காம்பிலி இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காம்பிலி ஆட்சியாளர்கள் ஹேமகூட மலையில் கட்டிய சிவன் கோயில்

காம்பிலி இராச்சியம் ( Kampili kingdom) இந்தியாவின் தக்காண பீடபூமியில் தற்கால கர்நாடகா மாநிலத்தின் துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. இவ்விராச்சியம் 14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தக்காண பீடபூமியில் குறுகியகாலமே ஆட்சி செலுத்தியது. [1][2] கர்நாடகா மாநிலத்தின் வடகிழக்கில், மகாராட்டிரா மாநில எல்லையில், துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைந்த குல்பர்கா பகுதிகளை ஆண்டது. [2]

1327/1328களில் தில்லி சுல்தானகத்துப் படையெடுப்புகளால், காம்பிலி இராச்சியம் மறைந்தது. [3][4]காம்பிலி இராச்சியத்தின் அழிவால், தக்காணத்தில் இந்து சமய விசயநகரப் பேரரசு உருவாக காரணமாயிற்று.[5]

வரலாறு[தொகு]

1294ல் தேவகிரி யாதவப் பேரரசை, தில்லி சுல்தானின் படைகள் தாக்கி சிதைத்த போது, ஹொய்சாளப் பேரரசின் படைத்தலவர்களில் ஒருவரான மூன்றாம் சிக்கையா நாயக்கர் (1280–1300) காம்பிலி இராச்சியத்தை நிறுவினார்.

1300ல் மூன்றாம் சிக்கையா நாயக்கரின் மகன் காம்பிலி தேவன், எல்லைப் பிணக்குகளால் தில்லி சுல்தான் படைகளுடன் மோதியதால், கிபி 1327/1328ல், முகமது பின் துக்ளக்கின் படைகள் காம்பிலி இராச்சித்தை கைப்பற்றியதுடன், காம்பிலித் தேவனின் தலை கொய்யப்பட்டது.[1][3] காம்பிலி இராச்சியத்தின் அழிவிலிருந்து கிபி 1336ல் விசயநகரப் பேரரசு எழுச்சி கொண்டு, தென்னிந்தியாவை 200 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டது. தென்னிந்தியாவில் தில்லி முகமதியர்களின் படையெடுப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டது. [1][5]

படக்காட்சியகம்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்பிலி_இராச்சியம்&oldid=2480667" இலிருந்து மீள்விக்கப்பட்டது