விஜயநகரப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விசயநகரப் பேரரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விஜயநகரப் பேரரசு
ವಿಜಯನಗರ ಸಾಮ್ರಾಜ್ಯ / విజయనగర సామ్రాజ్యము

 

 

1336–1646
விஜயநகரப் பேரரசின் எல்லை, கி.பி. 1446, 1520
தலைநகரம் விஜயநகரம்
மொழி(கள்) கன்னடம், தெலுங்கு
சமயம் இந்து
அரசாங்கம் முடியாட்சி
அரசர்
 -  1336–1356 ஹரிஹர ராயர் I
 -  1642–1646 ஸ்ரீரங்கா III
வரலாறு
 -  உருவாக்கம் 1336
 -  முதற் பதிவு 1343
 -  குலைவு 1646
முந்தையது
பின்னையது
போசளப் பேரரசு
காகதீய மரபு
பாண்டியர்
மைசூர் அரசு
கேளாடி நாயக்கர்
தஞ்சை நாயக்கர்
மதுரை நாயக்கர்
சித்திரதுர்க்க நாயக்கர்

விஜயநகரப் பேரரசு இந்தியாவின் தக்காணப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பேரரசு ஆகும். இது 1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் அவரது சகோதரரான முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப் பேரரசு 1646 வரையில் நீடித்ததாயினும், 1565 ஆம் ஆண்டில் தக்காணத்துச் சுல்தான்களால் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் இப் பேரரசு பெரிதும் வலுவிழந்து போனது. இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. இந் நகரின் அழிபாடுகள் இன்றைய இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஹம்பியைச் சுற்றிலும் காணப்படுகின்றன. மத்தியகால ஐரோப்பியப் பயணிகளான டொமிங்கோ பயஸ் (Domingo Paes), பெர்னாவோ நுனிஸ் (Fernao Nuniz), நிக்கோலோ டா கொன்ட்டி (Niccolò Da Conti) ஆகியோரது ஆக்கங்களிலிருந்தும், உள்ளூர் இலக்கிய மூலங்களில் இருந்தும் இதன் வரலாறு பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. இப்பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளும் விஜயநகரப் பேரரசின் வலு மற்றும் வளம் குறித்த பல தகவல்களைத் தருகின்றன.

இப் பேரரசு தொடர்பான நினைவுச் சின்னங்கள் பல தென்னிந்தியா முழுவதும் பரவலாக உள்ளன. இவற்றுள் ஹம்பியில் உள்ளவை பெரிதும் புகழ் பெற்றவை. விஜயநகரக் கட்டிடக்கலைப் பாணி தென்னிந்தியக் கட்டிடக்கலையின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். பல பல நம்பிக்கைகள் மற்றும் நாட்டார் மரபுகளின் தொடர்புகள், இந்துக் கோயில் கட்டுமானங்களில் புதுமைகளைப் புகுத்தியது. இது முதலில் தக்காணத்திலும் பின்னர் திராவிடக் கட்டிடக்கலையிலும் ஏற்பட்டது. சமயச் சார்பற்ற கட்டிடங்களில் வட தக்காணத்துச் சுல்தானகக் கட்டிடக்கலையின் தாக்கங்கள் காணப்படுகின்றன.

விஜயநகர சாம்ராஜ்யத்தில் கோயில் சொத்துக்களைக் கொள்ளையடிப்போருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.[1]

வித்யாரண்ய தீர்த்தர்[தொகு]

விஜயநகரப் பேரரசுக்கு, ஹரிஹரர் மற்றும் புக்கராயர், ஆச்சாரியர் வித்யாரண்ய தீர்த்தர் பெயரை வைக்க விரும்பி ’வித்யாரண்ய நகரம்’ என்று பெயர் சூட்ட, துறவியான வித்யாரண்யரோ அதனை ’விஜய நகரம்’ என மாற்றியமைத்தார். 1336 ஆம் ஆண்டின் தாமிர பட்டயம் விஜயநகர சாம்ராஜ்யம் அமைந்ததில் வித்யாரண்ய தீர்த்தரின் முக்கிய பங்கைக் கூறுகின்றது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 குமுதம் ஜோதிடம்; 3.1.2014; பக்கம் 2
  2. http://www.sringeri.net/jagadgurus/sri-vidyaranya/the-vijayanagara-empire
பிழை காட்டு: Invalid <ref> tag; name ".E0.AE.95.E0.AF.8B.E0.AE.AF.E0.AE.BF.E0.AE.B2.E0.AF.8D" defined multiple times with different content
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயநகரப்_பேரரசு&oldid=1827459" இருந்து மீள்விக்கப்பட்டது