நாட்டார் கட்டிடக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாஸ்கோ வில்லா குடிசை, விக்டோரியன் அல்ப்ஸ், ஆஸ்திரேலியா

நாட்டார் கட்டிடக்கலை என்பது, உள்ளூரில் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி, அவ்விடத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் அவர்களாலேயே வளர்த்தெடுக்கப்பட்ட கட்டிடக்கலையாகும். மக்களின் தேவைகளையொட்டி வேண்டிய மாற்றங்களை உள்வாங்கி நீண்டகாலம் படிப்படியாக வளர்ந்துவருகின்ற காரணத்தினால், இக் கட்டிடங்கள் அப்பகுதியின், சூழல், பண்பாடு மற்றும் வரலாற்று சூழ்நிலைகளைப் பிரதிபலிப்பதாக அமைகின்றன. ஒரு காலத்தில், திருத்தமற்ற, மேம்பாடு அடையாத கட்டிடங்களாக ஆய்வாளர்களால் புறக்கணிக்கப்பட்ட இவை, இன்று பல ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

கட்டிடக்கலை வரலாற்றில், உயர் பண்பாட்டுக்குரிய கட்டிடக்கலை மற்றும் பிற நாட்டார் கட்டடக்கலை அல்லாத வடிவங்களில் இருந்து நாட்டார் கட்டிடக்கலையை இலகுவில் வேறுபடுத்தி வரையறுக்க முடியும். உயர் பண்பாட்டுக்குரிய கட்டிடக்கலை மக்களின் தேவைகளையும் அவர்கள் பண்பாட்டையும் நேரடியாக வெளிப்படுத்துவதில்லை. பொதுவாகக் கட்டுவிப்பவரின் வளத்தையும் வலுவையும் எடுத்துக்காட்டுவது அல்லது, வடிவமைப்பாளருடைய திறமையைக் காட்டுவதே அவ்வாறான கட்டிடக்கலையில் முக்கிய நோக்கமாக இருக்கும்.[1] இங்கே பரந்த மக்கள் கூட்டத்தின் பண்பாடு வெளிப்படுவதில்லை. மாறாக நாட்டுப்புறக் கட்டிடக்கலை நேரடியான மக்கள் பண்பாட்டின் வெளிப்பாடாக இருக்கிறது. இது மக்களுடைய தேவைகள், கனவுகள், பண்பாட்டுப் பெறுமானங்கள், வாழ்க்கை முறைகள், உலக நோக்கு என்பவற்றுக்குக் கொடுக்கப்பட்ட பொருண்ம (physical) உருவம் ஆகும்.

நாட்டார் கட்டிடக்கலை பெரும்பாலும் வீடுகளையும் அவற்றோடொத்த கட்டிடங்களையுமே உள்ளடக்குகிறது. பெரிய கோயில்கள், அரண்மனைகள் போன்றவற்றையும் உள்ளடக்கும் மரபுவழிக் கட்டிடக்கலை இதனிலும் வேறுபட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

எடுத்துக்காட்டுப் படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Paul Oliver (2003). Dwellings. London: Phaidon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7148-4202-8. 

வெளியிணைப்புகள்[தொகு]