாக்குறை, களவாடப்படல், தோலிற்காகவும் உடலுறுப்புக்களுக்காகவும் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத வர்த்தகம் போன்ற காரணங்களினால்[1] பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இச்சிறுத்தையினத்தை 2008 ஆம் ஆண்டில் அருகிய இனம் எனப் பட்டியல்ப்படுத்தியுள்ளது.
ஆசியச் சிங்கம், வங்கப்புலி, பனிச்சிறுத்தை, படைச்சிறுத்தை ஆகியவற்றுடன் இந்தியச் சிறுத்தையும் இந்தியாவில் காணப்படும் ஐந்து பெரிய பூனைகளுள் ஒன்றாகும்.
அழிவுகள்
[தொகு]வனவிலங்கு வர்த்தகம் இந்தியச் சிறுத்தைகளின் இருப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றது.[2] இவ்விந்தியச் சிறுத்தைகளின் தோல் மற்றும் சில உடல் உறுப்புக்கள் இந்தியாவிலிருந்து நேபாளம், சீனா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. இவ்வாறு களவாடப்படும் இந்தியச் சிறுத்தைகள் பற்றிய விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
- இந்தியாவில் 1994 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை 2845 சிறுத்தைகள் களவாடப்பட்டுள்ளன.[3][4][5][6][7]
- நேபாளத்தில் 2002 ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் 2008 ஆம் ஆண்டு மே மாதம் வரை 243 சிறுத்தைகள் களவாடப்பட்டுள்ளன.[8][9][10]
- சீனா மற்றும் திபெத்இல் 1999 ஆம் ஆண்டு சூலை மாதம் தொடக்கம் 2005 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை 774 சிறுத்தைகள் களவாடப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Henschel, P., Hunter, L., Breitenmoser, U., Purchase, N., Packer, C., Khorozyan, I., Bauer, H., Marker, L., Sogbohossou, E., Breitenmoser-Würsten, C. (2008). "Panthera pardus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ Nowell, K., Jackson, P. (1996). Wild Cats: status survey and conservation action plan.[தொடர்பிழந்த இணைப்பு] IUCN/SSC Cat Specialist Group, Gland, Switzerland.
- ↑ Wildlife Trust of India (2008). Leopard skin traders arrested in UP; eight skins recovered. Wildlife Trust of India, 29 July.
- ↑ Ghosh, A. (2008). 27 leopard skins seized in 45 days. Wildlife Protection Society of India.
- ↑ The Hindu (2008). Leopard skin, other wildlife products seized; five held.
- ↑ Wildlife Protection Society of India (2009). Leopard Skins Seized in Dehradun, 18 March 2009.
- ↑ The Indian Express Limited (2010). 4 with leopard hide held, role of politician to be probed, 12 October 2010.
- ↑ Aryal, R. S. (2009). CITES : Implementation in Nepal and India, Law, Policy and Practice. Second edition (PDF). Bhrikuti Academic Publications, Kathmandu. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 99933-673-3-8.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Yonzon, P. (2008). Conservation of Tigers in Nepal 2007. Wildlife Conservation Nepal
- ↑ Wildlife Trust of India (2008). Cross-border wildlife traders arrested in Nepal with WTI’s help. Wildlife Trust of India, 12 May.