படைச்சிறுத்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெரிய புள்ளிச் சிறுத்தை
Clouded leopard [1]
Clouded leopard.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: பூனைக் குடும்பம்
துணைக்குடும்பம்: Pantherinae
பேரினம்: Neofelis
இனம்: N. nebulosa
இருசொற் பெயரீடு
Neofelis nebulosa
(Griffith, 1821)
Clouded Leopard area.png
பெரிய புள்ளிச் சிறுத்தை காணப்படும் இடங்கள்
வேறு பெயர்கள்

Felis macrocelis
Felis marmota

பெரிய புள்ளிச் சிறுத்தை அல்லது படைச்சிறுத்தை (clouded leopard) என்பது பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. இமயமலை அடிவாரப் பகுதியில் இருந்து சீனாவரை உள்ளது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இவ்விலங்கை அழியவாய்புள்ள இனமாக 2008 ஆம் ஆண்டு அறிவித்தது. இதன் மொத்த எண்ணிக்கை 1,0000 என்ற எண்ணிக்கையில் இருந்து மிக வேகமாக குறைந்து வருவதாக கருதப்படுகிறது. இருந்த இவற்றின் எண்ணிக்கை 1000வரை குறைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது..[2] இவை பெரிய பூனைகள் மற்றும் சிறிய பூனைகள் இனம் ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக கருதப்படுகிறது[3] இது பெரிய பூனைகளை சிறிது ஒத்துள்ளதது ஆனால் சிறுத்தையுடன் நெருக்கமான தொடர்பு இல்லை. [4] இவ்விலங்கு மேகாலயத்தின் மாநில விலங்காகும்.

பண்புகள்[தொகு]

பெரிய புள்ளிச் சிறுத்தையின் முகம்

சாதாரண சிறுத்தையைவிட இந்த சிறுத்தை அளவில் சிறியதாகும். இவற்றின் வால் மிக நீண்டு இருக்கும். உடலில் கருமையான வட்டப்பட்டைகளும், பட்டைகளுக்கு இடையே மங்கலான இடைவெளியும் இருப்பதால் இது இப்பெயர் பெற்றது. இதன் தலையில் புள்ளிகளும், முகத்தில் பட்டைகளும் காணப்படும். வயிற்றிலும், கால்களிலும் முட்டைவடிவ பெரிய கரிய புள்ளிகளும், வாலில் சாம்பல் நிற வளையங்களும் இருக்கும்.பெண் விலங்கு ஆணைவிட சற்று சிறியதாக இருக்கும்.[4] இந்த சிறுத்தைப்புலியின் எடை 11.5 இல் இருந்து 23 கிலோ (25 மற்றும் 51 பவுண்ட்) இருக்கும். பெண் சிறுத்தைகள் தலை முதல் உடல் வரை 68.6 - 94 செமீ (27.0 to 37.0 அங்குலம்) நீளமும் வால் 61 82 செமீ (24 32 அங்குலம்) நீளம் கொண்டது. ஆண் சிறுத்தைகள் தலையில் இருந்து உடல்வரை நீளம் 81இல் இருந்து 108 செ.மீ (32-43 அங்குலம்) (43 32) நீளமும் வால் 74 முதல் 91 செமீ (29 - 36 அங்குலம்) நீளம் கொண்டது.[5] இவற்றின் தோள் உயரம் 50 இல் இருந்து 55 செமீ (20 to 22 அங்குலம்) வரை வேறுபடுகிறது. [6] இந்த சிறுத்தைப்புலிகள் 1860 க்கு பிறகு நேபாளத்தில் அழிந்து விட்டதாக கருதப்பட்டது. ஆனால் 1987 மற்றும் 1988 ல், நான்கு சிறுத்தைகள் நாட்டின் மத்திய பகுதியா சிட்வான் தேசிய பூங்கா மற்றும் போகற பள்ளத்தாக்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்புக்குப் பின் அவை இந்த மிதவெப்ப மண்டல காட்டில் வளர்த்து இனப்பெருக்கம் செய்ய வழிவகை செய்ததால், இவை மேற்கே தங்கள் இனத்தை பெருக்கி எல்லைகளை விரிவாக்கிக் கொண்டது. [7] தற்போது இவற்றில் மூன்று கிளையினங்கள் உள்ளதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. வார்ப்புரு:MSW3 Carnivora
  2. 2.0 2.1 "Neofelis nebulosa". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2015.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Hemmer1968 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. 4.0 4.1 Pocock, R.I. (1939). The Fauna of British India, including Ceylon and Burma. Mammalia. – Volume 1. Taylor and Francis, Ltd., London. Pp 247–253
  5. Sunquist, M.; Sunquist, F. (2002). Wild cats of the World. Chicago: University of Chicago Press. பக். 278–284. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-226-77999-8. 
  6. Clouded leopard SSP (2000). Clouded leopard (Neofelis nebulosa) Husbandry Guidelines. American Zoo and Aquarium Association.
  7. Dinerstein, E. and J. N. Mehta (1989). The clouded leopard in Nepal. Oryx 23(4): 199–201.
  8. Sunquist, M. E., Sunquist, F. (2009). Family Felidae (Cats) In: Wilson, D. E., Mittermeier, R. A. (eds.) Handbook of the Mammals of the World - Volume 1 Carnivores. Lynx Edicions in association with Conservation International and IUCN. ISBN 978-84-96553-49-1


"https://ta.wikipedia.org/w/index.php?title=படைச்சிறுத்தை&oldid=2697641" இருந்து மீள்விக்கப்பட்டது