இரண்டாம் ஹரிஹர ராயன்
விஜயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
இரண்டாம் ஹரிஹர ராயன் (கி.பி. 1377-1404), விஜயநகரப் பேரரசை ஆண்ட பேரரசர்களில் ஒருவன். இவன் அப் பேரரசின் மூன்றாவது அரசனாவான். விஜயநகரத்தின் முதல் அரச மரபான சங்கம மரபைச் சேர்ந்தவன். விஜயநகரப் பேரரசை உருவாக்கிய சகோதரர்களில் இளையவனான புக்கா ராயன் இறந்த பின்னர் இரண்டாம் ஹரிஹரன் ஆட்சிக்கு வந்தான்.[1]
இவன் தனது ஆட்சிக்காலத்தில், தனது நாட்டின் எல்லைகளைத் தொடர்ந்து விரிவாக்கி வந்தான். நெல்லூருக்கும் கலிங்கத்துக்கும் இடைப்பட்ட ஆந்திராவின் கரையோரப் பகுதிகளின் கட்டுப்பாட்டுக்காகக் கொண்டவிடு ரெட்டிகளுடன் போரிட்டான். ஹரிஹரன் அவர்களிடமிருந்து, அட்டாங்கி, ஸ்ரீசைலம் ஆகிய பகுதிகளையும், கிருஷ்ணா ஆற்றுக்குத் தெற்கே குடாநாட்டுப் பகுதியிலிருந்த பெரும்பாலான நிலப்பரப்பையும் கைப்பற்றிக் கொண்டான். இது பின்னர் தெலங்கானாவில் ராச்சகொண்டாவின் வேளமாக்களுடனும் போரிடுவதில் முடிந்தது. 1378 இல் முஜாஹித் பஹ்மானி இறந்ததைச் சாதகமாகப் பயன்படுத்தி, வடமேற்குப் பக்கமாகத் தனது கட்டுப்பாட்டை விரிவாக்கிய ஹரிஹரன், கோவா, சாவுல் (Chaul), டாபோல் (Dabhol) ஆகிய துறைமுகப்பகுதிகளைக் கைப்பற்றினான்.
இன்று ஹம்பி என்று பரவலாக அறியப்படும் முன்னைய விஜயநகர அழிபாட்டுப் பகுதியில் இரண்டாம் ஹரிஹரனுடைய அரண்மனை என்று நம்பப்படும் கட்டிடத்தின் அழிபாடுகளையும் காணலாம்.