உள்ளடக்கத்துக்குச் செல்

மரம் (கட்டிடப் பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேலும் செயல் முறைகளுக்கு உட்படுத்துமுன், மரக்குற்றிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

பெரிய, பல்லாண்டுத் தாவர வகைகளுள் ஒரு வகை மரம் எனப்படுகிறது. முதிர்ந்த மரங்கள் குற்றிகளாகவோ (logs), அறுக்கப்பட்டுப் பலகைகள், அல்லது வேறு வடிவிலோ மிகப் பழங்காலம் முதலே கட்டிடங்கள் மற்றும் அமைப்புக்களை உருவாக்குவதற்காகப் பயன்பட்டு வருகின்றன. உயிருடனிருக்கும் மரவகையைச் சேர்ந்த தாவரத்தைக் குறிக்கவும், வெட்டப்பட்டுக் கட்டிடங்களில் பயன்படுத்துவதற்காகத் தயார் செய்யப்பட்ட கட்டிடப் பொருளைக் குறிக்கவும், மரம் என்ற ஒரே சொல்லே வழக்கில் உள்ளது. மரம் (கட்டிடப் பொருள்) எனும் இக் கட்டுரை, மரத்தைக் கட்டிடப் பொருளாக எடுத்து விளக்குகிறது.

கட்டிடப் பொருளாக மரத்தின் வரலாறு

[தொகு]

மரம், விரைவில் அழிந்து விடக்கூடிய ஒரு பொருள். மரத்தினால் கட்டப்பட்ட கட்டிடங்கள் நீண்ட காலம் நிலைத்திருப்பது சாத்தியமில்லை. இதன் காரணமாக மிகப் பழையகால மரக் கட்டிடங்கள் எதுவும் இன்றுவரை நிலைத்திருக்கவில்லை. எனினும், தொல்பொருளாய்வு, இலக்கியம், மற்றும் பழங்காலக் கட்டிடக்கலை எழுத்தாக்கங்கள் என்பவற்றினூடாக, பல ஆயிரம் ஆண்டுகளாகவே மரம் கட்டிடப் பொருளாகப் பயன்பட்டுவருவதை அறிய முடிகின்றது.

அரிந்து அடுக்கப்பட்டுள்ள மரங்கள்

ஆரம்பகாலத்தில் மரம், குற்றிகளாகச் செப்பனிடப்படாத வடிவிலேயே பயன்படுத்தப்பட்டன. காலப் போக்கில், ஒழுங்கான வடிவத்திலும், தேவையான அளவுகளிலும் மரங்களை அரிந்து பயன்படுத்தும் தொழில் நுட்பங்கள் உருவாயின. மரம் ஒரு சிறந்த கட்டிடப் பொருளாயினும், அது தொடர்பிலும் சில வரையறைகள் உள்ளன. தொழில்நுட்ப ரீதியான வரையறைகள், பொருளாதார ரீதியான வரையறைகள், சூழலியல் தொடர்பான வரையறைகள், என்பவற்றினால் விளையக்கூடிய பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சியில், செய்முறை மர உற்பத்திகள் (processed wood products) விருத்தி செய்யப்பட்டன. ஒட்டுப்பலகை (plywood), நார்ப்பலகை (fibre board), சிம்புப்பலகை (chip board) என்பன இவற்றுட் சில. அண்மைக் காலங்களில், அடுக்குத்தகட்டு மரக் கட்டுமானக் கூறுகள் (laminated wood components) பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரம்_(கட்டிடப்_பொருள்)&oldid=3924119" இலிருந்து மீள்விக்கப்பட்டது